திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா

வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா

விகடன் பொக்கிஷம்
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு!
சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா

ரு சமஸ்தானத்தில், அலங்காரப் பிரியரான ராஜா ஒருவர் இருந்தார். ஒரு பெரிய விழாவுக்காகத் தலைநகரில் மக்கள் கூடி இருந்தார்கள். ராஜா அங்கே போகவேண்டி இருந்தது. அன்று காலையிலிருந்தே அதற்குத் தயாராகப் பிரமாதமாக அலங்காரம் செய்துகொண்டார்.

அரண்மனையில் கண்ணாடி ஹால் ஒன்று இருந்தது. அதில் நாலு புறமும் ஏராளமான நிலைக்கண்ணாடிகள், இரண்டு ஆள் உயரத்திற்குப் பதிக்கப்பட்டிருந்தன. வெளியே புறப்படுமுன், ராஜா அந்த ஹாலுக்கு வந்தார். ஹாலின் நடுவே நின்று கொண்டார். நாலாபுறமும் ஐம்பது விதமாக அவருடைய உருவம் தெரிந்தது. அவர் சிரித்தார்; ஐம்பது ராஜாக்கள் சிரித்தார்கள். அலங்காரத்தைச் சரிபார்த்துக்கொண்டு வெளியே போய்விட்டார்.

அவரிடம் ஒரு கம்பீரமான 'அலாஸ்டியன்' நாய் இருந்தது. ராஜாவுக்கு அந்த நாயிடம் தனிப் பிரியம் உண்டு. ராஜா வெளியே போனபிறகு, அந்த நாய் கண் ணாடி ஹாலுக்குள் நுழைந்தது. அதுவரை அந்த நாய் அங்கே போனதில்லை.

நடுவே நாய் வந்து நின்றதும், சுற்றிலும் ஐம்பது கம்பீரமான நாய்கள் அதை உற்றுப் பார்த்தபடி நின்றன. நாய் நகர்ந்தது; அவையும் நெருங்கி வந்தன. நாய் ஆத்திரத்துடன் குரைத்தது; அவையும் குரைத்தன. நாய்க்குப் பொறாமையும் கோபமும் வந்தது. 'நம்மைப் போலவே ஐம்பது நாய்கள் இந்த அரண்மனையில் இருக்கின்ற னவே! அவற்றிடமும் ராஜா பிரியமாக இருப்பார்போலத் தோன்றுகிறதே?' என்று கோபத்துடன் கண்ணாடியை நோக்கிப் பாய்ந்தது.

விழா முடிந்து, ராஜா திரும்பி வந்தார். உள்ளே போகுமுன், கண்ணாடி ஹாலுக்குள் போனார். அவருடைய ஐம்பது பிம்பங்களும் அங்கே அவரை வரவேற்றன. அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று.

வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா

அவர் பார்வை அங்கே ஒரு கண்ணாடியில், சுமார் மூன்று அடி உயரத்தில் விழுந்தது. அங்கே ரத்தக்கறை பட்டிருந்தது. சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். ஒரு மூலையில் அந்தக் கம்பீரமான நாய், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடந்தது.

ராஜா பார்த்தபோது அழகிய உருவத்தைக் காட்டிய அதே நிலைக் கண்ணாடி, நாய் உறுமிக் குரைத்தபோது அந்தக் கடூரமான காட்சியைத்தான் காட்டியது. அதன் பலனும் குரூரமாகத்தான் முடிந்தது.

உள் மனத்தைத் திருப்பி ஆண்டவனைப் பார்க்க முடிந்தவர்கள் அதில் தங்கள் மகிழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். மிருக உணர்ச்சி வசப்பட்டவர்களுக்கு அதன் அசிங்கம்தான் தெரியும். அதன் பலனையும் அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்!

 
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா