18-02-09

விகடன் பொக்கிஷம்

தலையங்கம்

கோயிலும் தி.மு.க-வும்

பாரத நாடு கடவுள் வழிபாட்டைப் போற்றும் நாடு. நம் நாட்டில் இருக்கும் ஆலயங்களை இதுவரை கணக்கிட்டு கூறிய வர்கள் கிடையாது. அதிலும், தென்னகத்தில்தான் அதிகமாகக் கோயில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று கண்டிப்பான கட்டளையிட்டுக் கடவுளை வணங்கிய பெருமை தமிழ் நாட்டுக்குத்தான் உண்டு. கோயில்கள் அநாகரிகத்தின் சின்னங்கள் என்றும், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்றும் பிரசாரம் செய்வதற்கும் நம் தமிழ்நாட்டில்தான் ஓர் இயக்கம் தோன்றியது!

பகுத்தறிவு இயக்கமான திராவிட கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர், தேர்தலில் கலந்துகொள்ளும் வரை தங்களுடைய நாத்திகக் கருத்துக்களை மிகக் கடுமையாகக் கூறி வந்தனர். பின்னர் அவர்களது பேச்சில் காரம் குறைந்து, மாற்றத்தின் சாயல் தெரிந்தது. நினைப்பதெல்லாம் நடத்திவிட முடியாது, சொன்னதையெல்லாம் செய்துவிட முடியாது என்ற உண்மையைத் தேர்தலும் பதவிப் பொறுப்பும் அவர்களை உணரச் செய்துவிட்டன. ஜனநாயகத்தின் மிகப் பெரிய லாபம் இது.

நம் கோயில்களைக் காப்பதில் இன்று தி.மு.க. அமைச்சரவையும், முக்கியமாக அற நிலைய ஆட்சித் துறை அமைச்சர் கே.வி.சுப் பையாவும் காட்டி வரும் அக்கறையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நம் ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுக் கொடுப்பதில் அமைச்சர் தற்போது தீவிரமாக முனைந் துள்ளதை ஆத்திக மக்கள் முழு மனத்துடன் வரவேற்பார்கள்.

மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வந்தர்களும் அந்தக் காலத்தில் கோயில்கள் சீராக நடைபெறுவதற்காக நிலங்களை மான்யம் விட்டுப் பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், நாளடைவில். அந்தச் சொத்துக்களெல்லாம் சுயநலவாதி களின் சொந்தமாகிவிட்டதால், ஆண்டவன் ஏழையாகி, பல கோயில் களில் எண்ணெய் விளக்கு எரிவதுகூட அரிதாகிவிட்டது.

மறைந்து கிடக்கும் சொத்துக்களைக் கண்டுபிடித்து, கோயில் களிடம் சேர்க்கும் நற்பணியில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், ஆலயங்களின் பண்டைய நடைமுறைகளை மாற்றி, லட்சக்கணக் கான ஆத்திகர்களின் மனத்தைப் புண்படுத்துவது சரியா என்று தி.மு.க. அரசு சிந்திப்பது நல்லது. சர்ச்சைக்குரிய வீண் மாற்றங்களைச் செய்து மக்களின் மனக் கசப்பை வளர்ப்பானேன்?