திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பைத்தியம் : சசி

பைத்தியம் : சசி

விகடன் பொக்கிஷம்
பைத்தியம் : சசி
பைத்தியம் : சசி
பைத்தியம்
சசி
பைத்தியம் : சசி
பைத்தியம் : சசி

பூர்வ ரகத்தைச் சேர்ந்த பைத்தியக்காரன் ஒருவனை நான் ஒருமுறை சந்திக்க நேரிட்டது. அவனை 'நம்பர் பைத்தியம்' என்று சொல்லலாம். காரணம், அவன் யாரைக் கண்டாலும், நம் பர்கள் சம்பந்தமான கேள்விக ளைக் கேட்பான். அவற்றுக்குப் பதில் சொல்லாவிட்டால் உடனே அழ ஆரம்பித்துவிடுவான்.

முதலில், ''3,500-ம் 7,300-ம் கூட்டினால் என்ன?'' என்று ஒரு கணக்கைப் போட்டான்.

''எனக்குத் தெரியாதப்பா!'' என்று நான் சிரிதேன். உடனே அவன் 'ஹோ'வென்று அழ ஆரம்பித்துவிட்டான். நான் அவன் போட்ட கணக்கின் விடையைச் சொன பிறகுதான் அவன் தன் அழுகையை நிறுத்தினான்.

அடுத்தாற்போல், ''வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக் கின்றன?'' என்று கேட்டான். நான் என்ன பதில் சொல்லுவது? ''தெரியாது'' என்று சொன்னதும் அவன் மீண்டும் அழத் தொடங்கி விட்டான். பிறகு, நான் ஏதோ ஒரு எண்ணிக்கையைச் சொன்ன தும், அதை ஒரு காகிதத்தில் எழுதி, ஏதோ தனக்குள் முணு முணுத்துவிட்டு, ''ரொம்பச் சரி!'' என்று தலையை ஆட்டினான்.

எனக்கு அவன் செய்கை தமா ஷாக இருந்தது. அடுத்து அவன், ''இந்த மணிபர்ஸில் எத்தனை ரூபாய் இருக்கிறது?'' என்று என்னிடமிருந்த மணிபர்ஸை சுட்டிக்காட்டிக் கேட்டான்.

''அறுபது ரூபாய் இருக்கிறது'' என்றேன்.

''எனக்கு நோட்டுக்களின் நம் பர்தான் வேண்டும். கொடு, பார்த்துவிட்டுத் தருகிறேன்'' என்றான்.

எனக்குப் பயமாகிவிட்டது. பைத்தியத்தின் கையில் மணிபர்ஸைக் கொடுத்தால், அது என்ன செய்யுமோ?

''நான் தரமாட்டேன்! உனக்கு நம்பர்தானே வேண்டும்? நானே பார்த்துச் சொல்கிறேன், இரு'' என்று, என்னிடம் இருந்த ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களின் நம்பர்களையும் சொன்னேன். சொல்லச் சொல்ல, அதையும் முன் போல ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டுவிட்டு, ''ரொம் பச் சரி!'' என்று தலையை ஆட்டினான்.

எனக்குச் சிரிப்புத் தாங்க வில்லை. ''அடப் பயித்தியமே!'' என்று சிரித்தேன்.

ஆனால், உடனேயே நான் என் சிரிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆமாம், அதுவரையில் அசல் பைத்தியக் காரன்போல் பேசிக்கொண்டிருந்த அந்த ஆசாமி திடீரென்று, ''போலீஸ்... போலீஸ்!'' என்று கத்தினான்.

போலீஸ்காரர்கள் ஓடி வந்ததும், ''இவன் என் பர்ஸைத் திருடிக்கொண்டுவிட்டான்! அதோ... அதோ.... அதுதான் என் மணிபர்ஸ்!'' என்று என்னிடம் இருந்த மணிபர்ஸைச் சுட்டிக் காட்டினான்.

''இல்லை. இது என் பர்ஸ்! இவன் பொய் சொல்கிறான்'' என்றேன்.

''இல்லை. அது என் பர்ஸ்தான். அதில்தான் என் ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களையும் போட்டு வைத்திருந்தேன். திருடிக்கொண்டு விட்டான். படுபாவி! உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், நோட்டுக்களின் நம்பர்களைச் சொல்கிறேன். சரிபார்த்துக் கொள்ளுங்கள்!'' என்று, தான் குறித்து வைத்திருந்த நம்பர்களைச் சொல்லி ஓலமிட்டான்.

''ஐயையோ! எல்லாம் மோசடி சார்!'' என்று நான் கத்தினேன்.

''யார் இல்லை என்றது? மோசடிக் குற்றத்துக்காகத்தான் உம்மை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகிறோம்'' என்று போலீஸ்காரர்கள் என்னை இழுத்துக் கொண்டு போனார்கள்.

 
பைத்தியம் : சசி
பைத்தியம் : சசி