Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


பொக்கிஷம்
27.3.1960
தலையங்கம்
ஈழத்தில் பொதுத் தேர்தல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்

சென்ற 19-ம் தேதியன்று இலங்கையிலே பொதுத் தேர்தல் நடந்தேறியது. இத்தேர்தலின் முடிவை ஆசிய மக்களனைவருமே ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

பண்டாரநாயகா படுகொலை செய்யப்பட்ட பிறகு, இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. புதுப் பிரதமர் தகநாயகா பதவியேற்றதிலிருந்தே மந்திரி சபையிலும் நெருக்கடி முற்றியது. இக்கொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக் கப்பட்ட சில மந்திரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். புதுப் பிரதமரின் கொள்கை பிடிக்காமல் சிலர் தாங்களாகவே விலகினர். சிலரை அவரே விலக்கி, போனவர் களைத் திருப்பி அழைத்து, மந்திரி சபையை மாற்றி அமைத்தார்.

இதன் காரணமாக ஆளும் கட்சியிலேயே பெரும் பிளவு ஏற்பட்டது. பண்டார நாயகா ஏற்படுத்திய பெராமுனா கூட்டணி அடியோடு தகர்ந்தது. இதைப் பார்த்த எதிர்க்கட்சிகள் எக்காளமிடலாயின. பொதுத்தேர்தல் நிச்சயமானவுடன் மேலும் பல புதுப்புது கட்சிகளும் தோன்றின. இந்தத் தேர்தலில் மட்டும் இருபத்திரண்டு கட்சிகள் கலந்துகொண்டிருக்கின்றன. பண்டார நாயகவின் இலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவர் மனைவியாரே தலைவராக நின்று போட்டியிட்டிருக்கிறார். இலங்கையெங்குமே ஒரே அரசியல் கொந்தளிப்பு!

இந்த நிலையில் எந்தக் கட்சியாவது பூர்ண மெஜாரிட்டி பெற்று, நிரந்தரமான சர்க்கார் அமையுமா என்பது தெரியவில்லை.

இந்தத் தேர்தலுக்குப் பிறகாவது இலங்கைத் தமிழர்கள் மொழி உரிமை கிடைக்குமா, இலங்கையில் குடியேறியுள்ள இந்தியர்கள் பிரஜா உரிமை பெற்று நிம்மதியாக வாழ முடியுமா என்பதைப் பற்றி அறிய தமிழ்நாட்டினர் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள்.

 
தலையங்கம்
தலையங்கம்