Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
பொக்கிஷம்  
நக்சல்பாரிகள்
தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்
தலையங்கம்
.
தலையங்கம்

நம் அரசியல் சட்டத்திலோ, ஜனநாயக அமைப்பிலோ, அமைதியான முன்னேற் றத்திலோ நம்பிக்கை இல்லாமல், வன்முறையின் மூலம் 'சமுதாயத் தொண்டு' செய்துகொண்டிருப்பவர்களுக்குப் பெயர் நக்சல்பாரிகள். அவர்கள் அதி தீவிர இடதுசாரிக் கம்யூனிஸ்டுகளின் முத்தண்ணாக்கள்! மாசேதுங்கின் நேர் வாரிசுகள்! மேற்கு வங்காளத்திலுள்ள நக்சல்பாரி என்ற இடத்தில் இவர்கள் தங்கள் கை வரிசையை முதன்முதலாகக் காட்டியதால், இவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது.

இந்த நச்சுப் பாம்பு, பின்னர் கேரளாவிலும் ஆந்திராவிலும் நுழைந்தது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் விஷத்தைக் கக்கிக்கொண்டு இருக்கிறது.

நக்சல்பாரிகளுக்குத் தலைவர் யார், உறுப்பினர்கள் யார் யார், இவர்களுக்கு எங்கிருந்தெல்லாம் ஆயுதங்கள் வருகின்றன என்ற விவரமெல்லாம் ரகசியமாகவே இருக்கின்றன. கொலைகள் செய்தும், கொள்ளையடித்தும், தீ வைத்தும் காவல்துறை யினருடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். தலை மறைவாக இருந்து, தங்களைத் தாங்களே சட்ட விரோதமாக்கிக்கொண்டுவிட்ட சமூக விரோதிகளான இவர்களுடைய இயக்கத்தை 'சட்டவிரோத'மாக்கவேண்டும் என்ற விநோதமான கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

ராணுவத்தின் உதவியைக் கொண்டோ, தனி போலீஸ் பிரிவின் துணை கொண்டோ வலை போட்டுப் பிடித்து கருணையின்றி ஒழித்துக்கட்ட வேண்டியவர்களை 'சட்ட விரோதமாக்க வேண்டும்' என்று முதலமைச்சர்கள் கேட்பதும், அதற்கு மத்திய உள்துறை அமைச்சர், ''அம்மாதிரியான உத்தேசம் இப்போது எதுவும் இல்லை'' என்று பதில் சொல்லிக்கொண்டிருப்பதும் அர்த்தமற்றதாகும். 'நாங்கள் நாட்டின் விரோதிகள்' என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டு செயல்படுபவர்களை 'சட்ட விரோதிகள்' என்று அறிவிக்க வேண்டுமாம்! நல்ல வேடிக்கைதான்!

 
தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism