திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்

விகடன் பொக்கிஷம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
 
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

தா மங்கேஷ்கர் சினிமாவில் பாட வந்து 25 ஆண்டுகள் ஆவதையட்டி, அவரது நெருங்கிய நண் பரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 30.4.1967 இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

எங்கள் குடும்பத்தில் ஒருவர்!
சிவாஜி கணேசன் கூறுகிறார்:

காலப் பெட்டகம்

இருபத்துநான்கு மணி நேரத் தில் குறைந்தது 20 மணி நேரமா வது எனது அன்புச் சகோதரி லதா மங்கேஷ்கரின் குரலை ரேடியோ வில் கேட்டு ரசிக்கலாம்! ஏதாவது ஒரு நிலையத்தில் அவரது குயிலிசை ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

பல்லாயிரக்கணக்கான பாட்டுக்களைப் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள லதா, 25 வருடங்களாக இந்தி சினிமா இசைத் துறையின் இணையில்லாப் பேரரசி யாகத் திகழ்வது வரலாறு கண்டிராத பெரும் சாதனை!

இசையின் மூலம் பாரத மக்களின் இதயங்களில் நிரந்தரமான இடத்தைப் பெற்றுவிட்ட இந்தக் குரல் மேதைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நினைத்துப் பூரிப்பும் பெருமிதமும் அடைகிறேன். நாங் கள் எப்போது பம்பாய் சென்றா லும் லதாவின் வீட்டில்தான் தங்கு வோம். லதா சென்னைக்கு வரும் போதெல்லாம் எங்கள் வீட்டில்தான் தங்குவார். அவர் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் போதும், வீடே குதூகலத்தில் மூழ்கிவிடும்.

வீட்டில் இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருக்கும்போதே லதா பாடிக்கொண்டிருப்பார். அதை நான் கேட்டு ரசிப்பேன். சில சம யங்களில் அவர் பாட, எங்கள் வீட் டுக் குழந்தைகள் டான்ஸ் ஆட, வீட்டில் பெரிய கலா நிகழ்ச்சியே நடைபெறும். லதாவிற்குத் தமிழ் பேசவும் எழுதவும் சிறிது பயிற்சி உண்டு. நாம் தமிழில் பேசினால், புரிந்துகொண்டுவிடுவார்.

தன் புகழ், செல்வம் எல்லாவற் றையும் மறந்து எல்லோருடனும் எளிமையாகப் பழகும் சுபாவம் லதாவிடம் உண்டு. இளகிய மனம் படைத்தவர். ஒரு சிறிய குருவிக்குக் கூடத் தீங்கு நினைக்கமாட்டார்.

என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியை இங்கு கூற விரும்புகிறேன். எனக்கு அசைவ உணவு என்றால் கொஞ்சம் விருப் பம் உண்டு. அதற்காக ஊரிலிருந்து 40, 50 குயில்களைப் பிடித்து வரச் சொன்னேன். அச்சமயம் எங்களுடன் தங்கியிருந்த லதா, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குயில்களைப் பார்த்து என்னிடம், ''இந்தக் குயில்களை எதற்காகக் கூட்டில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். ''இதென்ன கேள்வி, சாப்பிடுவதற்காகத்தான்!'' என்றேன் நான். அவ்வளவுதான்! லதாவிற்கு அழுகையே வந்துவிட்டது. அவற்றைச் சுதந்திரமாகப் பறக்கவிடும்படி என் னிடம் மன்றாடினார்.

இசைக் குயிலுக்கு அசல் குயி லின் மீது அளவு கடந்த அன்பு இருப்பது நியாயம்தானே? குயில்களை வெளியே விட்டுவிடும்படி உத்தரவிட்டேன். அன்று முதல் நான், 'குயில் கறி சாப்பிடப்போவதில்லை' என்று சத்தியம் செய்துவிட்டேன்.

காலப் பெட்டகம்

அந்த இரண்டு மூன்று நாட்கள் வீடு பூராவும் சுதந்திரமாக அவிழ்த்து விடப்பட்ட குயில்களின் இசையும், நடமாடும் குயிலான லதாவின் பாட்டும்தான் எதிரொலித்துக் கொண்டிருந்தன. லதா, என் உடன் பிறவா அன்புத் தங்கை. வருடத்தில் எது தவறினாலும் 'ராக்கி' பண்டிகை யின்போது எனக்கு 'ராக்கி' அனுப் பாமல் இருக்கவேமாட்டார். அதற்கு 'ரட்சா பந்தன்' என்று பெயர்.

'என் வாழ்விற்கும் தாழ்விற்கும் சகோதரனான நீதான் பொறுப்பு' என்று சகோதரனின் கையில் சகோதரி கட்டும் ஒரு நோன்புக் கயிறு அது. அன்புடன் நானும் என் தங்கை அனுப்பிய அந்த ராக்கியைப் பல நாட்கள் கையிலேயே கட்டிக்கொண்டிருப்பேன்.

தீபாவளிப் பண்டிகைக்கு இங்கி ருந்து என் தாயார், லதாவிற்குப் பரிசுப் பொருட்களை வாங்கி அனுப் புவார். அதே போல் அங்கிருந்து எங்கள் வீட்டிற்கும் நிறையப் பரிசுகள் வரும்.

லதாவின் இசைப் பணியின் வெள்ளி விழா கொண்டாடப்படும் இச்சமயத்தில், 'ஆனந்த விகடன்' மூலமாக என் குடும்பத்தினரின் வாழ்த்துக்களை அவருக்குத் தெரி வித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கமலா கணேசன் கூறுகிறார்:

முதல் சந்திப்பிலேயே என் மாமியாரின் அன்பையும் மதிப்பையும் பெற்றுவிட்டவர் லதா. என் கணவரும் என் மாமியாரும் என் நாத்தனாரிடம் எத்தனை அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்களோ, அதே அளவு அன்பும் பாசமும் லதாவிடமும் கொண்டிருக்கிறார்கள். லதா எங்கள் வீட்டில் வந்து தங்கும்போது சாதாரண விசிட்டர் மாதிரியோ, விருந்தாளி மாதிரியோ நடந்துகொள்ள மாட்டார். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து, மகிழ்ச்சியுடன் நாட்களைக் கழித்து விட்டுப் போவார்.

லதாவின் இசைத் திறமையும் குரலினிமையும் கற்பனைக்கே எட்டாத ஒரு சாதனையாகும். லதாவுக்குக் கடவுள்மீது மிகவும் பக்தி உண்டு. அதற்கேற்ப கடவுளுடைய அருளும் லதாவுக்கு நிரம்ப உண்டு. லதா என்னை 'அண்ணி' என்று தான் அழைப்பார். ஆனால், நான் லதாவை 'லதா' என்று அழைப்பது கிடையாது. எப்போதும் சாந்தமும் சிரிப்பும் குடிகொண்டிருக்கும் லதா வைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கலைவாணியின் நினைவு தான் வரும். அதனால் நான் லதாவை 'சரஸ்வதி' என்றே அழைப்பேன்.

லதா பேசும் தமிழ் எனக்கு மட்டும்தான் புரியும். நான் பேசும் ஹிந்தி, லதாவிற்கு மட்டுமே புரியும். ஒரு சமயம், லதாவும் நானும் காரில் பாந்த்தியன் ரோடில் போய்க்கொண்டிருந்தோம். அப் போது நடிகர் பாலாஜி வீட்டைக் காட்டி, என் அரைகுறை இந்தியில், 'இதுதான் பாலாஜி மந்திர்' என்று சொல்லிவிட்டேன். (இந்தியில் 'கர்' என்றால் வீடு. அந்த வார்த்தை எனக்கு அப்போது நினைவுக்கு வராததால் 'மந்திர்', அதாவது கோயில் என்று சொல்லிவிட்டேன்.) குறும்புக்கார லதா, உடனே அந்தப் பக்கம் திரும்பி, கோயிலைக் கண்டதுபோல் பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

இங்கு வந்து தங்கும்போது லதா மிகவும் விரும்பிச் சாப்பிடுவது 'முறுகல் தோசை'. பம்பாய் போகும் போது கைத்தறிச் சேலைகள்தான் வாங்கிக்கொண்டு போவார். நான் விபூதி பூசித்தான் பொட்டுவைத்துக் கொள்வேன். என்னைப் பார்த்து விட்டு, அதே போல் லதாவும் விபூதி பூசி, பொட்டு வைத்துக் கொள்ள ஆரம்பித்தார். பிறந்தகத்திலிருந்து புக்ககம் போகும் பெண்ணைப் போலவே ஒவ்வொரு முறையும் எங்களை விட்டுப் பிரியும்போது லதா துயரமடைவார். ஒவ்வொரு முறையும் கலங்கிய கண்களுடன் அவர் விடைபெறும் காட்சியை, என் கணவரும் நானும் என்றுமே மறக்கமுடியாது.

தி.மு.கழகம் முதன்முறையாக தமிழக ஆட்சியைக் கைப்பற்றியது.

காலப் பெட்டகம்

தி.மு.க-வின் பிரமிக்கத்தக்க வெற்றி!

மது அரசியலின் அடிப்படை, ஜனநாயகம். அந்த ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பெருவாரியாக வாக்க ளித்து, ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தத் தமிழ் மக்கள் ஆணை இட்டிருக்கின்றனர். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எவரும் தி.மு.க-வின் இந்த வெற்றியை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, அதற்கு வந்தனை செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

தி.மு.க. தலைவர்களே ஆச்சரியப்படும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். வாக்காளர்களே அதிர்ச்சியடையும்படி அமைச் சர்களும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தோல்வியுற்றிருக்கின்றனர். தி.மு.க-வின் வெற்றியைக் காணும்போது, கூட்டுச் சேராமல் அவர்கள் தனியாக நின்றிருந்தால்கூட சற்றேறக்குறைய இந்த வெற்றியை அடைந்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தத் தேர்தலில், தமக்கென்று வாழாத தலைவன் தோற்றிருக்கிறான். நெருக்கடியான தருணத்தில் நாட்டுக்கு வழிகாட்டி, உலகப் பாராட்டுதலைப் பெற்ற அந்தப் பெருந்தலைவன் பொது வாழ்வுக்கு அறிமுகமில்லாத ஒரு மாணவரிடம் தோற்றிருக்கிறார். வாக்குப் பெட்டி நிகழ்த்தும் விசித்திரங்களில் இதுவும் ஒன்று!

தமிழகத் தேர்தல் நிகழ்த்திய விசித்திரங்கள் இது மட்டுமா? முதிர்ந்த அனுபவமும் அறிவும் பெற்ற முதலமைச்சர் தோல்வியுற்றிருக்கிறார். நாட்டின் கடுமையான உணவுப் பிரச்னையை மன உறுதியுடனும் திறமையுடனும் சமாளித்து வந்த மத்திய அமைச்சர் தோல்வியுற்றிருக்கிறார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காகவே ஓயாமல் உழைத்துவந்த, கிடைப்பதற்கரிய ஒரு தொழிலமைச்சரையும் தோற்கடித்திருக்கிறார்கள்.

இவ்வாறு, தன்னலமற்ற தியா கம், முதிர்ந்த அனுபவம், செயல் திறமை, உண்மையான உழைப்பு எதையுமே பொருட்படுத்தாமல் காங்கிரஸின் மீது தங்களுக்கிருந்த அதிருப்தியை மக்கள் காட்டியிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் இந்த அளவுக்கு அதிருப்தி அடையக் காரணமென்ன, தங்கள் மீது அவர்களுக்கிருக்கும் மனத்தாங்கல் என்ன என்பதைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் தீவிரமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். குறை கள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஜனநாயக வழியில், அதிசயிக்கத் தக்க முறையில், மக்களின் ஆணை யைப் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகும் தி.மு.க-வை நாம் மனமார வரவேற்கிறோம்.

அரசியலில் நேர்மைக்கு அதிக இடம் கொடுக்கும் பண்பு படைத்த வர் திரு.அண்ணாதுரை. அவர் தலைமையில் இயங்கும் தி.மு.க., இதுநாள்வரை மக்களின் குறைக ளைப் பற்றி அரசாங்கத்திடம் முறையிட்டு வந்தது. இப்போது, அந்தக் குறைகளை அகற்றுவதற் கான வாய்ப்பு அதற்கு கிடைத்திருக் கிறது. அந்த வாய்ப்பை அவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விகடன் வாழ்த்துகிறான்.

காலப் பெட்டகம்

நடிகை பானுமதி ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட என்பது பல ருக்குத் தெரிந்திருக்கலாம். அவர் எழுதிய சிறுகதை, 'பர்சனாலிடி' என்னும் தலைப்பில், முதன்முதல் இந்த ஆண்டு ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது. அது மட்டு மல்ல, இவரைத் தொடர்ந்து அன் றைய முன்னணி நட்சத்திரப் பட் டாளமே, வாராவாரம் விகடனில் சிறுகதைகள் எழுதி அசத்தியுள்ளது. நட்சத்திர சிறுகதைகள்?!

பயணக் கட்டுரைகளுக்குப் புகழ்பெற்ற எழுத்தாளரான மணியன், 'இதயம் பேசுகிறது' என்னும் தலைப்பில் தமது முதல் பயணக் கட்டுரையை எழுதத் தொடங்கியது இந்த ஆண்டு ஜூலை கடைசி இதழிலிருந்துதான்!

காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

வியர் ஜெயராஜ், இந்த ஆண்டிலிருந்து விகடனில் படங்கள் வரையத் தொடங்குகிறார். அவர் விகடனில் வரைந்த முதல் படமே ஒரு தொடர்கதைக்குதான்! 15.1.1967 இதழில் தொடங்கும், கே.ஜே.மகாதேவனின் 'என்றும் உங்கள்...' தொடர்கதையின் முதல் அத்தியாயத்துக்கு ஜெயராஜ் வரைந்த படம் இது. ஜெயராஜ்யம்!

காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

மிழுக்கு முதன்முதலில் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்த நாவலான அகிலனின் 'சித்திரப்பாவை', விகடனில் இந்த ஆண்டு மார்ச் இதழில் தொடங்குகிறது.

 
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்