Published:Updated:

காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்

காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்

பிரீமியம் ஸ்டோரி
விகடன் பொக்கிஷம்
காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்
காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்
காட்டெருமைப் போர்!
பிலோ இருதயநாத்
காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்
காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்
காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்

ரு நாள், உதகையிலிருந்து கோத்தர்களின் ஊராகிய 'திருச்சிக்கடி' என்னும் ஊரில் நடந்த ஒரு விசேஷத்திற்குச் சென்றிருந் தேன். அங்கு வாழும் கோத்தர்கள், ஒரு மலையின் மேல் பூசைச் சடங்கு முடித்ததும், சிலர் சந்தோஷமாய் நடனமாடிக்கொண்டிருந்தார்கள். சிலர் வெட்ட வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் உட்காருவதும், எழுந்து போய் நடனமாடுவதைப் புகைப்படம் எடுப்பதுமாக இருந் தேன்.

அப்பொழுது மாலை சுமார் 3 மணி இருக்கும். காட்டெருமை கள் கூட்டம் கூட்டமாக வரு வதைக் கண்டோம். முதலில் வந்த எருமைக் கூட்டத்திலிருந்த எருமை ஒன்று எங்களைக் கண்ட தும் 'உம்'மென்று ஒரு குரல் கொடுத்தது. உடனே எல்லா எருமைகளும் அணி வகுத்து நின்று, எங்களைத் தாக்கத் தயாராயின. ''ஓடுங்கள்'' என்று கோத்தர்கள் கூறினார்கள். கோத்தர்கள் கூறுவதற்கு முன், பத்தடி தூரத்தில் நான் ஓடிக்கொண்டிருந்தேன். மேய்ப்பவன் குரல் கேட்டு அந்த எருமைகள் நின்றன. நான் சிறுவ னாக இருந்தபோது, என் ஆசிரி யர் கூறிய 'நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும்' என்ற கதைதான் அப்போது என் நினைவுக்கு வந்தது.

மேய்ப்பர்கள், தங்கள் ஊரில் நடந்த பழைய சம்பவம் ஒன்றை எனக்குக் கூறினார்கள்.

''ஒருநாள் மாலை, எருமைகள் காட்டில் மேய்ந்துவிட்டு, எங்கள் பாடியை நாடி, வழக்கமாக வரும் நேரத்தைவிடச் சற்று சீக்கிரமாக வந்துவிட்டன. அதைக் கண்ட நாங்கள் 'ஏதோ சீக்கிரமாக வந்து விட்டன போலும்' என்று நினைத்துக்கொண்டோம். அக் கூட்டத்தில் ஓர் எருமைக்கு மட்டும் புலியின் நகம் பட்டு குருதி வடிந்துகொண்டிருந்தது. 'அந்த எருமை மட்டும் எப்படித் தப்பி வந்திருக்க முடியும்?' என்று சந்தேகம் உண்டாயிற்று. உடனே எருமைகளை எண்ணிப் பார்த்தோம். ஒன்றும் குறையவில்லை. ஆனால், எருமைகளை எண்ணும் போது சில எருமைகளின் கொம்புகளில் குருதி படிந்திருப்பதைக் கண்டோம்.

'சரி! புலிக்கும் எருமைகளுக்கும் கடுமையான போர் நடந்திருக்க வேண்டும்' என்று எண்ணி, எல்லோரும் பந்தங்களைத் தயார் செய்துகொண்டு, எருமைகள் மேயுமிடத்தைத் தேடிச் சென்றோம். சிறிது தூரம் சென்றதும் புலியின் வாடை வீசியது. வாடையின் வழியிலேயே நடந்து சென்றோம். கடைசியில், ஒரு சோலையில் ஒரு புலி இறந்து கிடந்தது. புலியின் உடல் முழுவதும் எருமையின் கொம்புகள் பாய்ந்திருந்தன. பிறகு, புலியைத் தூக்கிக்கொண்டு பாடிக்குத் திரும்பி வந்தோம்'' என்று கூறினார் கிழவர்.

தொகுப்பு: ரவிபிரகாஷ்

 
காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்
காட்டெருமைப் போர்! : பிலோ இருதயநாத்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு