அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
உங்கள் பத்திரிகையில் 'எங்க மாமா' பட விமர்சனத்தில், என் னைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக் கும் கருத்துக்கு விளக்கம் சொல் லவே இந்தக் கடிதத்தை எழுதுகி றேன். நான், அந்தப் படத்தில் முத்தம் கொடுத்திருப்பதாக உங்கள் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. அதனால் என்னைக் கண்டித்துப் பல கடிதங்கள் வந்திருக்கின்றன.
நாட்டிலே, ஒரு சில பத்திரிகைகள் விமரிசனம் என்ற பெயரில் பல வற்றை எழுதுகின்றன. அதற்கெல் லாம் பதில் சொல்ல நான் என்றுமே விரும்பியது கிடையாது. ஆனால், 'ஆனந்த விகடன்' போன்ற கண்ணி யமான ஏட்டில் வெளிவரும் செய் தியை அதன் பெரும்பாலான வாச கர்கள் அப்படியே உண்மையென்று நம்பிவிடுகிறார்கள். அவர்களின் தவறான எண்ணத்தைப் போக் கவே, உங்கள் பத்திரிகையின் வாயிலாக இந்தப் பதிலைத் தெரி விக்கிறேன்.
விமரிசனத்தைப் படித்ததும், நான் நடிக்காத ஒரு காட்சி, படத்தில் எப்படி வந்தது என்று திகைத்துப் போனேன். 'மூவியோலா'வில் படத்தைப் பார்த்தேன். (மூவி யோலா என்பது, ஓடும் படத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்திப் பார்க்கும் வசதியுள்ள கருவி.) அதிலே கதாநாயகனின் உதடு என் தாடையில்தான் படு வதுபோல் தெரிகிறது. என் உதடு, அவர் முகத்தில் எங்குமே பட வில்லை. மூக்கிற்குப் பின்னால் மறைந்திருக்கிறது. இதுதான் உண்மை! தயவுசெய்து, நீங்களும் இன்னுமொரு முறை 'மூவி யோலா'வில் படத்தைப் பார்த்து, உண்மையை மக்களுக்குத் தெரி விக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
ஏனென்றால், நான் முத்தக் காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று ஏற்கெனவே அறிவித்திருக் கிறேன். இப்போதும் சொல்கிறேன், அந்த அளவுக்குக் கீழிறங்கி, என் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண் ணும் ஈனத்தனமானவள் அல்ல நான். ஏனென்றால், நான் ஒரு தமிழ்த்தாயின் வயிற்றிலே பிறந்தவள்!
- ஜெயலலிதா
மேலே குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை ஒப்புக்கொள்கிறோம். நாங்களும் 'மூவியோலா' கருவியில் பார்த்து, அது உண்மை என்பதைப் புரிந்து கொண்டோம்.
ஆனால், சினிமா என்பதே தோற்றம், ஒளி, ஒலி (visual, image and sound effect) இவற்றின் சேர்க்கையினால் பார்க்கிறவர்க ளுக்கு ஒரு கற்பனை உணர்ச்சியைக் கொடுப்பதுதானே! படமெடுப்பவர் கள் தாங்கள் நினைக்கும் உணர்ச் சியை ரசிகர்களுக்குக் கொடுத்துவிட் டால், படம் வெற்றி பெறுகிறது. தவறிவிட்டால், படம் தோற்கிறது.
நடித்தவர், காட்சியில் நடந்த உண்மையை விளக்கிப் பதில் சொல்லிவிட்டார். பார்ப்பவர்களின் கேள்வியோ, இப்படி ஓர் எண்ணம் வரும்படி படம் எடுக்க வேண்டுமா என்பதுதான்!
- ஆசிரியர்
|