Published:Updated:

ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!

ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!

ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!

ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!

Published:Updated:
பொக்கிஷம்  
ஒரே குண்டு இரண்டு மிருகங்கள்!
ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!
பிலோ இருதயநாத்     தொகுப்பு: ரவிபிரகாஷ்
.
ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!
.

ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!

உதகையிலிருந்து சுமார் 30 மைல் தூரத்தில், ஓர் ஊரில் நஞ்சன் என்ற திறமையுள்ள ஒரு சிகாரி (வேட்டைக்காரர்) இருக் கிறார். அவரோடு இரண்டு நாட் கள் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த இரண்டு நாட் களில், நான் அவரிடம் கேட்டறிந்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

''மைசூரிலிருந்தும், உதகையி லிருந்தும், பம்பாய், கல்கத்தா போன்ற இடங்களிலிருந்தும் யாராவது இங்கு வேட்டைக்கு வந்தால், என்னைத்தான் உதவிக்கு அழைத்துச் செல்வார்கள்.

ஒருநாள், எங்கள் மாட்டை ஒரு புலி அடித்துவிட்டது. தவிர, அடிக்கடி எங்கள் நிலத்தின் பயிர்களை கோரைப்பல் பன்றி ஒன்று புகுந்து நாசம் செய்வது வழக்கம்.

பசு இறந்ததைக் கேட்டதும், எனக்கு மன வேதனை அதிகரித் தது. அன்றிரவு எப்படியும் பசு வின் இறைச்சியைத் தின்னப் புலி வரும் என்று நினைத்து, மாடு இறந்துகிடக்கும் இடத்தின் அரு கில், ஒரு மரத்தின் மேல் பரண் கட்டி, உட்கார்ந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் இருளில், என்னவோ நகர்வது போல் தெரிந்தது. துப்பாக்கியை எடுத்தேன். சந்திரனின் மங்கிய ஒளியில், மாடு இறந்து கிடக்கும் இடத்திற்கு ஒரு புறம் புலியும், மற்றொரு புறம் என் பயிர்களை நாசம் செய்யும் கோரைப் பல் பன்றியும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.

''யார் மாட்டின் இறைச்சியைத் தின்பது?'' என்ற பிரச்னையில் அவை ஒன்றை ஒன்று கோபத் துடன் பார்த்துக்கொண்டிருந்தன. சாதாரணமாகக் கோரைப் பல் பன்றியைக் கண்டால், புலிக்குப் பயம்! பன்றி தன் கோரைப் பற்க ளால் புலியைக் கிழித்து எறிந்து விடும். இந்நிலையில் எதைச் சுடு வது? எதைச் சுடாமல் விடுவது?

'புலியைச் சுட்டால், பன்றி ஓடி விடும். ஆனால், பன்றியோ சதா காலமும் நமக்கு நஷ்டத்தைக் கொடுக்கிறது. மேலும், பன்றி இறைச்சியும் நமக்கு ஆகாரமாக உபயோகப்படும்' என்று எண்ணி, முதலில் பன்றியைச் சுட்டேன். சுட்டதும், பன்றி கோபமடைந்து, உடனே ஒரே பாய்ச்சலாகப் புலியின் மேல் பாய்ந்து, புலியைக் குத்திக் கிழித்துப் போட்டுவிட்டு, சிறிது தூரம் சென்று தானும் கீழே விழுந்து இறந்துவிட்டது.

நான் சொல்லமுடியாத ஆனந் தம் அடைந்தேன். ஒரே குண்டில் இரண்டு மிருகங்களை வீழ்த்தி யிருக்கிறேன் அல்லவா?

புலியின் தோலை விற்றுப் பசு வாங்கினேன். பன்றியின் இறைச் சியை அன்று எங்கள் பாடியில் உள்ளவர்களுக்கு இலவசமாய்ப் பங்கிட்டுக் கொடுத்தேன்!''

 
ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!
ஒரே குண்டு... இரண்டு மிருகங்கள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism