விகடன் பொக்கிஷம்

மாலதி

தேவன்

அத்தியாயம்-13

சந்துருவுக்கு விஷயங்கள் விளங்க அதிக நேரம் பிடிக்க வில்லை. கிருஷ்ணனும் மாலதியும் வெளியிட்ட விவரங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, அவன் இதுவரை புரிந்துகொள்ளாத மர்மங்களை விளங்கவைத்தபோது அவன் பிரமித்தே போனான்.

காமேசுவர அய்யருடைய பங்களாவில் நடந்த சம்பவங்களுக்கு ஆதி காரணமானவள் லக்ஷ்மி என்ற பெண்மணி; அதை நடத்தி வைத்தவள் மாலதி. மாலதியின் மீது சந்துரு எவ்வளவு பாசம் கொண்டுவிட்டானோ, அவ்வளவு அந்த லக்ஷ்மியின் மீது கிருஷ்ணன் பிரேமை வைத்திருந்தான். கிருஷ்ணனுடைய விசாலமான நெற்றியையும் கூர்மையான கண்களையும் கவனித்த சந்துரு, அவன் வைத்த அன்புக்கு லக்ஷ்மி நிச்சயம் பாத்திரமுள்ளவளாக இருக்கவேண்டும் என்று ஊகித்தான்.

அந்த லக்ஷ்மியின் சகோதரன் தான் கோவிந்தன் - சந்துருவின் பள்ளித் தோழன். கோவிந்தனு டைய கெட்ட பழக்கங்கள் காலேஜ் நாட்களையும் தாண்டித் தொடர்ந்தன. சூதாட்டத்தில் தோற்று, கடன் அடைக்க வழியின்றி, தற்கால சாந்தியாக லக்ஷ்மியின் வைரப் பதக்கத்தில் அவன் கை வைத்துவிட்டான்.

இதைப் பின்னர் தெரிந்துகொண்ட லக்ஷ்மி, தன் சகோதரனைக் கேட்டதுமன்றி, கிருஷ்ணனுக்கும் கடிதம் போட்டு, அதைத் திரும்பப் பெற ஏற்பாடு செய்தாள். மேற்படி நகையை கோவிந்தன் காமேசுவரய்யரிடம் அடகு வைத்திருந்த செய்தியை அறிந்துகொண்ட கிருஷ்ணன் தன் தங்கை மாலதியை, உடனே 400 ரூபாயுடன் பங்களூருக்கு வரும்படி எழுதியிருந் தான். அவள் வரும்போதுதான் சந்துரு அவளை ரயிலில் சந்தித்தது. அந்தப் பணத்தைக் கோவிந்தனிடம் கொடுத்து, நகையை நேர் வழியில் மீட்டுக் கொள்ளலாம் என்பது அவன் கருத்து. ஆனால், கோவிந்தன் வேறு லகுவான வழியைக் கைப்பற்றினான்; மூன்று நான்கு நாளாக, காமேசுவரய்யர் இரும்புப் பெட்டியைத் திறக்கப் பிரயத்தனம் செய்து வந்தான். கல வரம் அடைந்த காமேசுவரய்யர், சேகரனைத் துணைக்கு அழைத்தார். பங்களூருக்கு மாலதி வந்தவுடன், கிருஷ்ணன் அவளை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது சந்துரு வந்துவிடவே, கிருஷ்ணன் அவளை மறுபடி இரவில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு சைக்கி ளில் ஏறி வேகமாக வெளியேறினான்; இதுவே சந்துருவின் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கி, பங்களாவுக்கு வருமாறு தூண்டிற்று.

அன்று இரவில், மாலதி கிருஷ்ணனிடம் 400 ரூபாயைக் கொடுக்கச் சென்றபோதுதான், சந்துரு பின்னால் வந்து ஒளிந்துகொண்டான். திறந்த கதவை உபயோகித்துக்கொண்டு, கோவிந்தன் பங்களாவில் நுழைந்து, அவசரத்தில் தான் எடுக்க வந்ததற்கு மாறாக வேறு ஒன்றைக் கொண்டு போய்விட்டான். அதையும் ஸ்டேஷ னில் திருடன் எடுக்க, சந்துரு அதைக் கைப் பற்றிக் கொண்டான்.

இதெல்லாம் அறியாத கிருஷ்ணன், தனது 400 ரூபாயைக் கோவிந்தனிடம் கொடுக்க, அவன் அதைக் கொண்டு தனது சகோதரியின் நகையைக் காமேசுவரய்யரிடமிருந்து மீட்டுக் கொண்டு திரும்பினான். ஆனால், அவன் எதிர்பாராத விதமாகக் கண்ணுசாமி முளைத்து, காரியத்தைக் கெடுத்துவிட்டான்.

இவ்வளவு விவரங்களையும் சந்துரு, மாலதி யிடமிருந்தும் கிருஷ்ணனிடமிருந்தும் தெரிந்து கொண்டான்.

-தொடரும்