விகடன் பொக்கிஷம்

'அடடா... அவரா!'

நெல்லையில் நடைபெற்ற பொருட் காட்சியில் கச்சேரி நடத்தச் சென்றுகொண் டிருந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன், வழியில் கோவில் பட்டியில் தன் நண்பர்களுடன் ஓர் ஓட்ட லுக்குள் காபி சாப்பிட நுழைந்தார்.

''முதலில் சூடாக இரண்டு வெங்காய பஜ்ஜி இருந்தால் கொடு'' என்றார். சர்வர் கொண்டு வந்து வைத்த பஜ்ஜியை சாப்பிட்டபடியே, ''தம்பி, சூடான பஜ்ஜி கேட்டால் ஆறிப்போன பஜ்ஜியாகக் கொடுத்துவிட் டாயே!'' என்றார் டி.எம்.எஸ்.

சர்வர் வெடுக்கென்று, ''என்ன சார் பண்றது? எல்லாமே போடும்போது சூடாகத்தான் இருக்கு. பிறகு ஆறித்தான் போகும். சரி... காபியா, டீயா? எது வேணும்?'' என்றார் படபடப்பாக.

டி.எம்.எஸ். சிரித்தபடியே, ''ஒன்றும் வேண்டாமப்பா'' என்று சொல்லிவிட்டு, கை கழுவப் போய்விட்டார். வந்ததே கோபம், சர்வருக்கு! டி.எம்.எஸ்ஸைப் பார்த்து, ''ஏன் சார்... சாப்பிட்டதும் ஜோரா கை கழுவப் போயிட்டீங்களே, இலையை யார் எடுப்பது?'' என்றார்.

''ஓ! இங்கே, சாப்பிட்டவர்களே இலையை எடுக்க வேண்டுமா? எனக்குத் தெரியாதப்பா!'' என்று டி.எம்.எஸ். சொல்லிக்கொண்டிருந்த போதே அவரது நண்பர் ஒருவர், தன் இலை யோடு டி.எம்.எஸ்ஸின் இலையையும் எடுத் துப் போய்விட்டார்.
''சாப்பிட்டவர்களே இலையை எடுக்க வேண்டும் என்று ஒரு போர்டு போடக் கூடாதா தம்பி?'' என்றார் டி.எம்.எஸ். சர்வர் கோபத்தோடு அடுத்த ஹாலை கையைக் காட்டி, ''அங்கே போர்டு இருக்கு சார்'' என்றார்.

''தம்பி! இங்கேயும் ஒரு போர்டு வைக்கணும்ப்பா! சர்வர் என்றாலே இரண்டு குணங்கள் அவசியம். இனிமையான சொல்லில் வரவேற்பு உபசாரமும், சாந்தமான பதிலும் வேணும்ப்பா!'' என்று புன்முறுவலோடு சொல்லிவிட்டு, நண்பர்களோடு கிளம்பிப் போய்விட்டார் டி.எம்.எஸ்.

சிலையாக நின்ற சர்வர் தன் தவற்றை உணர்ந்தவராக, அருகில் இருந்த என்னிடம், ''சார், என் மேலேதான் தப்பு! அதுக்குக் காரணம், இன்னிக்குத் திருநெல்வேலி பொருட் காட்சியிலே நடக்கிற டி.எம்.எஸ். கச்சேரிக்குப் போக லீவு கேட்டேன். கிடைக்கலை. அந்த எரிச்சல்லதான், வந்த கஸ்ட மர்கிட்டே கொஞ்சம் ஆத்திரமா பேசி நடந்துக்கிட்டேன். நான் டி.எம்.எஸ். ரசிகன் சார்!'' என்றார்.

''அடப் பாவி! இப்ப சாப்பிட்டுட்டுப் போறவர்தான் உன் அபிமான பாடகர் டி.எம்.எஸ்.'' என்றேன். 'அப்படியா!' என்று அலறியபடியே டி.எம்.எஸ்-ஸிடம் மன்னிப்புக் கேட்க ஓடினார் சர்வர். ஆனால், அதற்குள் காரில் பறந்து போய் விட்டிருந்தார் டி.எம்.எஸ்.!

-கோவில்பட்டி என்.சௌந்தரன்