Published:Updated:

நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்

நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்

நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்

நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்

Published:Updated:
விகடன் பொக்கிஷம்
நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்
நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுத்தெலும்பு தெரிந்தால் அழகு!
நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்
நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்
நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்
நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்

ருண்ட மான் போன்ற கண்கள், அன்று அலர்ந்த ரோஜா போன்ற நிறம்; இவற்றுடன் குழி விழும் கன்னங்கள்,குழந்தையின் சிரிப்பு, உடுக்கை போன்ற இடை, கொடி போன்ற உடல்... இவை எல்லாவற்றையும் சேர்த்தால் தோன்றுவது - புதிதாகத் திரைவானில் தோன்றியுள்ள நட்சத்திரம் ஹேமமாலினி.

இப்பொழுது இரண்டு இந்திப் படங்களில் நடிக்கிறார் இவர். வட இந்தியாவில் தயாரிப்பாளர்களெல்லாம், 'தயவுசெய்து இதற்கு மேல் பெருக்காதீர்கள். கழுத்துக்கு அருகிலுள்ள எலும்பு தெரியும்படி இளைத்திருக்க வேண்டும்' என்று சொல்கிறார்களாம்.

தினம் காலை இரண்டு மணி நேரம் நாட்டிய சாதகம். உடற் பயிற்சிக்குப் பஞ்சமில்லை. எலுமிச்சம் பழ நிறமுள்ள இவருக்கு எல்லா நிறப் புடவைகளுமே எடுப்பாக இருக்கும். ஆனால், இவருக்குப் பிடித்தது வெளிர் நீலம், வெளிர் ரோஜா, வெள்ளை நிறம். இவருக்குப் பிடித்த மற்றும் சில... பம்பாய் வாழ்க்கை, நீள டோலாக்குகள், ஜரிகைப் பூவேலை செய்த ஜார்ஜெட் புடவைகள், லிப்ஸ்டிக்... இத்யாதி.. இத்யாதி!

''அழகுக் குறிப்புகளா? நான் தினமும் இரவு 'கோல்ட் கிரீம்' பூசிக்கொண்டுதான் படுப்பேன். இரவு படுக்கும் முன்புகூட கண்களுக்கு மையிட்டுக் கொள்வேன். சோர்ந்த கண்கள் 'பளபள'வென்றிருக்க, மியூரின் (Murin) என்ற மருந்தால் கண்களைக் கழுவுவேன்.

முகம் வெண்மையாக, மிருதுவாக இருக்க ஓர் அழகுக் குறிப்பு: ஹைட்ரஜன் பெராக்ஸைட், அம்மோனியா, பிளீச்சிங் பவுடர் இவற்றைக் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து முகத்தை பச்சைத் தண்ணீரால் கழுவ வேண்டும். நான் மாதம் ஒரு முறை இப்படிச் செய்வேன்.

என் கூந்தல் முன்பு நீளமாக இருக்கும். சினிமாவிற்காகக் கன்னாபின்னாவென்று வாரி, கொண்டை போட்டு, கூந்தல் கொட்டிப் போய்விட்டது'' என்று வருத்தப்படுகிறார் ஹேமமாலினி.

 
நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்
நடிகை ஹேமமாலினி சொல்லும் அழகுக் குறிப்புகள்