Published:Updated:

காலத்தை வென்ற கலை வண்ணம்!

காலத்தை வென்ற கலை வண்ணம்!

காலத்தை வென்ற கலை வண்ணம்!

காலத்தை வென்ற கலை வண்ணம்!

Published:Updated:
பொக்கிஷம்  
சித்தன்னவாசல்
காலத்தை வென்ற கலை வண்ணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலத்தை வென்ற கலை வண்ணம்!
காலத்தை வென்ற கலை வண்ணம்!
.
காலத்தை வென்ற கலை வண்ணம்!
காலத்தை வென்ற கலை வண்ணம்!

காலத்தை வென்ற கலை வண்ணம்!

'இதைச் சேதப்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ கூடாது. மீறினால், மூன்று மாதச் சிறையோ, ஆயிரம் ரூபாய் அபராதமோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்!'

- தொல்பொருள் ஆராய்ச்சி இலாகாவினரின் அறிவிப்பையும் அந்த மலையையும் மாறி மாறிப் பார்த்தோம். எங்களுக்குள் ஒரே திகில்... 'ஏதேது... ஜெயில் கியில் என்கிறார்களே!'

ஒருவருக்கொருவர் ஏகமாய் கார்வார் செய்துகொண்டோம்... ''பார்த்துப்பா! மலையைக் கிலையைப் பெயர்த்துப் பைக்குள் போட்டுக்கொண்டு வந்துவிடாதே!''

பரம எச்சரிக்கையுடன், தினவெடுக்கும் கைகளையும் அடக்கிக்கொண்டு போகிறோம். மகேந்திர பல்லவன் காலத்து மகத்தான சித்தன்னவாசல் சித்திரங்களைக் காணப்போகும் உற்சாகம் வேறு!

''அதோ, அங்கேதான்'' என்று காவல்கார பழனியாண்டி காட்டிய இடத்தைக் கூர்ந்து பார்க்கிறோம். அங்கே புதுக்கோட்டையைச் சேர்ந்த கருணாகரன், பாலகிருஷ்ணன், குமார் ஆகியோர் அந்த இடத்தை நோக்கிக் கையை நீட்டுவதும், ரகசியமாகப் பேசிக்கொள்வதுமாக முறைத்து முறைத்துப் பார்க்கிறார்கள்.

நமக்குச் சந்தேகம்... 'சித்திரங் களைச் சேதப்படுத்த சதியோ?'

''அதைச் சேதப்படுத்தி விடா தீர்கள். அப்புறம் அபராதம்... ஜெயில்!'' - அவர்களை மிரட்டிய படி அருகில் செல்கிறோம்.

''இங்கே சேதப்படுத்த இன்னும் என்ன பாக்கி இருக்கிறது?''

காலத்தை வென்ற கலை வண்ணம்!

பார்க்கிறோம். சுற்றியிருக்கும் பிரமாண்டமான சித்தன்ன வாசல் மலைக்கு அருகே நாமும் கற்களாகச் சமைந்து போய்விடுகிறோம்.

அழிவில்லாத வண்ணம் கொண்ட அந்த அமர ஓவியங் களுக்கா இந்தக் கதி? எத்தனையோ நூற்றாண்டுகளாக எண்ணற்ற கலை நெஞ்சங்களின் கற்பனைக் கும், எழுச்சிக்கும் ஆதர்சமான அந்தக் கலைச் செல்வங்களுக்கா இந்த துர்பாக்கிய நிலைமை?

மகேந்திர பல்லவனின் ஆவி இதைக் கண்டிருக்குமா? இவற்றை உருவாக்கிய மகா கலைஞன் நினைத்துப் பார்த்திருப்பானா?

'மூலிகைகளை அரைத்தோ, வண்ணக் கற்களைப் பொடியாக் கியோ அழியாத வண்ணத்தைத் தயாரித்து, அதைக் கொண்டு ஓவி யங்களைத் தீட்டிவிட்டோம். அவற்றுக்கு அழிவில்லை' என்று பாவம், மகிழ்ந்து நிறைந்து போயி ருப்பானே அந்த மகா கலைஞன்!

ஆனால், 'கலைஞனுக்கு முடிந் ததை அவன் செய்தால், நமக்குத் தெரிந்ததை நாம் செய்வோமே!' என்று கங்கணம் கட்டிவிட்டார் கள் பின்னால் வாழ்ந்த ரசிகர் கள்.

கிராமவாசி ஒருவர் சொல்கிறார்... ''இப்ப சர்க்கார் எடுக்கிற துக்கு முந்தி, இங்கே மாடுகள்தான் வந்து படுத்திருந்து விட்டுப் போகும். ஜனங்க எப்பவாவது வருவாங்க!''

'எப்பவாவது வரும்' மனிதர்கள் தமக்குத் தெரிந்த ஒரு வித்தையை ரொம்பச் சிறப்பாகச் செய்திருக் கிறார்கள். அதுதான் சுரண்டல்!

வண்ணம் அழியா அந்த ஓவி யங்களை அழிப்பதற்கு வேறு வழி ஒன்றும் தெரியாமல், கடைசி யில் சுரண்டிச் சுரண்டி எடுத்திருக் கிறார்கள். நம்மவர்களின் அரிய முயற்சியால், இன்று அந்த அமர ஓவியங்கள் உருவத்தை இழந்து நிற்கின்றன; அங்கங்கள் இழந்து நிற்கின்றன. ஆனால், அவற்றின் ஆத்மா மாத்திரம் அழிவில்லாமல், தன்னைப் படைத்த கலைஞனின் கைவண்ணத்துக்குக் காலத்தை வென்ற சாட்சியாக இருக்கிறது.

'உன் உயிரின் ஒவ்வோர் அணு விலும் நான் இருப்பேன்' என்றான் இறைவன். அதைப்போல, தன் படைப்பின் ஒவ்வொரு பாகத்திலும் உயிர்த்துடிப்பைப் படைத்துவிட்டுச் சென்றிருக்கி றான், அவற்றை உருவாக்கிய மகா கலைஞன். சிதைந்த நிலையிலும் மோகனமாய்ச் சிரிக்கின்றது, அவற்றின் அழகு!

அவற்றில் இரண்டு உருவங் களை அடையாளம் காண்கிறோம். அவை, தேவ-தேவியர் சிற்பங்கள்!

மலரை ஏந்திக்கொண்டிருக்கி றான் அந்த அழகு மகன். அவன் கையில் இருப்பது வெறும் மலர் தானா, அல்லது அந்த மலர் மக ளுக்கு அவன் தொடுக்கும் மன்ம தக் கற்பனையா? அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட் டால், அவள் ஏன் இப்படி நாணி நளினமாகப் பார்க்கிறாள்?

அந்த ஓவியச் செல்வர்களை ஆடவிட்டு மகிழ வைத்து, தந்தை யின் வாத்சல்யத்தோடு பார்த்து மகிழ்ந்திருந்த மகா கலைஞன் உடலால் மறைந்தாலும், கலை யால் வாழ்கிறான். காலத்தை வென்று இன்னும் அவன் கை வண்ணம் மின்னிக்கொண்டு இருப்பதே அதற்குச் சாட்சி!

காலத்தை வென்ற கலை வண்ணம்!


 
காலத்தை வென்ற கலை வண்ணம்!
காலத்தை வென்ற கலை வண்ணம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism