Published:Updated:

சர்ச்சிலின் பாதாள அறை !

சர்ச்சிலின் பாதாள அறை !


பொக்கிஷம்
6.5.1984
சர்ச்சிலின் பாதாள அறை !
சர்ச்சிலின் பாதாள அறை !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சர்ச்சிலின் பாதாள அறை !
சர்ச்சிலின் பாதாள அறை !

பிரிட்டனின் சரித்திரத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் ஓர் அத்தியாயம். இரண்டாவது உலகப் போரின்போது இங்கிலாந்தின் முதல் 'யுத்த தளவாடம்' (War Machine) என்று வர்ணிக்கப்பட்ட சர்ச்சில், ஒரு பாதாள அறையில் உட்கார்ந்துகொண்டுதான் போர் சம்பந்தப்பட்ட பல முக்கிய முடிவுகளை எடுத்தாராம். இந்தப் பாதாள அறை, ரகசியத்துக்காக மட்டுமில்லாமல் எதிரிகளின் சரமாரியான குண்டுப் பொழிவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவியிருக்கிறது. 1939-ம் ஆண்டிலிருந்து 1945-வரை சர்ச்சிலால் உப யோகப்படுத்தப்பட்ட இந்தப் பாதாள அறை War Cabinet என்று அழைக்கப்படுகிறது. அதிக மாற்றங்கள் இல்லாமல், சமீபத்தில் லண்டனில் பொதுமக்கள் பார்வைக்கு இது திறக்கப்பட்டிருக்கிறது. திறப்புவிழாவின்போது சர்ச்சிலின் பேரனும் கொள்ளுப்பேரனும், தாத்தா உபயோகப்படுத்திய நாற்காலியில் சிறிதுநேரம் உட்கார்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் போனார்கள்.

பூமிக்கு 63 அடி கீழே இருக்கும் இந்தப் பாதாள அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார் சர்ச்சில். இந்தப் பாதாள அறையில் இருந்துகொண்டே போரின்போது சர்ச்சில் மக்களுடன் வானொலி மூலம் தொடர்பு கொள்ள வசதியாகச் 'சிறிய வானொலி நிலையம்' ஒன்றும் இங்கே அமைக்கப்பட் டிருந்தது. இங்கிருந்து பல உணர்ச் சிகரமான சொற்பொழிவுகளை சர்ச்சில் வானொலி மூலம் அவ்வப்போது ஆற்றி, மக்களின் வீர, தியாக உணர்ச்சிகள் குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

1943-ம் ஆண்டில், அமெரிக்கா போரில் பங்கெடுத்துக்கொண்டபோது, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் சர்ச்சிலும் நேரிடையாக பேசிக்கொள்ள 'ஹாட்- லைன்' தொலைபேசி வசதியை அமெரிக்க டெலிபோன் கம்பெனி ஒன்று அமைத்துக் கொடுத்தது. 'ஹாட்-லைன்' சாதனத்தை இந்தப் பாதாள அறைக்குள் கொண்டு போகமுடியாமல் இரண்டு மைலுக்கு அப்பால் மற்றொரு சுரங்க அறையில் அதை வைத்து, இரண்டு சுரங்கங்களையும் இணைத்திருக்கிறார்கள்!

ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயித்த இந்தப் பாதாள அறையிலிருந்து வெளியே வரும் போது, நம் தலை மீது குண்டுகள் விழுவது போன்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. கடவுளே.. இரண்டாம் உலகப் போரைக் கடைசி உலகப் போர் என்று பெயர் மாற்றிவிடுவோம். இன்னொரு பயங்கரப் போரை இந்த சிறிய உலகம் தாங்காது!

- எஸ்.ராமன்

 
சர்ச்சிலின் பாதாள அறை !
-
சர்ச்சிலின் பாதாள அறை !