Published:Updated:

வருஷம் 16

வருஷம் 16


பொக்கிஷம்
5.3.1989
வருஷம் 16
வருஷம் 16

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வருஷம் 16

மினி..!

குழப்பமில்லாத திரைக்கதை, மிகையில்லாத நடிப்பு, செயற்கை கலக்காத வசனம் படம் முழுக்க... ஆகவே, மெயின் கதை தாமதமாக 'பிக்-அப்' ஆனாலும், தொய்வு உணரப்படாத அளவுக்கு முன்பாதியும் சுறுசுறுப்பாக இருப்பதால் மறப்போம்; மன்னிப்போம்!

மாக்ஸி..!

பதினாறு வருட சிறைவாசம் முடிந்து முகம் நிறைய தாடியும், முதுகு மறைய சால்வையுமாக அந்தக் கிராமத்து வீட்டுக்குள் கார்த்திக் நுழையும்போது, அவரது எண்ண ஓட்டம் 16 வருடங்களுக்குப் பின்னோக்கிச் செல்கிறது!

வருஷம் 16

அரண்மனை மாதிரியான அந்த வீட்டில் வருஷத்துக்கு 11 மாதங்கள் தன்னந்தனியாக இருப் பார் பூர்ணம் தாத்தா. 12-வது மாதம் விடுமுறைக்காகத் தாத்தா வின் வாரிசுகள் ஒரு பட்டாளமாக அங்கு வந்து இறங்குவார்கள். சிறுசுகள் கும்மாளம் போடுவார்கள்! இவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வதோடு ரசிக்கவும் செய்வார் பூர்ணம்!

இப்படி ஒரு விடுமுறையின்போதுதான் பேரன் கார்த்திக், மாமா மகள் குஷ்புவை முதலில் தமாஷாகவும், பின்னர் சீரியஸாகவும் காதலிக்க... வில்லன் ரூபத்தில் டில்லியிலிருந்து வந்திறங்கும் குஷ்புவின் அத்தை மகன் இந்தக் காதலுக்கு முக்கோண வியூகம் அமைக்க... ஒரு திருவிழா தினத்தன்று நடக்கும் கோஷ்டிப் பூசலில் டில்லிக்காரரின் துப்பாக்கி எக்குத்தப்பாய் வெடித்துக் குஷ்புவை க்ளோஸ் பண்ணிவிடுகிறது. பதிலுக்குத் துப்பாக்கிக்காரரை இ.பி.கோ-302 பண்ணிவிட்டு கார்த்திக் காராக்கிரகம் போவ தோடு ஃப்ளாஷ்பேக் முடிகிறது.

வருஷம் 16

ஜட்ஜாக இரண்டேகால் காட்சி, டாக்டராக, ஒண்ணேமுக்கால் காட்சி என்று வழக்கமாகத் தலை காட்டிவிட்டுப் போகும் பூர்ணத்துக்கு இந்தப் படத்தில் ரன்னிங் ரோல்! நாடக அனுபவங்களெல்லாம் துணை நிற்க, நடிப்பில் 'வீடு' கட்டிச் சிலம்பம் ஆடு கிறார். பலே... பலே!

ஒரு பெரிய திருவிழா... அங்கே குஷ்புவுக்கு நடன அரங்கேற்றம். அது முடிந்ததும் ஓர் அடிதடி. தொடர்ந்து கொலை. அசல் கோபம், அசல் சோகம், அசல் ஆத்திரத்தோடு அந்தக் காட்சியில் கார்த்திக் நடிக்கிற அழகு... கட்டிப்பிடித்துக் கொள்ளத்தான் அவர் பக்கத்தில் இல்லை!

ஆனந்த குட்டனின் காமிரா வும், இளையராஜாவின் இசையும் பாசிலுக்கு இடது வலது கரங்கள்! ஒரு சண்டைக் காட்சியின்போது, பின்னணியில் 'ஜதிகள்' சொல்ல வைத்திருப்பது வித்தியாசமான ஒலியமைப்புக் கற்பனை!

- விகடன் விமரிசனக் குழு

 
வருஷம் 16
வருஷம் 16