திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

திருச்சூரில் பூரம் விழா!

திருச்சூரில் பூரம் விழா!

விகடன் பொக்கிஷம்
திருச்சூரில் பூரம் விழா!
திருச்சூரில் பூரம் விழா!
திருச்சூரில் பூரம் விழா!
 
திருச்சூரில் பூரம் விழா!
திருச்சூரில் பூரம் விழா!

தினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த சத்தன் தம்பு ரான் என்பவர் தம் 18-வது வயதில், அரச பதவியில் அமர்ந்தார். 32-வது வயதில், 'ஆண்டது போதும்' என்று எமன் அவரை அழைத்துச் சென்றுவிட்டான்.

திருச்சூரில் பூரம் விழா!

இன்று மக்கள் கடல்போல் விளங்கும் திருச்சூர் நகருக்கு மத்தியில் இருக்கும் வடக்கு நாதன் கோயில், முன்பு ஒரே காடாக இருந்ததாம். கொலைக்குற்றம் செய்தவனுக்கு மரண தண்டனைக்குப் பதில், அவனை அந்தக் காட்டுக்குள் தள்ளி, தண்டனையை அனுபவிக்க விடுவது உண்டாம். அதிலிருந்து தப்புவது யானை வாயில் அகப் பட்ட கரும்பு மாதிரிதானாம் (அந்தக் காட்டில் அப்போது யானையும் உண்டு.).

காடாக இருந்த இடத்தைப் பின்னாளில் கண் கவரும் நகர மாக்கியது அரசன் சத்தன் தம்பு ரான்தான்.

அந்த வடக்குநாதன் கோயிலின் தென்புறத்தில்தான் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூர நட்சத்திரம் அன்று, திருவிழா 'ஜே ஜே' என்று நடக்கிறது.

திருச்சூரில் விழா நடப்பதற்கு முன்பு, அதாவது 100 வருடங்க ளுக்கு முன்பு வரை ஆண்டு தோறும் இறிஞல்குடாவுக்கு அருகில் உள்ள 'ஆராட்டுப்புழை' என்ற இடத்தில், கேரளத்தின் நாலா பக்கத்திலுள்ள கோயில்களி லிருந்தும் ஆண்டவன் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று எழுந்தருளும் விழா, வேடிக்கையா கவே நடக்கும். அப்படி நடந்து வந்த விழாவிற்குத் திருச்சூரில் உள்ள திருவம்பாடி கோயிலிலிருந் தும், பார்மேகா கோயிலிலிருந்தும் அம்மன், 10, 12 யானைகளுக்குப் பின்னால் செல்வது உண்டு. ஒரு வருஷம் உற்சவத்தின்போது கடு மையாக மழை பெய்யவே, ஊர் ஒரே வெள்ளக் காடாக ஆகி விட்டது. முடிவு? சுவாமி புறப்படவில்லை.

மறுநாள்தான் மழை ஓய்ந்தது. ஆனால், ஊரில் உள்ள மக்களின் பேச்சு மட்டும் ஓயவில்லை. ''இப்படி அபசகுனம் மாதிரி மழை கொட்டு கொட்டு என்று கொட்டி, உற்சவத்தை நடத்த முடியாமல் செய்துவிட்டதே! அடுத்த வருஷம் (சித்திரை பிறந்தால் புது வருஷம்தானே!) என்ன என்ன கெடுதல்கள் நேருமோ!'' என்று பயந்து பயந்து பேசிக் கொண்டிருந்தது மன்னன் சத்தன் தம்புரான் காதில் விழவே, ''சரி, இனி ஆராட்டுப் புழாவுக்குப் போக வேண்டாம். சித்திரை பிறந்ததும், விழாவை இங்கேயே நடத்துவது'' என்று முடிவு செய்தார். எந்த நாளில் நடத்துவது என்று ஊர் கூடி முடிவு செய்ததில், அன்னையின் நட்சத்திரமான பூர நட்சத்திரத்தில் (தமிழ்நாட் டில் ஸ்ரீஆண்டாளுக்குக்கூடப் பூரம்தான்) நடத்துவது என்று முடிவு செய்து, அது முதல் சித் திரை மாதம், பூர நட்சத்திரம் அன்று திருச்சூரில் நடத்துகிறார் கள்.

பூரம் அன்று காலை 5 மணிக்கு 'பஞ்ச வாத்தியம்' முழங்க ஆரம் பித்தால், இரவு மணி 3 வரை கொட்டுச் சத்தத்தைக் கடவுளே வந்து 'நிறுத்து' என்று சொன்னா லும் நிறுத்த மாட்டார்கள். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் ஒரே முழக்கமாகவே இருக்கும்.

இந்தக் கொட்டைக் கேட்கப் பசி, தாகம், தூக்கம் எல்லாவற்றையும் மறந்த நிலையில் ரசிப்பவர்கள் ஏராளம், ஏராளம்!

திருச்சூரில் பூரம் விழா!

இரவு மணி 3 அடித்து ஓய்ந்த வுடன், வாண வேடிக்கை ஆரம்ப மாகிவிடும். சுமார் 180 நிமிஷங்கள் இடைவிடாது வாண வேடிக்கை நடக்கும். மேலே பார்த்துப் பார்த்து, கழுத்து சுளுக்கிக் கொள்ளும். விழா முடிந்து மூன்று நாள் ஆன பிறகும்கூட, காதில் ஏதோ ஒலிப் பதுபோல் இருக்கும். வெடி வெடிக்கும்போது பூமியே ஆடுவது போல் இருக்கும்.

மாலை 5 மணிக்கு பார்மேகா கோயில் யானை பதினைந்தும், திருவம்பாடி கோயில் யானை பதினைந்தும் எதிரும்புதிருமாக எழுந்தருளி, குடை மாற்றம் நடக்கும். எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனை வண்ணங்களி லும் குடை மாற்றம் நடக்கும். இதைப் பார்ப்பவர்கள் ஒவ்வொரு வரும் வருத்தப்படுவார்கள். கார ணம்..? பார்க்கப் பதினாயிரம் கண்கள் இல்லையே என்றுதான்!

இந்த வருடம் பார்க்க வந்தவர்களிடையே, கூட்டத்தோடு கூட்ட மாக நின்று பார்த்தார் கேரள முதல் அமைச்சர் திரு. ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.

சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு வந்திருந்த கூட்டம் அதிகம் என்கிறார்கள். சான்று? சாதாரண நாட்களில் ஓட்டல்களில் பஞ்ஞசாரா (ஜீனி) போட்ட காபி, கள்ளிச் சொட்டாக இருக் கும்.ஆனால், பூரத்தன்று வெல்லம் போட்ட காபி ஒரே வெள்ளமா கத்தான் இருந்தது. வந்தவர் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் பேராம்.

 
திருச்சூரில் பூரம் விழா!
-பூரம் விழாவிற்குச் சென்று செய்தி சேகரித்தவர்: அன்பு
திருச்சூரில் பூரம் விழா!