Published:Updated:

மாலதி

மாலதி


பொக்கிஷம்
மாலதி
மாலதி தேவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாலதி

அத்தியாயம்: 4

மாலதி

பங்களாவைச் சுற்றிலும் இருந்த சிறு நந்தவனமும் வெண்மையான காம்பவுண்டுச் சுவரும் நிலவொளியில் பிரகாசமாகத் தோன்றின. உள்ளே நுழைய வாசற் கதவு இடம் கொடுக்கவில்லை என்று கண்ட சந்துரு, வராந்தாவிலிருந்து மெள்ள இறங் கிச் சுவரோரமாகவே தன் அறைக்கு நேரே வந்தான். வராந்தாவில் படுத்திருந்த தோட்டக்காரக் கண்ணுசாமியின் குறட்டையைத் தவிர எங்கும் நிசப்தமாகவே இருந்தது. சந்துரு தன் அறை ஜன்னலின் பக்கம் வந்ததும், வீட்டிற்குள் தடதடவென்று நடமாடுவது போன்ற அரவம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றான். திடீரென்று காமேசுவரய்யரின் குரல், "திருடன்! திருடன்!" என்று எழுந்தது. அதே கணம் வாசற் கதவு வேகமாகத் திறந்த சப்தமும் கேட்டது.

வீட்டின் பக்கவாட்டில் சந்துரு இருந்ததால், வாசலில் நடப்பதுஎன்னவென்று அறிய முடியாமல் திகைத்தான். இந்தச் சமயத்தில் தன்னைத் தாண்டிக்கொண்டு யாரோ ஒருவன் புழக்கடைப் பக்கம் ஓடுவதைச் சந்துரு உணர்ந் தான். மறுகணம் சந்துரு அவனைத் துரத்திக் கொண்டிருந்தான்!

பங்களாவின் பின்புறத்தை அடைந்ததும் அந்த மனிதன் காம்பவுண்டுச் சுவரேறிக் குதிக்கும் தறுவாயில், சந்துரு அவனைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டான். மேகங்களிலிருந்து விடுபட்ட சந்திரனுடைய ஒளியில், தான் பிடித்த மனிதன், அன்று காலை மாலதியுடன் பேசிவிட்டு ஸைகிளில் சென்ற இளைஞன்தான் என்பது சந்துருவுக்கு உடனே விளங்கிற்று. அவன் ஒரு குரல் கொடுத்து வீட்டிலுள்ளவர்களை அழைக்கச் சித்தமாகும்போதே, புழக்கடைக் கதவு எதிர்பாராத விதமாகத் திறந்து கொண்டது. அளவற்ற ஆச்சரியம் அழகிய வதனத்தில் தோன்ற, மாலதி அங்கே நின்றாள்!

"மிஸ்டர் சந்திரன்! அவனை விடுங்கள். அவன் நிரபராதி" என்றாள் மாலதி.

சந்துரு சற்றுத் தயங்கினான். அவள் மீண்டும், "அவன் என் சகோதரன்!" என்றாள். சந்துருவுக்கு மனதிலிருந்து ஒரு பெரும் பாரம் நீங்கியது போல் பிரமை உண்டாகியது. பிடியைத் தளர்த்தினன். அடுத்த கணம் அந்த இளைஞன் தப்பித்துக்கொண்டான்! மாலதியின் கண்களில் நன்றி சுரந்தது.

சந்துரு திரும்பி வந்தபோது காமேசுவர அய்யர், "ஐயோ! வைரக் கம்மல்கள் போய் விட்டனவே!" என்று அலறிக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

தற்செயல் அஞ்சலி !

மாலதி

அரியக்குடி அவர்கள் ஜனவரி 23-ம் தேதி மறைந்தார். 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.35-க்கு, சென்னை வானொலியில் அவர் கச்சேரியை ஒலிபரப்பினார்கள். அவருக்கு அஞ்சலி செய்வதுபோல அமைந்துவிட்ட அந்தக் கச்சேரி, திடீரென்று அவர் மறைவிற்காக வைக்கப்பட்டதல்ல! முன்பே ‘வானொலி’ புத்தகத்திலேயே வெளியிட்டபடி கச்சேரி ஒலிபரப்பானது. அதேபோல, ஜனவரி 20-ம் தேதி வெள்ளியன்று, சௌடையா அவர்கள் காலமானார். 21-ம் தேதி காலை 6.45-க்கு சென்னை வானொலியில் அவர் கச்சேரி ஒலிபரப்பானது. இதுவும், முன்பே வானொலியில் வெளியானபடியே அஞ்சல் செய்யப்பட்ட நிகழ்ச்சிதான்! (26.2.1967)

 
மாலதி
மாலதி