Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்


. பொக்கிஷம்
பிட்ஸ்
பிட்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"மயிலே, மயிலே... இறகு போடு என்றால் ஒரு நாளும் போடாது! நமது நாட்டின் சுதந்திரத்தை நாமே வலியப் போர் புரிந்து கைப்பற்றியாக வேண்டும். பிரிட்டிஷ்காரன் அவ னுக்காக நல்ல புத்தி தோன்றி அதிகாரத்தை ஒப்படைப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகவேதான், நாட்டைவிட்டு வெளியேறி, பிற நாட்டினர் உதவியுடன் இந்திய விடுதலைப் போரில் இறங்கியிருக் கிறேன். இதற்கு உங்கள் ஆசி வேண்டும்."

- 1944 ஜூலை 6-ம் தேதி வானொலிப் பேச்சு மூலம் மகாத்மா காந்திஜிக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விடுத்த செய்தி இது.

(26.1.64)


பிட்ஸ்

சென்னை தமிழிசைச் சங்கம் நடத்திய கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் போட்டியில் சீர்காழி கோவிந்த ராஜன் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். பரிசுக்கான ராஜாஜி யின் தம்பூராவை, அந்த விழாவுக்குத் தலைமை வகித்த நாமக்கல் கவிஞர், சீர்காழிக்குக் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தை அடிக்கடி பெருமையோடு நினைவுகூர்வார் சீர்காழி. "தமிழிசைச் சங்கம் நடத்தின கல்லூரியிலே மாணவனா சேர்ந்தேன்; அவங்க நடத்திய பாட்டுப் போட்டியிலே கலந்துக்கிட்டுப் பரிசு வாங்கினேன்; அதே கல்லூரியிலே இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என் னைக் கௌரவ முதல்வரா நியமிச் சாங்க. அதே தமிழிசைச் சங்கம்தான் இப்போ அடியேனுக்கு ‘இசைப் பேரறிஞர்’ பட்டத்தையும் அளிக்குது!" என்கிறார் சீர்காழி. தமிழிசைக்கும் சீர்காழிக்கும்தான் எத்தனை ராசி!

(17.10.82)


பிட்ஸ்

சீனாவில் ஆறாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் யாங் செங்யே. சில மாதங்களுக்கு முன்பு நம் உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிலநடுக்கச் சேதம் சீன டெலிவிஷனில் காட்டப்பட, யாங் செங்யே அதில் மனம் நெகிழ்ந்து, தான் சேர்த்து வைத்தி ருந்த ‘பாக்கெட் மணி’ (இந்தியக் கணக்குப்படி) ஐந்நூறு ரூபாயை நமது ஜனாதிபதி ஆர்.வி-யின் முகவரிக்கு அனுப்பி வைத்தான். அதே போல, காவ் ஜியாங்வோ என்னும் ஏழாம் வகுப்பு மாணவி, "சீன நாட்டுக்கு ஒருமுறை நீங்கள் அவசியம் வரவேண்டும்" என்று ஆர்.வி-க்கு ஒரு கடிதம் அனுப்பினாள். ஆர்.வி., இந்த இரு சீனக் குழந்தைகளுக்கும் பதில் எழுதினார். கூடவே, இந்த ஆண்டின் குடியரசுத் தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பும் விடுத்தார். அதன்படி இந்தியாவுக்கு விசிட் செய்த இரண்டு குட்டி விருந்தாளிகளும் ஒரு வார காலம் டெல்லியில் தங்கிக் குடியரசுத் தினவிழா அணிவகுப்பு மற்றும் பல சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டு மகிழ்ந்தார்கள்.

- திருமதி அருள்ஜோதி (8.3.92)


பிட்ஸ்

 
பிட்ஸ்
-
பிட்ஸ்