Published:Updated:

கமலுக்கு ஒரு மயிலு !

கமலுக்கு ஒரு மயிலு !


பொக்கிஷம்
21.5.1978
கமலுக்கு ஒரு மயிலு !
கமலுக்கு ஒரு மயிலு !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கமலுக்கு ஒரு மயிலு !

மே மாதம் 5-ம் தேதி பம்பாயில் கமலஹாசன் - வாணி கணபதி திருமணம் 'ஜாம் ஜாம்' என்று நடந்தது. திருமணத்திற்கு மறுநாள், 'மன்மத லீலை' திரைப்படத்தை வாணி கணபதி குடும்பத்துடன் ஒரு தனிப் பட்ட திரை அரங்கில் பார்த்தார் கமல்.

கமலஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் மாப்பிள்ளைத் தோழனாக இருந்து எல்லாம் கவனித்துக் கொண்டார்.

கமலுக்கு ஒரு மயிலு !

திருமண நிகழ்ச்சி அனைத்தையும் கலரில் திரைப்படமாக எடுத்தார் டைரக்டர் டி.என்.பாலு. முகூர்த்தம் முடிந்ததும் புது மணத் தம்பதி முதலில் டைரக்டர் பாலசந்தர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

திருமண வரவேற்புக்கு வந்த நடிகை ரேகா, கமலின் கன்னத்தில் முத்தமிட்டுத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்!

திருமண வரவேற்புக்குத் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். பரிசுப் பொருள் வரத் தாமதமானதால், முதலில் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த முதல்வர், பரிசுப் பொருள் வந்ததும் அதைக் கொடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை கமலஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

டி.கே.பகவதி, மணமக்களை ''பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க'' என்று வாழ்த்தி யவுடன் கமல் ஏதோ கூற வாயெடுத்தார். அதற்குள் பகவதியே ''பதினாறில் பதினான் கைக் கழித்துவிடு!'' என்றார் சிரித்துக் கொண்டே.

தகவல்: ரவி, ஸ்வேதா.


 

 
கமலுக்கு ஒரு மயிலு !
-
கமலுக்கு ஒரு மயிலு !