Published:Updated:

தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!

தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!

தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!

தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!

Published:Updated:
பொக்கிஷம்  
தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!
தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!
தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!
கேள்விகள்: டி.கே.கலா பதில்கள்: பி.சுசீலா
தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!
தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!

''உங்கள் சொந்த ஊர் எது?''

''ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் விஜயநகரம்.''

''உங்கள் வாழ்வின் முன்னேற்றத் திற்கு யாருக்கு நீங்கள் அதிகக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்?''

''என் கணவருக்கு.''

''உங்களுக்கு எத்தனை குழந்தை கள்? அவர்களில் யாராவது பாடுகிறார்களா?''

''ஒரே பையன்தான். பெயர் ஜெயகிருஷ்ணா. பாட அவனுக்கு ஆசை அதிகம் இருக்கிறது.''

''முதன்முதலில் சினிமாவிற்கென்று நீங்கள் பாடிய பாட்டு எது?''

'''பெற்ற தாய்' என்ற படத்திற்காக திரு.ஏ.எம்.ராஜா அவர்களுடன் பாடிய 'ஏதுக்கு அழைத்தாய்' என்ற பாட்டு.

'''தென்னாட்டு லதாமங்கேஷ்கர்' என்று உங்களைக் கூறுகிறார்களே- அதைப் பற்றி..?''

''அவர்கள் மலையின் உயரத்தில் இருக்கிறார்கள். நான் இன்னும் அது வரை போகவே இல்லையே! ஆகை யால் என்னை வெறுமே சுசீலா என்று கூப்பிட்டாலே போதும்!''

''இன்றைய இந்திய திரைப்படங் களில் நன்றாகப் பாடி நடிக்கக்கூடிய வர்கள் இல்லையே..?''

''ஏன் இல்லை..? கிஷோர்குமார், டி.ஆர்.மகாலிங்கம், டி.எம்.எஸ்., பானுமதி, எஸ்.வரலட்சுமி, ஜெயலலிதா, மனோரமா, பாரதி - இப்படிப் பலர் இருக்கிறார்களே! சமீபத்தில் ஸ்ரீவித்யா கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அவர் நன்றாகப் பாடுகிறார்.''

 

-இணைப்பு: பாலா
தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!
தென்னாட்டு லதாமங்கேஷ்கர்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism