விகடன் பொக்கிஷம்

வழிகாட்டும் ஒளிவிளக்கு!

சுவாமி சின்மயானந்தா

கணவனுக்கு அளவு மீறிய கோபம் வந்துவிட்டது. துப்பாக் கியை எடுத்துக்கொண்டு நேரே பக்கத்து வீட்டுக்குப் போனான். மனைவி அவன் காலைப் பிடித் துக் கெஞ்சியும் கதறியும் நிறுத்த முடியவில்லை. பக்கத்து வீட்டுக் கார அம்மாளுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஏதோ சண்டை. பக்கத்து வீட்டுக்காரர் நடுவில் புகுந்து, அவனுடைய மனைவி யைத் தாறுமாறாகப் பேசிவிட் டார்.

கோபம் பொங்க உள்ளே நுழைந்த கணவன், பக்கத்து வீட்டுக்காரரைத் துப்பாக்கியை எடுத் துச் சுட்டுவிட்டான். நல்லவேளையாக மோசமான காயம் இல்லை. நடுவில் புகுந்து தடுத்தவர்களில் ஒரு பெரியவர் அவனிடம் கேட் டார்... ''என்னதான் கோபம் வந் தாலும் இப்படிச் சுடலாமா?''

''சுடுவேன். ஆயிரம் தடவை வேண்டுமானாலும் சுடுவேன்'' என்றான் கணவன்.

''அப்படி என்ன தவறு நடந்துவிட்டது?''

''அவன் என் மனைவியைத் தாறுமாறாகத் திட்டிவிட்டான்.''

''சரி, தெருவில் போகும் ஒரு வன், ஒரு பெண்ணைப் பார்த்துத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நீ சுடுவாயோ?''

''எதற்காகச் சுடுகிறேன்? இவள் என் மனைவி. இவளிடம் எத்தனை பிரியம் வைத்திருக்கிறேன் தெரியுமா? அவளை அப்படித் திட்டினால், என்னால் எப்படிப் பொறுக்க முடியும்? அதனால்தான் கோபம் வந்து சுட்டேன்.''

''உன் மனைவியிடம் உனக்குப் பிரியம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். உன்னால் அவள் தொல்லையைச் சகிக்கமுடிய வில்லை என்று வைத்துக்கொள் வோம். விவாகரத்து செய்துவிட லாமா என்றுகூடத் தோன்றுகி றது. அந்த நிலைமையில் உன் மனைவியை யாராவது இப்படிப் பேசினால் என்ன செய்வாய்?''

அவன் மெதுவாக, ''எனக்குக் கோபம் வந்திராது. இப்படிச் செய் திருக்க மாட்டேன்'' என்றான்.

''அதுமட்டுமல்ல. 'தைரியமாக நீயாவது பேசினாயே?' என்று கை குலுக்கியிருப்பாய். 'ஊரில் நான் மனைவியோடு சண்டை போடு கிறேன் என்று சொல்கிறார்களே? இப்போது நான் தினமும் படுகிற அவஸ்தை எல்லோருக்கும் தெரிந் ததா?' என்று

வாசலில் நின்று சொல்லியிருப்பாய். அப்படித் தானே?'' என்றார் பெரியவர். எல் லோரும் சிரித்துவிட்டார்கள். அவனுக்கும் கோபம் சற்று அடங்கிவிட்டது.

''அதுதானப்பா மனித இயல் பின் தத்துவம். எல்லோருடைய மனத்திலும் அன்பு இருக்கிறது. மிகக் கொடியவன் மனத்திலும் கூட அது ததும்பி நிற்கிறது. மிகக் குரூரமான ஒரு காரியத்தை ஒருவன் செய்யும்போதும், ஒரு அன்புதான் பின்னால் நின்று தள்ளி, அவனை அப்படிச் செய்ய வைக்கிறது. மனிதன் தன் பார் வையை உள்ளே திருப்பி, அந்த அன்பை அடையாளம் கண்டு கொண்டால் போதும்!'' என்றார் பெரியவர்.