Published:Updated:

எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!

எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!

பிரீமியம் ஸ்டோரி
விகடன் பொக்கிஷம்
எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!
எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!
எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!
எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!
எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!
எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!

காட்டுராணி படப்பிடிப்புக்காக 'செட்' போடப்பட்டிருந்தது.

நடிகர் அசோகன் புலியோடு சண்டை போடும் காட்சி படமாக்கப் படவேண்டும். எல்லாம் தயார். அசோகன் புலியைப் பார்த்தார். சுமார் ஐந்நூறு பவுண்டு எடையுள்ள அந்தப் புலி பார்க்கச் சற்று பயங்கரமாகவே இருந்தது.

''டூப் போடாமல் இதோடு நாமே சண்டை போட்டால் என்ன? இதை நாம் அடக்கிவிட முடியாதா?' - அசோகன் உள்ளத்தில் திடீரென்று ஒரு துணிவு பிறந்தது.

சின்னப்பா தேவரிடம் இதைச் சொன்னதும்... ''என்னாது...? இது என்ன விளையாட்டா? உங்களுக்கு ஏதா வது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா யார் பதில் சொல்றது?'' என்று மறுத்துவிட்டார் தேவர்.

''அண்ணே! நீங்க கவலைப்படாதீங்க. நான் சமாளிச் சுக்கறேன்'' என்று கெஞ்சினார் அசோகன். ''முருகா! நான் சொல்லவேண்டியதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்!'' என்றார் தேவர்.

அசோகனுக்கு சவால் விடுவதுபோல் உடம்பை ஒரு குலுக்கு குலுக்கியது அந்தப் புலி. அவ்வளவுதான்... அதைப் பிடித்துக்கொண்டிருந்த ஏழு பேரும் தூக்கி எறியப்பட்டனர்.

''கர்....ர்...ர்...புர்...'' ரென்று செட்டில் ஒரே சப்தம்.

புலியின் மீது பாய்ந்தார் அசோகன். செட்டிலிருந்த அனைவரும் நடுங்கியேவிட்டனர். 168 பவுண்டு எடை யுள்ள அசோகனுக்கும், 500 பவுண்டு எடையுள்ள புலிக் கும் போர்! உண்மையான, உக்கிரமான சண்டை. புலி யின் முதுகில் ஏறி

எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!

உட்கார்ந்துகொண்டு, அதை விரட்டி னார் அவர். அது இவரைக் கீழே தள்ளித் தரையில் தேய்த்தது.

சுமார் 15 நிமிடங்கள் சண்டை போட்டு, கடைசியில் அந்தப் புலியை அசோகன் அடக்கியேவிட்டார். என்ன தைரியம்! என்ன துணிச்சல்!
எல்லோரும் வியந்து, அசோகனைப் பாராட்டினர்.

''அண்ணன் எம்.ஜி.ஆரைப் பார்த்துத்தான் எனக்கு இந்தச் சண்டை போடும் 'டேஸ்ட்' வந்தது. இந்த விஷயங் களில் அவர் எனக்கு எவ்வளவோ சொல்லிக் கொடுத் திருக்கிறார். என்னைத் தைரியப்படுத்தியிருக்கிறார். அதோடு, தேவரின் முருக பக்தியும் எனக்குத் துணை புரிந்தது. துணிந்துவிட்டேன்'' எனப் பெருமையுடன் கூறினார் அசோகன்.

எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!
 
எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!
எம்.ஜி.ஆர்.கொடுத்த தைரியம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு