Published:Updated:

வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா

வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா

பிரீமியம் ஸ்டோரி
விகடன் பொக்கிஷம்
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு!
சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா

கிராமத்திலேயே பொல்லாத போக்கிரியாக உலவிக்கொண்டிருந்தான் மாணிக்கம். அவனை எதிர்த்து யாரும் எதுவும் பேச முடியாது. அப்படிச் செய்தால் சண்டைதான்; அடிதடிதான்! ''உன்னுடைய பலத்துக்கும் தைரியத்துக்கும் நீ ராணுவத்தில் சேர்ந்தால், பிரமாதமாக முன்னுக்கு வரலாமே?'' என்று யாரோ அவனிடம் சொன்னார்கள். அவ்வளவுதான்... மாணிக்கத்துக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

ராணுவ வேலையில் சேர்த்துக்கொள்ளும் ஆபீசுக்கு மாணிக்கம் போனான். அங்கே ஒரு மனுக் காகிதம் கொடுத்தார்கள். அதில் விவரங்களை எழுதிக் கொடுத்தான். தகுந்த சோத னைகளுக்குப் பிறகு, மாணிக்கத்தைத் தேர்ந் தெடுத்துவிட்டார்கள். ராணுவப் படையில் சேர்ந்துவிட்டான். அவனைப் போர் நடக்கும் எல்லைப் பிரதேசத்துக்கு அனுப்பி வைத்தார் கள். அங்கே நடந்துகொண்டிருந்த விஷயம் அவனுக்கு மிகவும் பிடித்தமானது. சண்டை போடுவது, அடித்துத் தள்ளுவது, தூக்கி எறிவது எல்லாம் அவனுக்குப் பழக்கமானவைதானே!
கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குத் தன் நிலைமை புரிய ஆரம்பித்தது. அவன் இங்கேயும் சண்டை போடுகிறான்; உண்மைதான். ஆனால், அதில் நாட்டுக்காகப் போரிடும் பொறுப்பு இருந்தது. அவனுடைய வெற்றியில் 'நான் ஜெயித்தேன்' என்ற தற்பெருமை இல்லை. ''இந்திய ராணுவம் வெற்றிகரமாகப் போரிட்டது'' என்ற தேசிய உணர்ச்சிதான் ததும்பி நின்றது. ஊரில் அவன் தைரியத்தையும் அட்டகாசத்தையும் பார்த்து எல்லோரும் பயந்துகொண்டிருந்தார்கள். இங்கேயும் அவன் அதே வேலையைத்தான் செய்தான். ஆனால், இதை எல்லோரும் தேசத்துக்காகச் செய்யும் தியாகம் என்று பாராட்டினார்கள்.

மாணிக்கத்துக்குப் பொறுப்பு வந்துவிட்டது. மற்றவர்களுடன் ஒத்துழைக்கும் விவேகம் வந்து விட்டது. 'தான்' என்ற அகம்பாவம் போய், 'நாட்டுக்காக' என்ற தன்னலமில்லாத உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டுவிட்டது.

வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா

மாணிக்கத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது. பதவி உயர்வு கிடைக்கக் கிடைக்க, அவனுடைய குணமும் மெருகு ஏறிக்கொண்டே போயிற்று. மாணிக்கம் கிராமத்தில் நல்ல பெயர் எடுத்தது அல்லாமல் நாட்டுக்கே பெருமை தரக்கூடியவன் ஆகிவிட்டான். ஆபீசராக நல்ல பெயர் எடுத்துத் தங்கப் பதக்கமும் பெற்றான்.

மனிதனுக்குச் செல்வமோ, உடல் பலமோ, சக்தியோ இருந்தால் போதாது. அதில் சுயநலம் இருக்கும்வரையில், அதனால் மற்றவர்கள் எல்லோருக்கும் துன்பமும் சங்கடமும்தான் ஏற்படும். சுயநலம் நீங்கி, 'நான்' என்ற அகந்தை போய்விட்டால், அவ்வளவும் எல்லோருக்கும் பயன்படுகிறது. அவனும் உயர்ந்துவிடு கிறான்; சமூகத்துக்கும் நன்மை ஏற்படுகிறது.

 
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
வழிகாட்டும் ஒளிவிளக்கு! : சுவாமி சின்மயானந்தா
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு