Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


பொக்கிஷம்
 
காலப்பெட்டகம்
காலப் பெட்டகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்த 'ஒளவையார்' திரைப்படம், தமிழ்ப்பட உலகில் ஒரு மகத்தான புரட்சியைச் செய்து விட்டது. இந்தப் படம் வெளியாக விருந்த சமயத்தில்தான், கலா சாரத்தை சினிமா கெடுப்பதாகக் கண்டித்து, 'யாரும் சினிமா பார்க்காதீர்கள்' என்று கேட்டுக் கொண்டிருந்தார் மூதறிஞர் ராஜாஜி. அவரையே அழைத்து 'ஒளவையார்' திரைப்படத்தைப் போட்டுக் காண்பித்து, 'பிரமாண்டமான படம்' என்று அவரின் வாயாலேயே பாராட்டுப் பெற்றார் வாசன். விகடனில் 'ஒளவையார்' படத்துக்குத் தனியாக விமர்சனம் எதுவும் எழுதப்படவில்லை. மாறாக ரசிகர்கள், கல்வியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரிடமிருந்தும் வந்து குவிந்த கடிதங்களே தொடர்ந்து பத்துப் பன்னிரண்டு வாரங்களுக்குப் பிரசுரிக்கப்பட்டன. (இதைத் தொடக்கமாகக் கொண்டுதான் ஆனந்தவிகடனில் நேயர்கள் கடிதம் பகுதி ஆரம்பமானது!)

அவற்றிலிருந்து இங்கே மாதிரிக்குச் சில...

அன்பார்ந்த ஸ்ரீ வாஸன் அவர்களுக்கு,

காலப்பெட்டகம்

புகழ்வாய்ந்த நடிகையாகிய ஸ்ரீமதி சுந்தராம்பாளுக்கு நீங்கள் கொடுத்த ஒளவையின் பாத்திரம் மிகவும் பொருத்தமானது. அவரு டைய இயற்கையான நடிப்பும், பாட்டும் என் போன்ற ஆங்கிலேய னையும்கூட மேலும் விரும்பச் செய்கிறது. இந்தப் படம் ஜனங் களை மெய்ம்மறக்கச் செய்வதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை.

தங்கள்,
காப்டன் பியரஸ் ஜெர்விஸ்,
பிலிம்ஸ் ஆபீஸர், பிரிட்டிஷ்
இன்ஃபர்மேஷன் ஸர்வீஸ், புதுடில்லி.

அன்புள்ள ஐயா,

என் வாழ்நாட்களில் எவ்வ ளவோ சினிமாப் படங்களைப் பார்த்திருந்தும், அவற்றில் எதுவும் தற்போது ஓடுகின்ற ஒளவையார் படத்திற்கு ஈடாகாது என்பது என் தீர்மானம். ஏனென்றால், இந்தப் படத்தில் பண்டைத் தமிழ்நாட்டின் நீதியையும் நற்பண்பையும் சிறந்த முறையில் ஒளவைப் பிராட்டியின் மூலம் விளக்கித் தந்துவிட்டீர் கள்.

தங்கள்,
முகம்மது இஸ்மாயில்,
வடகரை, ஏனங்குடி (வழி)

மதிப்பிற்குரிய ஸ்ரீ வாஸன் அவர்களுக்கு,

பிரணாம். சமீபத்தில் நான் சென் னைக்கு வந்திருந்த சமயம் தங்கள் 'ஒளவையார்' படத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. உண் மையில் அது எனக்கு ஒரு பொன் னான சந்தர்ப்பம். சங்கீதத்தின்பால் உங்களுக்குள்ள பிரேமைக்கும், கடவுளிடம் பக்திக்கும் 'ஒளவை யார்' ஒரு பூர்ணமான அத்தாட்சி. முக்கியமாக, ஸ்ரீமதி சுந்தராம்பாளின் அரிய செயல்களைக் கண்டு வரும் போதே என் கண்களில் பல முறை நீர் நிரம்பிவிட்டது.

காலப்பெட்டகம்

அவர் ஏற்று நடித்த பாகத்தைப் பார்த்து, அவருடைய சங்கீதத்தை யும் கேட்டபிறகு வெட்ட வெளிச்ச மாக எனக்கு ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. உண்மைக் கலைஞர்களின் கீதத்திலேயுள்ள இனிமையும் சுவையும், அவர்களுடைய இதயத்தின் மேன்மையிலும் நாதோபாஸனையிலும் கலையிடம் கொண்டுள்ள பக்தியிலும் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

நானே விநாயகராயிருந்தால் இம்மாதிரி உணர்ச்சியுடன் பாடும் ஒரு தொண்டரை-தொண்டருக்கும் தொண்டன் என்ற முறையில் அவரைத் தொழுதுகொண்டே இருப்பேன். இதற்குமேல் அவர் மீது எனக்குள்ள மதிப்பை வெளி யிட வார்த்தைகள் அகப்பட வில்லை!

பொதுஜனங்களுக்கு இணை யற்ற படம் ஒன்றை அளித்ததற்கு உங்களை நான் பாராட்டுகிறேன். படங்களில் கர்னாடக சங்கீதம் சோபிக்காது என்று சொல்கிறவர் களுக்கு 'ஒளவையார்' படம் ஆணித்தரமாக பதில் கொடுக்கும்.

தங்கள்,
லதா மங்கேஷ்கர்.

'குழந்தைகளுக்கு மட்டும்'

சென்னை நகரிலுள்ள பள்ளிக் குழந்தைகள் 'ஒளவையார்' படத் தைப் பார்க்க மிகுந்த ஆவல் தெரி வித்ததை முன்னிட்டுச் சென்ற சனிக்கிழமை காலை, வெல்லிங்டன் தியேட்டரில் குழந்தைகளுக் கென்றே விசேஷமாக ஒரு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்டண விஷயத்திலும் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. லேடி வெல்லிங்டன் உயர்தரப்பள்ளி, திருவல்லிக்கேணி தேசியப் பெண் கள் பள்ளி இவற்றைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குழந்தைகள் தங்கள் தலைமை உபாத்தியாயினிகளோடு 'ஒளவையார்' படத்தைப் பார்த்து மனமகிழ்ந்தார்கள்.

காலப்பெட்டகம்

ஸ்ரீமதி பட்டம்மாள் வாஸன் வந்தவர்களுக்கு வந்தனம் செலுத் திப் பேசுகையில், ''குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்த்து அனுப விப்பதைக் காணும்போது எனக்கே இந்தப் படத்தின் மேல் மதிப்பு உயர்ந்திருக்கிறது. குழந்தைகள் இந்தப் படத்திலுள்ள அரிய போத னைகளை மனத்தில் கொள்ள வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து ஹாஸ்யமாக, ''ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒளவையாரை நீங்கள் பின்பற்ற வேண்டாம்; அதாவது, கல்யாணமே வேண்டாம் என்று இருந்துவிட வேண்டாம். நீங்களெல்லாம் பெண் திலகங்களாக வளர்ந்து, குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

'ஒளவையார்' படத்துக்கான பாராட்டு விழாவில், 'கல்கி' ஆசிரியர் ஸ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சு மிகவும் கவர்ச்சியுடன் அமைந்திருந்தது. ''ஒரு விழாவில் பேசுபவர்கள் 'எனக்குத் தெரியாது' என்று ஆரம்பிப்பது ஒரு வழக்கம். நானும் அவர்களைப் பின்பற்றியே 'ஸ்ரீ வாஸனைப் பற்றி எனக்குத் தெரியாது!' என்று கூறுகிறேன்'' என்று ஒரு கணம் எல்லாரையும் திகைக்க வைத்தார். ''என்ன தெரி யாதென்றால்...'' என்று தொடர்ந்து, ''அவரை இருபத்தாறு வருஷங்களாக நான் அறிவேன். அவர் இத்தனை மகத்தான ஒரு அற்புத சித்திரத்தைத் தயாரிப்பார் என்பது எனக்கு இது வரை தெரியாது'' என்றார்.

''ஒளவையார் படம் வெளியான சந்தர்ப்பம் மிகவும் அரியது. இப் போது நடைபெறுவது ஆணும், பெண்ணும் சமம் என்னும் காந்திய யுகம்; ஐக்ய நாடுகளின் தலைமைப் பதவியில் ஓர் இந்திய ஸ்திரீ ரத் னம்-பண்டித விஜயலக்ஷ்மி - அமர்ந்திருக்கும் காலம். ராஜாஜி அவர்கள், ஸினிமா சென்றுகொண் டிருக்கும் பாதையைக் கண்டித்து 'சினிமா பார்க்காதீர்கள்' என்று பேசியிருக்கும் தருணம். இம்மாதிரி நிலையில் 'ஒளவையார்' தோன்றி யிருக்கிறது. அதுவும் எப்படி? கதா நாயகி, கதாநாயகன் இல்லாமல், ஒரு கிழவியையே முக்ய பாத்திர மாகக் கொண்டு, காதல் கட்டங்கள், குளத்தில் விழுதல், மாடிப் படியில் சறுக்கி விழுதல், அநாவசியமான ஹாஸ்யங்கள், ஆபாசமான சம்பா ஷணைகள் அறவே இன்றி, லக்ஷக் கணக்கான மக்களையும் ஆகர்ஷித் திருக்கிறது. இந்தச் சாதனை அதி ஆச்சரியமானது என்பதில் சந்தேகம் இல்லை'' என்று அவர் கூறினார்.

உதயமானது ஆந்திர மாநிலம்!

ஆந்திரம் வந்தது!

சுமார் முப்பது வருஷங்களுக்கு மேலாக நமது சகோதரர்களாகிய ஆந்திரர்கள், தங்களுக்கு ஆந்திர மாகாணம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்து வந்தார்கள். அந்தக் கிளர்ச்சியில் சென்ற வாரம் அவர் கள் முழு வெற்றியும் அடைந்து விட்டார்கள்.

சென்ற வாரம் புதன்கிழமை அன்று, பார்லிமென்ட் சபையில் பிரதம மந்திரி நேருஜி ஆந்திர மாகாணம் அமைத்துவிடச் சொல்லி, அதிகாரபூர்வமாகப் பிரகடனம் வெளியிட்டுள்ளார். புது மாகாணம், நாளது அக்டோபர் மாதம் 1-ம் தேதியைச் சுப தினமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்றும் குறிப் பிட்டிருக்கிறார். இவ்வாறாக ஆந்திரர்களின் நீண்ட கால மனோபீஷ்டம் ஒன்று நிறைவேறியது குறித்துச் சென்னை மாகாணவாசிகள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஆந்திர மாகாண அமைப்புப் பற்றி நேருஜி விடுத்த பிரகடனத்தில் தமிழ் மக்கள் பெருமிதம் கொள்ளக் கூடிய வெற்றி ஒன்றும் கிடைத் திருக்கிறது. அதுதான் சென்னை நகரத்தைப் பற்றிய முடிவு. ''சென்னை நகரம் ஆந்திர மாகா ணத்தைச் சேர்ந்ததல்ல'' என்று நேருஜி தமது பிரகடனத்தில் குறிப்பிட்டிருப்பதே தமிழர்கள் அடைந்திருக்கும் வெற்றியாகும்.

- 5.4.53
இதழ் தலையங்கத்திலிருந்து...

ஒரு காலத்தில், சென்னை நகரில் நடுவே ரயில் தண்டவாளங்கள் போலப் பதிக்கப் பெற்று டிராம் வண்டிகள் ஓடிக் கொண்டு இருந்தன. மின்சார உதவியால் இயங்கிய டிராம் சர்வீஸ் 1953-ல் நிறுத்தப்பட்டது. அது பற்றி 'ஊர் வம்பு'(26.4.53) பகுதியில்...

ஊர் வம்பு

சென்னையில் டிராம் ஸர்வீஸ் நிறுத்தப்பட்டுவிட்டது பற்றி பலர் பலவிதமான அபிப்பிராயம் கொண்டிருப்பது இயற்கைதான்.

காலப்பெட்டகம்

டிராம்வே லயன் திரும்பும் இடம் ஒன்றில் குடியிருக்கும் பிர முகர் ஒருவர் இந்த டிராம்கள் நின்றதிலிருந்து தமக்கு இரவில் தூக்கமே வரவில்லை என்கிறார். திருப்பங்களில் டிராம்கள் போடும் சத்தமே அலாதியானது. இந்தப் பிரமுகர் தினமும் இரவில் இந்தச் சத்தம் முடிவதற்காகக் காத்திருந்து கடைசி டிராம் போன பிறகுதான் தூங்கப்போவது வழக்கமாம். இப்படித் தினமும் இந்தக் கர்ண கடூரமான சத்தத்தை எதிர்பார்த்து அவருக்குப் பழக்கமாகி விட்டதாம். எனவே, சென்ற 12-ம் தேதி ஞாயிற் றுக்கிழமை இரவிலிருந்து இந்தச் சத்தம் கேட்காததால் ஏதோ பூர்த்தியாகாதது போன்ற உணர்ச்சி ஏற்பட்டு, அவருக்குத் தூக்கமே வருவதில்லையாம்.

வீடு கட்டப் புதுமனை வாங்கி அஸ்திவாரமும் போட்டுவிட்ட நகர வாசி ஒருவர் தமது கட்டட வேலையை ஒத்திப் போட்டிருக் கிறார். காரணம், டிராம்கள் நின்று விட்டதால் சில தினங்களில் இரும்பு மலிவாகக் கிடைக்கும் என்ற ஆசை தானாம். டிராம் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு விடுமா தலால் வீடு கட்டத் தூண்களுக்கும், கூரை போட உத்தரங்களுக்கும் அவற்றை மலிவாக வாங்கி விட லாம் என்று நினைக்கிறார் இவர். மிகவும் மலிவாகக் கிடைக்குமானால் டிராம் மின்சாரக் கம்பிகளையும் கம்பங்களையும் கம்பி வேலி போடவும் உபயோகப்படுத்தலாம் என்பது அவரது மனக்கோட்டை.

மற்றொரு நகரவாசிக்கு, சென்னையில் மாடி பஸ்கள் ஓடாதது பற்றி வருத்தமாகவே இருந்தது. இதற்குக் குந்தகமாக நின்றது டிராம்வேயின் மின்சாரக் கம்பிகள் தான். இனி அவை அகற்றப்படு மாதலால், மாடி பஸ்களில் நாலா புறமும் சுற்றிப் பார்த்துக்கொண்டே பிரயாணம் செய்யலாம்.

லோக சஞ்சாரம்: ஆஸ்திகம் ஓங்குகிறது!

''எந்த இயக்கமுமே எதிர்ப்பு இருந்தால்தான் நன்கு வளரும். தமிழ்நாட்டினர் இத்தனை நாளும் தங்கள் மதம் சம்பந்தமாக பாராமுக மாகவே இருந்தனர். யார் வேண்டு மானாலும் வரட்டும், என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும் என்ற அசிரத்தையுடன்தான் இருந்தனர். ஆனால் கொஞ்ச காலமாக, அதிர்ஷ்டவசமாக, கடவுள் நம்பிக்கைக்குப் பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக கடவுள் நம்பிக்கையும், கடவுள் பக்தியும் தமிழ்நாட்டில் ஓங்கி வளர ஆரம்பித்து விட்டது'' என்று பொருள்பட சமீபத்தில் ராஜாஜி பேசினார்.

இதை மெய்ப்பிப்பதேபோல் ஒரு பக்கம் கடவுள் எதிர்ப்பு முன்னைவிட அதிகமாக ஆரம்பித்திருக்கிறது. மண் பொம்மைகளை உடைப்பதன்மூலம் கடவுள் நம்பிக் கையைத் தமிழர்களின் இதயத்தி லிருந்து தகர்த்துவிட முடியும் என்று ஒரு சாரார் காரியங்கள் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இதன் விளைவாக, முன்னிருந்த கடவுள் நம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது என்று தோன்றும்படி சத்கால«க்ஷபங்களும், சமயப் பிரசாரங்களும் எங்கு பார்த்தாலும் வெகு மும்மரமாக நடந்து வருகின்றன.

எழும்பூரில் உள்ள ஆரணி மாளிகையில் சின்மயானந்த ஸ்வாமிஜி அவர்களால் தினம் மாலை ஆறரை மணிக்கு நடத்தப்படும் உபன்யாஸங்களுக்குச் சேரும் கூட்டம் சொல்லிமுடியாது.

மிக இளம் வயதினரான ஸ்வாமிகள் நமது வேதங்கள், உபநிஷத் துக்கள் முதலியவற்றில் வல்லுநராக இருப்பதோடு, ஆங்கிலத்திலும், தற்கால ஞானத்திலும் மிகவும் தேர்ச்சியடைந்திருக்கிறார். அதோடு ஹாஸ்யமாகப் பேசும் திறமையும் அவருக்கு நிறைய இருக்கிறது. ஆகவேதான் கம்பீரமான த்வனியில் அவர் நம் உபநிஷத்துக்களின் மேன்மையை எடுத்துச் சொல்லும் போது, ஆங்கில நாகரிகத்தில் மூழ்கிய சென்னைவாசிகள், ''ஆஹா, ஆஹா'' என்று வாயைப் பிளந்த வண்ணம் மெய்ம்மறந்து அவர் சொற்பொழிவைக் கேட்டு அனுப விக்கிறார்கள்; அவரோடு சேர்ந்து கொண்டு, ''ராம், ராம், ஓம், ஓம்'' என்று சென்னையே செவிடுபடக் கோஷமிடுகிறார்கள்.

இவருடைய அதியற்புதமான பிரசங்கங்களைக் கேட்கும்போதெல் லாம், ஸ்வாமி விவேகானந்தர் போன்ற மகான்கள் இதே முறை யில்தான் அமெரிக்கர்களின் உள் ளத்தைக் கொள்ளை கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

(31.5.53)

திரு.வி.க. மறைவு

திரு.வி.க. அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டுத் தமிழ்நாடே இன்று பெருந்துயரத்தில் ஆழ்ந் திருக்கிறது.

காலப்பெட்டகம்

திரு.வி.க. அவர்கள் சிறிது காலமாகவே மிக அசௌக்கியமாய் இருந்தார் என்பதை அனைவரும் அறிவர். எனினும், தமிழ் முழக்கம் கேட்கும் இடங்களிலே அவர் விஜயம் செய்யாமல் இருந்ததில்லை. சென்ற 17-ம் தேதி இரவு அவர் தேக வியோகமானார். அன்னாரு டைய இறுதிச்சடங்கின்போது குழுமியிருந்த ஜனத்திரளே தமிழர் கள் பக்தியை அவர் எவ்வளவு தூரம் பெற்றிருந்தார் என்பதற்குச் சான்றாகும்.

தமிழ் மொழிக்கு திரு.வி.க. செய்துள்ள சேவை ஈடு இணையற் றது. அறநூல், அறிவியல், அரசியல், சமூக வாழ்க்கை என்ற எல்லா பகுதிகளிலும் பெரும் இலக்கியங் களை அவர் தமிழ் மக்களுக்கு நல்கியுள்ளார். பெண்ணின் பெருமை, குறள், பெரிய புராண ஆராய்ச்சிகள், 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' போன்ற நூல்கள் அவருக்குத் தமிழுலகில் நிரந்தரமான ஸ்தானம் அளித்துவிட்டன. தமிழ் மொழிக்கு நவசக்தி அளித்த தமிழ்ப் பெரியார் அவர். பெரிய பெரிய கருத்துக்களையெல்லாம் மிக எளிய நடையில் எடுத்துக்காட்டும் வன்மை திரு.வி.க.விடம் விசேஷமாக அமைந்தது. பொதுவாக அவரு டைய எழுத்து வன்மையும், சொல் நயமும், அரசியலில் பேச்சுத் திறனும் தமிழ் மக்கள் உள்ளத்தில் அவர்பால் பெரு மதிப்பையும் அன்பையும் உண்டாக்கிவிட்டன.

திரு.வி.க. அவர்களின் தன் னலமற்ற வாழ்க்கையே மக்களுக்கு ஒரு லக்ஷ்ய வாழ்க்கையாக அமைந்துள்ளது எனலாம்.

அன்னார் மறைவினால் தமிழ் நாடு அதன் அருந்தவப்புதல்வர் ஒருவரை இழந்துவிட்டது.

தமிழுக்கு நஷ்டம்

மகா மகோபாத்யாயா பண்டித மணி கதிரேசன் செட்டியார் கால மான செய்தி கேட்டு வருந்து கிறோம்.

பண்டிதமணி அவர்கள் தமிழ் இலக்கியத்துக்குச் செய்துள்ள சேவை மகத்தானது. சொல் நயம் கொண்ட எளிய நடையில் தமிழ் நாடெங்கும் அவர் நிகழ்த்திய இலக்கிய சொற்பொழிவுகள் தமிழ் அன்பர்களுக்குக் கலை விருந்தாகவே அமைந்தன. உ.வே.சாமிநாதய்யருக்கு அடுத்து மகோபாத்யாயா பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டதே அவருடைய இலக்கியத் திறமைக்குச் சான்றாகும்.

பண்டிதமணி கதிரேசன் செட்டி யார் மதுரை தமிழ்ச் சங்கத்துடன் வெகு காலம் தொடர்பு கொண்டு தமிழ்ப் பணி ஆற்றியவர். அண் ணாமலை சர்வகலாசாலையில் 12 வருஷங்கள் தமிழ் இலாகாவில் சேவை செய்து, அதன் தலைவரா கவும் இருந்து பணி செய்திருக்கிறார். சென்னை சர்வகலாசாலை தமிழ் கல்விக் கமிட்டியின் தலைவராகவும் இருந்து சேவை செய்தவர்.

'சுக்ர நீதி', 'மிருச்சகடிகா', 'அர்த்த சாஸ்திரம்' போன்ற ஸம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஒரு பெரிய நஷ்டமாகும்.

 
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்