திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சிவப்பு மல்லி

சிவப்பு மல்லி

விகடன் பொக்கிஷம்
சிவப்பு மல்லி
சிவப்பு மல்லி
சிவப்பு மல்லி
 
சிவப்பு மல்லி
சிவப்பு மல்லி

ண்ணன் ராமலிங்கம் அவர்களுக்கு,

தனபால் எழுதிக் கொண்டது. இப்பவும் இங்கு ரங்கநாயகி மற்றும் குழந்தைகள் சுகம்.

நேற்று எனக்குக் காலை டியூட்டி! ரங்கநாயகியை அழைச்சுக்கிட்டு 'சிவப்பு மல்லி' படம் பகல் ஆட்டத்திற்குப் போனேன். கதையில் தொழிலாளி - முதலாளி வர்க்கப் போராட்டத்தைப் பற்றி விரிவா சொல்ல டிரை பண்ணியிருக்காங்க. படம் ஆரம்பமானவுடனே, இன்றைய ஏற்றத் தாழ்வுகளைத்தான் ஜோரா சொல்லப் போறாங்கன்னு நினைச்சேன். ஆனா, ஒரு இடம்கூட யதார்த்தமா இல்லே!

சிவப்பு மல்லி

படத்துலே வர மில்லுலே தொடர்ந்தாற்போல மூணு வரு ஷத்துக்கு போனஸ் கொடுக்கலையாம். முதலாளி லாக்-அவுட் அறிவிச்சதும், அந்த மில்லை கவர்மென்ட்டே எடுத்து நடத்துதாம். நல்லா ரோசனை பண்ணிப்பாருங்க. அரசாங்கம் ஏத்து நடத் தற அளவுக்கு வளர்ந்துட்ட ஒரு பெரிய மில்லுலே மூணு வருஷம் போனஸ் தராம வுட்டாங்கன்னா இன்னிக்கி இருக்கிற சட்ட திட் டங்கள்லே தொழிலாளிங்க சும்மா இருப்பாங்களா?

ஆபீஸ்லே இருக்கற சுவர் கடிகாரத்தை மானேஜர் தினமும் திருப்பி வைப்பாராம்; அதை வச்சு தொழிலாளிங்க ஒரு மணிநேரம் கூடுதலா வேலை செய்வாங்களாம்! இன்னிய தேதியிலே யார்னாச்சும் இதை நம்புவாங்களா? இப்படித்தான் படம் பூராவும் ரீல் வுடறாங்க!

தொழிலாளிங்களை வேலைக் குப் போக வேணாம்னு சொல்ற எஸ்.என்.லட்சுமியம்மாவை லாரியை ஏத்தி ரத்த வெள்ளத்திலே சாவடிக்கிறாங்களே, அந்த சீன் ரொம்ப டாப்பா இருக்குது! இந்த சாவுக்குச் சாட்சியா இருநூறு தொழிலாளிங்களே நிக்கறது அதைவிட டாப்பு!

கம்யூனிஸ்ட் கொள்கைகளை மெயினா வச்சுப் படம் எடுக்க நினைக்கிறது நல்ல எண்ணம்தான். அது மாதிரியான படங்களை வரவேற்க நாமும் தயாரா இருந்தோம். ஆனா, இந்தப் படத்துலே கம்யூனிஸ்ட் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கிற மாதிரி இல்லே இருக்குது?!

தனிப்பட்டவங்களோட பிரச்னைனு வரும்போது செங்கொடி ஏந்தி ஊர்வலம் போய்ப் போராட்டம் நடத்தறதும், ஊர் பிரச்னைனு வரும்போது ஓரம் கட்டி ஒளியற தும்தான் கம்யூனிஸ சித்தாந்தம்னு தப்பாப் புரிஞ்சுக்கிட்டிருக்காங்க போலிருக்கு! அரிவாளையும், சுத்தியையும் தங்களுக்குச் சாதக மான இடங்கள்லே மட்டும் பயன்படுத்திக்கிட்டிருக்காங்க!

படம் முடிஞ்சு வெளியே வரும்போது, 'பூ வேணுமா?'னு ரங்கநாயகிட்டே கேட்டேன்.

''அது வேற எதுக்கு? அதான் தியேட்டருக்குள்ளேயே இத்தினி நேரம் முழம் முழமா பூ சுத்தி நம்பளை வெளியே அனுப்பினாங்களே!''னு சொல்லிச்சு.
கடைசிலே தியாகு இறக்கறதை ரொம்ப ஜோரா ஸ்லோமோஷன்ல காட்டறது; சந்திரசேகர் - சாந்தி காதலிக்கும்போது பூக்காரி கிண் டல் பண்றது; கடைசிலே போலீஸ் வரப்போ கிராமத்து அரை நிஜார் பையன்கூட 'நான்தான் தீ வச் சேன்'னு சொல்ற வீரம் - இப்படி ரெண்டு மூணு நல்ல அயிட்டங் களும் படத்திலே இருக்கு. அதுக் காக வேண்டி, நான் 35 மார்க் கொடுப்பேன்!

அன்புடன்
தனபால்.

 
சிவப்பு மல்லி
சிவப்பு மல்லி