பிரீமியம் ஸ்டோரி
விகடன் பொக்கிஷம்
யார் பையன்?
யார் பையன்?
யார் பையன்?
யார் பையன்?
யார் பையன்?

சேகர் - சந்தர்

யார் பையன்?

சந்தர்: சேகர், சேகர்! எழுந்திரு, இனிமேல் காத்து வாங்கணும்னா வேற எங்கேயாவது போய் உட்காரு. பார்க் பெஞ்சில் மட்டும் உட்காராதே!

சேகர்: ஏன்? வர்ணம் ஒட்டிக்குமா?

சந்தர்: வர்ணம் ஒட்டிக்கிட்டாத்தான் 'வாஷ்' பண்ணிடலாமே! வம்பு ஒட்டிக்கும்; அப்புறம் என்ன பாடுபட்டாலும், எடுக்க வராது. உன் மாதிரிதான் ஜெமினி கணே சன் ஒரு பார்க் பெஞ்சிலே உட் கார்ந்திருந்தார். அப்போ ஒரு பையனிடம், 'அதோ இருக்காரே, அவர்தான் உங்க அப்பா!' என்று ஒரு கிழவர் கையைக் காட்டி விட்டுட்டார். அவன் வந்து பக் கத்தில் உட்கார்ந்தான். பாவம், குழந்தையாச்சேன்னு இரக்கப் பட்டு கணேசன் மிட்டாய், கடலை, பலூன் இதெல்லாம் வாங்கிக் கொடுக்கப்போக, அந்தப் பையன், 'நீதான் எங்க அப்பா'னு ஒட்டிக்கிட்டுப் போக மாட்டேன் னுட்டான்.

சேகர்: அட கடவுளே! ஊரார் அவனை சந்தேகப்படுவாங்களே!

சந்தர்: சந்தேகமா? ஊரே சிரிக் குது. போய்ப் பாரு, 'யார் பையன்' படத்தை! அவன் காதலியே சந்தேகப்படுகிறாள்.

சேகர்: காதலி யாரு? சாவித்திரி தானே?

சந்தர்: ஆமாம்! என்.எஸ்.கே.யும் மதுரமும்தான் அவருக்கு அப்பா, அம்மாவா வராங்க. படம் பூரா வும் சிரிப்பு இருக்கு. சிரிப்புடன் குழந்தைப்பாசமும், மனிதப் பண் பும் அடிப்படைத் தத்துவமாக ஓடுது.

சேகர்: அதெல்லாம் சரி! யார் பையன்? அதைச் சொல்லு.

யார் பையன்?

சந்தர்: பெரிய ஹாலிவுட் ஸ்டார் ஷெர்லிடெம்பிள் நடிச்சாப்பலே நடிக்குது; 'பேபி சரோஜா' மாதிரி பேசுது. டெய்சி இரானி என்கிற ஹிந்திப் பொண்ணுதான், பையனா நடிக்குது. இந்திப் படத்திலேயும் இதுதான் நடிச்சுது. அதிலே 'டொமேட்டோ'னு பேரு. இதுலே அது பேரு பூரி.

சேகர்: இந்திப் பெண்ணுன்னியே, இரவல் குரல் யாரு?

சந்தர்: அதுவே பேசியிருக்கப்பா! மழலை கொஞ்சினாப்லே குரல் ரொம்ப அழகா இருக்கு. என்ன பாவம், என்ன உணர்ச்சி, என்ன சிரிப்பு, என்ன டான்ஸ், என்ன அழுகை, என்ன விஷமம்! படத்திலே அது வந்து நின் னுட்டா, மத்த நட்சத்திரமெல் லாம் தெரியவேயில்லை!

சேகர்: இந்தியிலே வந்த 'பந்தீஷ்' இதே படம்தானா?

சந்தர்: ஒரிஜனல் ஸ்டோரி சேலேகார் என்ற பெங்காலி படம். இது அதனுடைய மூன்றாவது கார்பன் காப்பி!

 
யார் பையன்?
யார் பையன்?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு