விகடன் பொக்கிஷம்

நல்ல உபதேசம்!

சசி

ஒருநாள், நான் சுந்தர விலாஸ் ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், என் பக்கத் தில் அவசரமாக வந்து உட்கார்ந்த ஒரு கனவான், ''ஏன் சார், நீங்கள் தானே கணேசய்யர்?'' என்று விசாரித்தார்.

''ஆமாம். நீங்கள் யார் தெரிய வில்லையே?'' என்றேன்.

''நான் உங்கள் வீட்டுக்குப் பக் கத்தில் புதிதாகக் குடிவரப் போகி றவன். உங்கள் வீட்டில் டெலி போன் வைக்கப் போவதாகத் தெரிந்துகொண்டேன். ரொம்பச் சந்தோஷப்பட்டேன்.''

''நான் டெலிபோன் வைத்துக் கொண்டால் நீங்கள் ஏன் சந்தோ ஷப்பட வேண்டும்? எனக்குப் புரியவில்லையே, சார்!''

''நான் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் மளிகைக் கடை வைக்கப் போகிறேன். அதே இடத்தில்தான் மாடியில் குடித்தனமும் இருக்கப் போகிறேன். திருவல்லிக்கேணி யிலும் டவுனிலும் எனக்கு ஏற் கெனவே இரண்டு கடைகள் இருக்கின்றன. அவைகளை இங்கேயிருந்தே கவனித்துக்கொள்வ தற்கு ஒரு டெலிபோன் இருந்தால், எவ்வளவோ சௌகரியமாயிருக்கும் அல்லவா?''

இந்தப் பதிலைக் கேட்டதும், எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. டெலிபோன் வந்தால், மனுஷன் தினம் என் பிராணனை வாங்க வந்துவிடுவான் போலிருக்கிறதே?

''நீங்கள் ஏன் சொந்தமாகவே டெலிபோன் வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படாது?'' என்றேன்.

அதற்கு அவர், ''வேறு உபத்திர வமே வேண்டாம் சார்! பகல், ராத்திரி என்று வித்தியாசம் இல் லாமல் பலரும் ஓசி டெலிபோன் பேச வந்துவிடுவார்கள். அதோடு, போன மாசம் மாம்பலத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து டெலிபோன் என்றாலே எனக்குத் திகில்தான்!''

''அது என்ன சம்பவம்?''

'''உங்களை அவசரமாக ஆபீஸ் மானேஜர் கூப்பிடுகிறார்' என்று தணிகாசலம் பிள்ளையை டெலி போனில் யாரோ கூப்பிட்டான். இந்த மனுஷன் உடனே புறப்பட் டுப் போய்விட்டான். திரும்பி வரும்போது, வீடு களவாடப்பட் டிருந்தது. இந்த மாதிரி ஆபத்து நமக்கு நேர்ந்துவிட்டால்..?''

''வாஸ்தவம்தான்! நன்றாக யோசனை பண்ணவேண்டிய விஷயந்தான்!'' என்று நான் சடக் கென்று அந்த ஹோட்டலில் இருந்த டெலிபோனிலேயே டெலிபோன் கம்பெனி மானேஜ ரைக் கூப்பிட்டு, ''எனக்கு டெலி போன் வேண்டியதில்லை; என் விண்ணப்பத்தை ரத்து செய்து விடவும்'' என்றேன்.

பக்கத்தில் இருந்த ஆசாமி, பெரிதும் ஏமாற்றமடைந்தவனாய், ''ஐயையோ!'' என்று அலறியதை லட்சியம் செய்யாமல், நான் வெளியே வந்துவிட்டேன்.

வீட்டுக்குப் போனதும், என் மனைவி என்னைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டாள். உடனே போய் மீண்டும் டெலி போனுக்கு ஏற்பாடு செய்யாவிட் டால், பிறந்த வீட்டுக்குப் போய்விடுவதாகச் சொல்லி பயமுறுத்தி னாள். என்ன செய்வது?

டெலிபோன் கம்பெனிக்கு உடனே ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னேன். ஆனால், என் வேண் டுகோள் ஏற்கப்படவில்லை! ''அதோ இருக்கிறாரே, அவர்தான் உங்களுக்கு அடுத்த விண்ணப்ப தாரர். நீங்கள் வேண்டாம் என்று சொன்னதும், வரிசைப்படி அவர் பெயருக்கு நாங்கள் டெலிபோன் கொடுத்துவிட்டோம்'' என்று கையை விரித்தார் மானேஜர்.

அவர் குறிப்பிட்ட மனிதரைப் பார்த்ததும், நான் மூர்ச்சையாகிப் போனேன். அவர் வேறு யாரு மல்ல... என்னோடு ஹோட்டலில் பேசி எனக்கு உபதேசம் செய்தவர்தான்!