விகடன் பொக்கிஷம்

காலப் பெட்டகம்

'எனக்குப் பிடித்த புத்தகம்' என்னும் தலைப்பில், வாசகர்கள் தாங்கள் ரசித்துப் படித்த புத்த கத்தைப் பற்றி எழுதும் விரிவான விமர்சனக் கட்டுரைகள் பகுதி இந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்குகிறது.

முதல் பெண் இயக்குநர் என்று புகழ்பெற்ற டி.பி.ராஜலட்சுமி, திரைப்பட வசனத்தில் புரட்சி செய்த இளங்கோவன் போன்று பிரபலமானவர்களின் பேட்டிக் கட்டுரைகள் இந்த ஆண்டு அதிகம் வெளியாகியுள்ளன.

கண்டிக்கிறோம்!

'சைவ மறுமலர்ச்சிக் கால மாகிய பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் தோன்றிய நூல்களே மாணிக்கவாசகன் செய்த திருவாசகமும், சம்பந்தன், அப்பன், சுந்தரன் ஆகியோர் செய்த தேவா ரமும்!'

'திருக்குறளுக்கு முன்பே இயற் றப்பட்ட நூல் நாலடியார்!'

உலகிலுள்ள எல்லா விஷயங் களைப் பற்றியும் அறிந்துகொள் ளக்கூடிய குறிப்புப் புத்தகமான, உலகப் புகழ்பெற்ற, 'என்ஸைக் ளோபீடியா பிரிட்டானிகா' (Encyclopaedia Britanica) தொகுதியில், தமிழைப் பற்றி இப்படித் தவறான கருத்துக்கள் வெளியாகியிருப்ப தைக் காணும்போது, நம் ரத்தம் கொதிக்கிறது; நெஞ்சம் பதறுகிறது. தொன்மைமிக்க உயர்தனிச் செம் மொழிகளில் ஒரு மொழி எனக் கருதப்படும் தமிழ் மொழியைப் பற்றியும், தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் இப்படிப்பட்ட கருத்துக் கள், உலகப் புகழ் வாய்ந்த அத் தொகுதியில் வெளியாகியிருக் கிறதே; தமிழின் தொன்மையைப் பற்றி சரியாக அறியாத எவரோ ஒருவர் கொடுத்துள்ள விவரங்க ளைக் கண்ணை மூடிக்கொண்டு பதிப்பாளர்கள் அந்தத் தொகுதியில் சேர்த்துவிட்டிருக்கிறார்களே என் பதை எண்ணும்போது மனம் புண்படுகிறது.

அப்பன், சுந்தரன், மாணிக்க வாசகன் என்று ஒருமையிலா, மரியாதைக்குறைவான முறையிலா அந்தப் பெரியோர்களைக் குறிப் பிடுவது? அர்த்தமற்ற கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் 'என் ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா' பதிப்பாளர்களைக் கண்டிக்கிறோம். மறுபதிப்பிலேயே அவற்றை நீக்கி, தமிழைப் பற்றி நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து குறிப்புக ளைப் பெற்று வெளியிடவேண் டும் என்று கோருகிறோம்.

'தவற்றைத் திருத்துகிறோம்'

'என்ஸைக்ளோபீடியா பிரிட் டானிகா' தொகுப்பில் தமிழ் மொழி யைப் பற்றித் தவறாகக் குறிப்பு எழுதியிருந்ததைக் கண்டித்து, 11-2-62 விகடன் இதழில் 'கண்டிக் கிறோம்' என்ற துணைத் தலை யங்கம் எழுதியிருந்தோம். இதைப் படித்த என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா பதிப்பின் ஆசிரியரி டமிருந்து கீழ்க்கண்ட கடிதம் நமக்குக் கிடைத்துள்ளது.

மே-24-62.
அன்புடையீர்,

தமிழ்மொழி பற்றி 'என்ஸைக் ளோபீடியா பிரிட்டானிகா'வில் வெளியிடப்பட்டிருந்த குறிப்புக ளைக் கண்டித்து 11-2-62 ஆனந்த விகடனில் தாங்கள் தீட்டியிருந்த கண்டனக் குறிப்புகள் எங்கள் கவ னத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் பற்றி முற்றிலும் புதிய கட்டுரைகளை மறு பதிப்பின் போது வெளியிடத் தீர்மானித்திருக் கிறோம். அப்போது தாங்கள் எடுத் துக்காட்டியிருந்த தவறுகள் திருத்தப் படும் என்பதை அறிய மகிழ்ச்சி அடைவீர்கள்.

இப்படிக்கு,
ஓ.எஸ்.எல்.லோ
ஆசிரியருக்காக.

தவறு எடுத்துக்காட்டப்பட்ட வுடனேயே, அதைத் திருத்தி, தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி யைத் துடைக்க முன்வந்துள்ள என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா ஆசிரியரைப் பாராட்டுகிறோம்.

(10.6.62)

ரத்னம் மறைந்தது

பாரதத் தாயின் மணி முடியில் ஒளி வீசிக்கொண்டிருந்த ரத்னம் ஒன்று சிதறிவிட்டது. பாரெங்கும் புகழ்பெற்ற பாரத ரத்னா டாக்டர் விச்வேச்வரய்யா மறைந்துவிட் டார். இந்திய நாட்டிலே அறிவுச் சுடராக விளங்கிய தீபம் அணைந்து விட்டது.

இந்தியாவின் தொழிற்சிற்பி என்ற பெயர் அவருக்குத்தான் தகும். பொறியியல் துறையில் அவர் பல அற்புதங்களைச் சாதித் துள்ளார். மேல் நாட்டு நிபுணர்களும் கண்டு வியக்கும் வகையில் அரிய திட்டங்களை உருவாக்கியுள்ளார். நீர்ப்பாசன இன்ஜினீயரிங் துறை யில் பிரமிக்கத்தக்க திட்டங்களை நிறைவேற்றத் துணை புரிந்துள் ளார்.

நாட்டின் பல சமஸ்தானங் களிலும் அரும் பணிபுரிந்து அவற்றின் தொழில், விவசாய முன்னேற்றத்துக்கு வழி வகுத்தவர் அவர்.

நாக்பூர், பம்பாய், பூனா, கராச்சி போன்ற பல நகரங்களின் தண் ணீர்ப் பிரச்னையை அவருடைய நுண்ணறிவுதான் தீர்த்து வைத்தது. மைசூர் திவானாகப் பதவியேற்று அந்த சமஸ்தானத்தின் பெருமைக் கும் முன்னேற்றத்திற்கும் அவர் ஆற்றியுள்ள சாதனைகள் பொன் னேடுகளில் பொறிக்கப்படவேண் டியவை. தொழில் துறையில் மட்டு மின்றி, தொழில் கல்வி வளர்ச்சிக்காக அவர் வகுத்த திட்டங்களும் அந்த சமஸ்தானத்தை முன்னணியில் வைக்க உதவின.

திட்டங்கள் வகுத்து முன்னேறு வதில் நாம் ருஷ்ய நாட்டைப் பார்த்துப் பின்பற்றுவதாகச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், ருஷ்யப் புரட்சிக்கு முன்பே திரு. விச்வேச்வரய்யா எதையுமே திட்டம் வகுத்துச் செய்வதைத் தான் தமது வழக்கமாகக்கொண் டிருந்தார்.

நூறு ஆண்டுகள் உயிர் வாழ்வது என்பதே ஓர் அதிசயமான சாதனை. அந்த நூறு ஆண்டுகளும் உடல் தளராமலும், சுறுசுறுப்பு குன்றா மலும், சிந்தனை தடுமாறாமலும் நாட்டுக்கு உழைத்தவாறே நல் வாழ்வு வாழ்வது என்பது மனிதப் பிறவியில் கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு. டாக்டர் விச்வேச்வரய்யா வின் நூறு ஆண்டு வாழ்க்கை அத் தகைய சிறப்புப் பெற்ற வாழ்க்கை யாகும். அன்னாருடைய பெயர் பாரத நாட்டின் வரலாற்று ஏடுகளில் என்றென்றும் நிலைத்துவிட்டது. அப் பெரியாருக்கு நமது அஞ்சலி.

சுதந்திரம் பெற்ற 'கோவா'வில் எழுத்தாளர் சாவியும் ஓவியர் கோபுலுவும் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்து வாசகர்களுக் குப் பரிமாறிய சுவையான பயணக் கட்டுரைத் தொடர்'அந்நியர் ஆண்ட பூமி'. அதிலிருந்து ஒரு துளி...

அந்நியர் ஆண்ட பூமி

லதா மங்கேஷ்கர் கோவாவைச் சேர்ந்தவர் என்னும் சேதியை அறிந்ததும், ஆலய தரிசனத்தைக் காட்டிலும் அந்தப் பாடகியின் வீட்டைக் காண்பதில் எங்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது!

''லதாவின் வீடு மங்கேஷ் ஆல யத்தின் பக்கத்திலா இருக்கிறது? அதனால்தான் லதா மங்கேஷ் என்று பெயர் வைத்துக் கொண் டாரா?'' என்று விசாரித்தோம்.

''எஸ்... எஸ்! ஃபார் தட் பர்ப்பஸ் ஒன்லி!'' என்றார் நண்பர் கேயெஸ்.

''லதா மங்கேஷ்கர் மட்டுமில்லை; பம்பாயில் உள்ள பிரபல சினிமா சங்கீத டைரக்டர்கள் பலரும்கூட கோவாவைச் சேர்ந்தவர்கள்தான்'' என்றார் டிஸில்வா.

குளிர் நிழல் தரும் மரங்களும், வாழையும் தென்னையும் சூழ்ந்த தோப்புக்களுக்கிடையே அமைந் துள்ளது மங்கேஷ் ஆலயம். சந்தை இரைச்சல், தெருக்கூச்சல், வண்டிச் சத்தம் இவற்றையெல்லாம் கடந்த அமைதிமிக்க ஓரிடத்தில் அந்த ஆலயத்தை நிர்மாணித்துள் ளார்கள். வீதிகளையெல்லாம் கடந்து கோயிலை அடைவதற்கு வெகு தூரம் நடக்க வேண்டியிருக் கிறது. அந்த நீண்ட பாதையில் நடந்து செல்லும்போது நமக்குத் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் செல்லும் பாதை நினைவுக்கு வரு கிறது. மூலஸ்தானத்துக்குச் செல்வ தற்குக் கோயிலுக்குள்ளேயே மேலும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.

ஆலயத்துக்குள்ளே அமைதி, அழகு, புனிதம், தூய்மை, பக்தி இவ்வளவும் ஒன்று சேர்ந்து குடி கொண்டுள்ளன. கீழே உள்ள தரையோ அப்பழுக்கற்ற கண்ணாடி போல் பளபளக்கிறது! அந்தத் தரை மீது நாம் கால் வைத்து நடப்பதால் தரை அழுக்காகிவிடுமோ என்று அஞ்சுகிறோம். தலைக்கு மேலே கிளு கிளுவென 'கிண்கிணி' நாதம் எழுப்பும் 'சாண்ட்லில்யர்' விளக்கு களின் கண்ணாடிச் சரக் கொத்துகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. இத்தகைய கிறித்துவ மத சம்பிரதாய விளக்குகள் இடம் பெற்றிருக்கும் அபூர்வ அதிசயத்தை கோவாவில் உள்ள இந்துக் கோயில்களில்தான் காண்கிறோம்.

அந்த விசாலமான இடத்தையும் அங்கே ஊசலாடும் கண்ணாடி விளக்குகளையும் கண்டபோது, ''அடாடா! இந்த இடத்தில் நமது தமிழ் சினிமாக்களில் வரும் வில் லன்களை விட்டல்லவா வேடிக்கை பார்க்கவேண்டும்! இந்த விளக்கு களை அவர்கள் அட்டகாசத்துடன் கத்தியால் வெட்டி வீழ்த்தும் வீரச் செயல்களை அல்லவா காண வேண்டும்!'' என்று எண்ணிக் கொண்டேன்.

ஆலயங்களின் நிர்மாணத்திலும் அமைப்பிலும் நம் ஊர்க்கோயில் களுக்கும் இந்தக் கோயில்களுக்கும் அதிக வித்தியாசம் காணப்படு கிறது. நம் ஊர்க் கோயில்களைப் போல் முன்வாசலிலோ, மூல ஸ்தா னத்தின்மீதோ உயர்ந்த கோபுரங்கள் இல்லை. அதற்குப் பதிலாக கோபு ரத்தைத் தனியாக வேறொரு இடத் தில் கட்டி வைத்திருக்கிறார்கள். அந்தக் கோபுரங்கள் தோற்றத்திலும் உயரத்திலும் ஏறக்குறைய நாகூர் தர்காவிலுள்ள கோபுரத்தை ஒத்திருக்கின்றன.

''கோவாவிலுள்ள இந்துக் கோயில்களை தூரத்தில் நின்று பார்த்தால் தர்காவைப் போலவும், கோயிலுக்குள் சென்று பார்த்தால் மாதா கோயிலைப் போலவும், மூல ஸ்தானத்தை நெருங்கினால் இந்து ஆலயங்களைப் போலவும் காட்சி அளிக்கின்றன!'' - சைத்திரிகர் கோபுலுவின் கருத்து இது.

ஒவ்வோர் ஆலயத்துக்கும் ஒவ் வொரு தேர் செய்து வைத்திருக்கி றார்கள். வாமன வடிவம் கொண்டு விளங்கும் அந்தத் தேர்கள், நம் கண்களுக்கு விளையாட்டு பொம் மையாகவே தோற்றமளிக்கின் றன.

மங்கேஷ் ஆலயத்தைப் பார்த்து முடித்ததுதான் தாமதம்... ''லதா மங்கேஷ்கரின் வீடு எங்கே, எங்கே?'' என்று கேட்கத் தொடங்கி விட்டோம்.

''எஸ்...எஸ்! ஃபார் தட் பர்ப்பஸ் ஒன்லி ஐ ஆம் வெயிட்டிங்!'' என்றார் கேயெஸ்.

அந்த வீட்டை நெருங்கிச் சென்று பார்த்தபோது, 'லதா மங்கேஷ்கர் இந்தச் சின்ன வீட்டிலா பிறந்து வளர்ந்தார்!' என்று வியந்து போனோம். ஒரு குயிலின் கூட் டைப் போலவே மிக எளிய முறை யில் அமைந்திருந்தது அந்த வீடு. இதுவும் ஒரு குயிலின் வீடு தானே!

'பல சரக்கு' என்னும் பகுதியில் தான் எத்தனை எத்தனை சுவாரசியமான விஷயங்கள்!

பலசரக்கு

சின்னஞ் சிறு தீவு ஒன்றில் தனித்து விடப்பட்டால், எந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போவது என்பது பற்றிச் சில எழுத்தாளர்களிடையே பேச்சு நடந்துகொண்டிருந்தது.

''ஷேக்ஸ்பியர் எழுதிய நாட கங்கள் அத்தனையையும் எடுத்துக் கொண்டு போவேன்'' என்றார் ஒருவர்.

''நான் பைபிளை எடுத்துச் செல்வேன்'' என்றார் மற்றொருவர்.

''அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய நாவல்களைத்தான் நான் எடுத்துப் போவேன்!'' என்றார் இன்னொருவர்.

''படகு கட்டுவது எப்படி என்ற புத்தகத்தைத்தான் நான் கொண்டு போவேன்'' என்று பதிலளித்தார் செஸ்டர்டன்.

''தாகூரும் நானும் நோபல் பரிசு பெற்றது என்னவோ உண்மைதான். ஆனால், அவர் பெற்ற பரிசோ விசுவ பாரதியாக வளர்ந்து, எல்லோருக்கும் நன்மை பயப்பதாக விளங்குகிறது. நான் பெற்ற பரிசோ எனக்குக்கூடப் பயன்படுவதாக இல்லை. நான் அந்தப் பணத்தைப் போட்டு வைத்திருந்த பாங்கு திவாலாகிவிட்டது!''

- தாகூர் ஜயந்தி கூட்டம் ஒன்றில் பேசும்போது ஸர் ஸி.வி.ராமன் அவர்கள் இப்படிக் கூறினார்.

'நாவல்' என்றால் தொடர்கதை என்று அர்த்தம் கொள்கிறோம் அல்லவா? இது எந்த பாஷையைச் சேர்ந்த சொல் தெரியுமா? எல்லோரும் ஆங்கில வார்த்தை என்றுதானே நினைத்துக்கொண்டிருக்கிறோம்? இல்லவே இல்லை. நாவல் என்பது இத்தாலிய பாஷைக்கு உரிய சொல். நாவல் என்றால் இத்தாலிய பாஷையில் கதை என்று அர்த்தம். அதுதான் ஆங்கிலத்திற்கு மாறி, தமிழுக்கும் வந்துவிட்டது.

ஸாம் பிரிஸ்கின் என்ற ஹாலி வுட் படத் தயாரிப்பாளரின் அலு வலகத்திலே பொறிக்கப்பட்டு இருக்கும் ஒரு பொன்மொழி:

'சிறந்த முடிவு அனுபவத்திலி ருந்து தோன்றுகிறது. அனுபவமோ பல தவறான முடிவுகளுக்குப் பிறகு தோன்றுகிறது!'