திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

நல்லூரா : பிலோ இருதயநாத்

நல்லூரா : பிலோ இருதயநாத்

விகடன் பொக்கிஷம்
நல்லூரா : பிலோ இருதயநாத்
நல்லூரா : பிலோ இருதயநாத்
நல்லூரா
பிலோ இருதயநாத்
நல்லூரா : பிலோ இருதயநாத்
நல்லூரா : பிலோ இருதயநாத்

ரிக்குறவர்களின் தொடர்பு சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் எனக்கு உண்டு.

ஒருநாள், லேஸ்லோய் என்னும் நரிக்குறவனும், நல்லூரா என்னும் அழகான நரிக்குறவப் பெண்ணும் என் வீட்டுக்கு வந்தார்கள்.

''எங்களுக்கு நேற்று இரவு கலியாணம் முடிந்துவிட்டது. நல்லூராவைத் திருமண உடையுடன் புகைப்படம் பிடிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டான் லேஸ். ''சரி!'' என்று புகைப்படம் எடுத்துத் தந்தேன். இச்சம்பவத்திற்குப் பிறகு, சுமார் 2 ஆண்டுகள் வரை நான் அவர்களைக் காணவில்லை.

அதன்பின், நல்லூராவை ஒரு சோலையில் கண்டேன். அழுது கொண்டு இருந்தாள். என்ன விஷயம் என்று விசாரித்தேன்.

''திருவண்ணாமலையிலிருந்து இரண்டு நாட்களாக நடந்து வந்த தால் எனக்கு நேற்றிரவு கால்கள் வலித்தன. நான் ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது ஒரே இருளாக இருந்ததால், நடந்து வரப் பயந்து, அங்கேயே படுத்துக்கொண்டேன். இன்று காலையில்தான் இங்கு வந்தேன். என் மீது சந்தேகப்பட்டு, பழுக்கக் காய்ச்சிய இரும்பை என் கையால் தூக்கச் சொல்கிறார்கள்'' என்று அழுதாள் நல்லூரா.

அருகிலிருந்த பஞ்சாயத்துக் காரர்களும், ''காய்ச்சிய இரும்பை எடுப்பதுதான் அவள் மீதுள்ள சந்தேகத்தைப் போக்கும். அது தான் எங்கள் குல வழக்கம்'' என்று கூறினார்கள்.

முதலில் மறுத்தவள் திடீரென்று என்ன நினைத்தாளோ, சட் டென்று அந்தப் பழுக்கக் காய்ச் சின இரும்பைத் தன் கையில் தூக்கி, பஞ்சாயத்துக் கூட்டத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்து, மறுபடியும் அதைத் தீயில் எறிந்துவிட்டாள். பஞ்சாயத்தார் மனம் சமாதானம் அடைந்தது. நல்லூராவின் கணவ னாக அருகில் நின்றிருந்தவன் லேஸ் அல்ல; வேறு ஒருவன்!

இச்சம்பவம் நடந்து சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, சமீபத்தில் நல்லூராவைச் சென்னையில் பார்த்தேன். அவளிடம் ''எங்கே உன் கணவன்?'' என்று கேட்டேன். அவள் சொன்ன பதிலைக் கேட்டு என் மனம் திடுக்கிட்டது.

''எங்கள் குலப் பெண்களைக் காய்ச்சின இரும்பைத் தூக்கச் சொல்லி எங்கள் கற்பைச் சோதித் தால், எங்கள் குலப் பெண் தெய் வம் அந்த ஆண்களைக் கொலை செய்துவிடும். அப்படி என் கண வரும் இறந்துவிடுவாரே என்று நினைத்துத்தான் நான் அன்று அவ்வளவு தூரம் மறுத்தேன். என் கணவர் போன மாதம் இறந்துவிட்டார். எனக்கு இனி திரும ணமே வேண்டாம்'' என்று கூறிக் கண்ணீர் சிந்தியவள், என்னை நிமிர்ந்து பார்க்காமலே நடந்து சென்றுவிட்டாள்.

தொகுப்பு : ரவிபிரகாஷ்

 
நல்லூரா : பிலோ இருதயநாத்
நல்லூரா : பிலோ இருதயநாத்