Published:Updated:

மிலிட்டரி பெல்ட் ரகசியம் !

மிலிட்டரி பெல்ட் ரகசியம் !


பொக்கிஷம்
26.2.1967
மிலிட்டரி பெல்ட் ரகசியம் !
மிலிட்டரி பெல்ட் ரகசியம் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிலிட்டரி பெல்ட் ரகசியம் !
எல்.விஜயலட்சுமி சொல்லும் அழகுக் குறிப்புகள்

மிலிட்டரி பெல்ட் ரகசியம் !
"அழகுக் குறிப்புகளா? எங்க அப்பாவைக் கேளுங்கள்!" என்று சொல்லக்கூடிய ஒரே நட்சத்திரம் எல்.விஜயலட்சுமியாகத்தான் இருக்க முடியும்.

"டூ யூ நோ விஜி, சின்னவளாக இருந்தபோது அவ அம்மா தினம் தினம் அவளை விளக்கெண்ணெய் போட்டு மஸாஜ் செய்து குளிப்பாட்டுவாள். அதனால்தான் இவ இப்படி இருக்கா" என்று சொன்ன அவருடைய அப்பா, "விஜி, இப் பொழுது ரெகுலராக 'ஸ்டீம் பாத்' எடுத்துக்கறயா?" என்று விசாரித்தார்.

"போங்கப்பா..." என்று செல்ல மாகச் சிணுங்கிய விஜி, "தண்ணீ ரைக் கொதிக்கவிட்டு ஆவி பிடித் தால் முகத்திற்கு நல்லது என்று எங்கேயோ படித்துவிட்டு, என் னையும் செய்யச்சொல்லி தொந்த ரவு செய்வார் அப்பா. அவருக்காக சில சமயம் அதையும் செய்து பார்ப்பேன்" என்றார்.

"முகத்திற்கு வேறு ஏதாவது அழகுக் குறிப்புக்ள்?"

"பாலேடுடன் சிறிது எலுமிச்சம் பழ ரசத்தையும் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறிய பிறகு முகம் கழுவுவேன்..."

"அப்புறம் கஞ்சி..." என்று ஆரம்பித்தார் அப்பா.

"அட! அதென்ன?"

"சாதம் வடித்த கஞ்சியை உடம்பிற்கும் கூந்தலுக்கும் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு குளிப் பேன்."

"அப்பா சொன்னது போல் இப்பொழுதும் விளக்கெண்ணெய் தேய்த்துக் குளிப்பதுண்டா?"

"இல்லை. தேங்காயெண்ணெய் தான். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் உடம்பிற்கும் தேங்காய் எண்ணெய் தேய்த்து, பிறகு கடலை மாவு பூசிக் குளிப்பேன். ஆனால், அப்பா சொல்வது போல் விளக்கெண்ணெய் உடம் பிற்கு ரொம்ப நல்லது. எனக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது நாட்டியக் கச்சேரி இருக்கும். அப் பொழுது நாட்டியமாடிவிட்டு வந்ததும், உள்ளங்காலில் சிறிது விளக்கெண்ணெயைத் தேய்த்துப் படுப்பேன். தினம் இரவு தூங்கும் முன், கண் இரப்பை முடியில் இரண்டு சொட்டு விளக்கெண் ணெயைத் தடவிக் கொண்டுதான் தூங்குவேன். இப்படிச் செய்தால் இரப்பை முடி நீளமாக வளருமாம்..."

"மிலிட்டரி பெல்ட்டைப் பற்றிச் சொல்லு!" என்று விஜியின் அப்பா சீண்டினார். "ஐயோ, என் னப்பா, அதையெல்லாம் போய்ச் சொல்லுவாங்களா?" என்று விஜி மறுக்க...

"அது ஒரு 'காட்ஜெட்', வெளிநாட்டிலிருந்து வரவழைத்தேன். என்.ஸி.ஸி. பெல்ட் போல இருக் கும். அந்த பெல்ட்டை வேண்டிய மட்டும் இறுக்கிப் போட்டுக்கொள் ளலாம். இதை உபயோகித்தால் நாளாவட்டத்தில் இடுப்பு குறுகி, உடுக்கைபோல் ஆகிவிடும்" என்று அப்பாவே விளக்கினார்.

- சசிகலா

 
மிலிட்டரி பெல்ட் ரகசியம் !
மிலிட்டரி பெல்ட் ரகசியம் !