18-02-09

விகடன் பொக்கிஷம்

முத்தம் முதல்... பம்பரம் வரை..!

தமிழில் வெளிவந்த சமூகப் படமான 'மேனகா'வில்தான் (1935) காதலர்கள் முதன்முதலாகத் தொட்டுப் பேசினர். அதற்கு முன்புவரை அது காதல் ஜோடியாக இருந்தாலும் சரி, தம்பதியாக இருந்தாலும் சரி இரண்டு மூன்று அடி தள்ளி நின்றுதான் பேசுவார்கள்.

அவற்றை முறியடிப்பது போல 'மேனகா' படக் காதல் ரொம்ப ஹாட்!

அந்தப் படத்தில், டி.கே.சண்முகம் - கே.டி.ருக்மணி ஜோடி!

''நான் ருக்மணியை ஒரு கையால் அணைத்தபடி அவ ருடைய வலது கையில் முத்தம் கொடுக்கவேண்டும். எப்படி? கை விரல்களிலிருந்து தொடங்கி தோள்வரை முத்தமழை பொழிந்து கொண்டே போகவேண்டும். சரியாக ஒரு டஜன் முத்தங்கள். வெட்கத்தால் என் உயிரே போய் விடும் போலிருந்தது...'' என டி.கே.சண்முகம் கூச்சப்பட்டு நடுங்கி விட்டாராம், இந்தக் காட்சியில் நடிக்கும்போது!

திரைப்படங்களில் காதல் காட்சி களில் அடுக்கு மொழி மற்றும் அலங் கார வார்த்தைகளுடன் அழகுத் தமிழை வசனங்களில் புகுத்திய பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும்.

'அண்ணாவுக்குத் தம்பி சளைத் தவர் அல்ல' என அடுக்கு மொழி வசனத்தில் கலைஞர் கருணாநிதியும் கொடிகட்டிப் பறந்தார். 'மனோகரா' வில் (1960) - மனோகரன் (சிவாஜி) - விஜயா (கிரிஜா) இவர்களின் உரை யாடலே இதற்குச் சான்று!

அலங்கார வர்ணனையோடு கூடிய பேச்சு போய், சூட்டு - கோட்டு போட்ட மாடர்ன் காதலுக்கு

தர் டயலாக் எழுதிய 'எதிர்பாராதது' (1955) படத்தில்... சுமதி (பத்மினி) - சுந்தர் (சிவாஜி).

சுந்தர்: சுமதி! உன் பாட்டிலே நான் அப்படியே மெய்ம்மறந்து...

சுமதி: தூங்கிட்டீங்களா?

சுந்தர்: இல்லை சுமதி... நீ பாடியது வெறும் பாட்டல்ல! என் இதய நரம்பு களை ஒவ்வொன்றாக மீட்டி...

சுமதி: அடடே, வர்ணனை பண்ணக்கூடத் தெரியுமா?

சுந்தர்: இதென்ன பிரமாதம்! இன்னும் கேளு... அந்தரத்திலே அரங்கம் நிர்மாணித்து... அ... அ...

சுமதி: என்ன, 'அ'னாவிலேயே வரணும்னு தேடறீங்களா?

சுந்தர்: ஆமா... இரு... இரு... ஆழ் கடலின் நீளத்தைச் சுவராக நிறுத்தி... தவழ்ந்து செல்லும் காற்றைத் தரை யாக்கி, வண்ணமலர் இதழ்களை வகையாக அதில் பரப்பி, அந்த இனிய மாளிகையில் இதய ராணியான உன்னோடு இரவும் பகலும் இன்பத் தின் எல்லையில் மிதக்கத் துடிக்கிறேன் சுமதி!

சுமதி: ஒன்ஸ்மோர்..!

சுந்தர்: நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல்லை. ஒன்ஸ்மோ ராம்லே ஒன்ஸ்மோர்!.

'கல்யாண பரிசு' (1959) படத்தின் மூலம் 'காதல் என்றால்

தர்' என்ற அழுத்தமானதோர் இடத்தை இளசு களின் மத்தியில் தனக்கென தக்க வைத்துக் கொண்டார்

தர். இந்தப் படத்துக்குப் பிறகு அப்போதைய இளவட்டங்கள் மத்தியில் 'அம்மா போயிட்டு வரேன்' என்பது ஒரு சங்கேத வார்த்தையாகிப் பயங்கர பிரபலம்! காதலையே மையமாகக் கொண்ட அவரது 'காதலிக்க நேர மில்லை' படமும் படு சக்சஸ்!

தரின் சமகாலத்தவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் குடும்பக் கதைகளை எடுத்துக்கொண்டு அவற் றில் பாசத்தையும் உறவையும் படம் முழுவதும் வசனமாகவே கொட்டித் தீர்த்துவிடுவார். 1968-ல் வெளியான 'பணமா பாசமா?' படம் அவரை ஒரே தூக்காகத் தூக்கி வெற்றி சிம்மா சனத்தில் உட்கார வைத்துவிட்டது. இலந்தைப் பழக்காரி ஒருத்திக்கும் பணக்கார வீட்டுப் பையனுக்கும் இடையே காதல் முடிச்சைப் போட்டு, அதற்கு 'கிக்' தரும் வகையில் 'எலந்தப் பயம்' பாட்டைத் தோதாகப் போட்டு, ஊரில் நடந்த கல்யாணம் காட்சி, திருவிழா எங்கும் இந்தப் பாட்டை அலற அடித்துவிட்டாரே!

அறுபதுகளில்

தர், கே.எஸ்.ஜி., ஏ.பி.என். இவர்களுக்குப் பிறகு ஆக்டிங்குக்கு சிவாஜி, ஆக்ஷனுக்கு எம்.ஜி.ஆர். என்கிற இரு வேந்தர்களின் சாம்ராஜ்யம் வேரூன்றி வளர ஆரம் பித்தது.

சிவாஜியின் காதல் அலம்பலுக்கும் புலம்பலுக்கும் 'வசந்த மாளிகை' படம் ஒன்று போதுமே! கண்களா லேயே காதல் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்ட 'தில்லானா மோகனாம் பாள்' மற்றொரு கிளுகிளுப்பு இல்லையா?

எம்.ஜி.ஆர். படங்களை எடுத்துக் கொண்டால், அம்மாவோடு ஒரு சென்டிமென்ட் காட்சி - அடுத்து அடிதடி - அடுத்து ஒரு காதல் டூயட் இப்படித்தான் மாறி மாறி வரும். முழுக்க முழுக்க காதல் சப்ஜெக்டாக வைத்து எம்.ஜி.ஆர். நடித்த 'அன்பே வா' காதல் ரசம் ததும்பிய பாட்டுக் களுடன் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததை மறக்க முடியாது.

அறை முழுவதும் காதலன் - காதலி பெயர்களைக் கண்டபடி சுவரில் எழுதி வைப்பது - காதலனின் போட்டோவை எரித்துவிட்டு அந்தச் சாம்பலை காபி(?!)யில் போட்டுக் கலக்கிக் குடித்துவிடுவது - கதாநாயகன் அல்லது கதாநாயகியின் போட்டோக் களை 'ப்ளோ-அப்'களாக நிறையக் காட்டுவது என காதல் உணர்வைக் காப்பதில் வசனத்தைவிட விஷூவலில் விஞ்சி நிற்கிறார் டைரக்டர் கே.பால சந்தர்.

திடீரென்று 'புன்னகை மன்னன்' படத்தில் கமலையும் ரேகாவையும் முத்தம் கொடுக்க வைத்துத் திகைக்க வைத்ததும் கே.பி.-யின் 'டச்'களில் ஒன்று!

மற்ற காதலர்கள் நகரத்தில் உள்ள பீச்சிலும், பார்க்கிலும் மரங்களைச் சுற்றி வந்து காதலில் ஓடிக் களைத்துக் கொண்டிருந்தபோது... மிகவும் ஃப்ரெஷ்ஷாக கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள வயல், வரப்பு, தோப்பு, துரவு, அருவி, நீரோடை என கண் ணுக்குக் குளிர்ச்சியான பசுமையுடன் கிராமத்து 'மண்வாசனை'யோடு நளினமாக காதலைக் கண்முன் காட்டிப் பரவசப்படுத்தியவர் பாரதி ராஜா.

அவரது சிஷ்யர் பாக்யராஜ். ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு அப்பாவிக் கதாநாயகனாகவே ஒரு இமேஜை வளர்த்துக்கொண்டவர். எந்த விஷயத்தையும் நகைச்சுவை யோடு குழைத்துக் கொடுப்பார். நடுநடுவே, 'முருங்கைக்காய்', 'ஐஸ் புரூட் ஐயர்' என செக்ஸை நைஸாகப் புகுத்துவதிலும் பாக்யராஜ் படு கில்லாடி!

டி.ராஜேந்தர் எப்போதுமே 'ஒரு தலை ராகம்'தான். அவர் கோடம்பாக்கத்தில் அடியெடுத்து வைத்த நாட்களில் இருந்து தந்த அனைத்துப் படங்களிலுமே ஒரு தலைக் காதல்தான் பிரசித்தம்! அவருடைய கதை வசனத்தின் அழுத்தமான நீரோட்டமும் அதுதான். இந்தக் காதல், அடிப்படையில் பார்த்தால், 'மைதிலி என்னைக் காதலி' அவருக்கு ஒரு பெரிய ஹிட்!

இயக்குநர் பாலுமகேந்திராவுக்கும் காதல் காட்சிகளில் வசனங்களைவிட விஷூவலில் நாட்டம் அதிகம்! காதல் சப்ஜெக்ட்டில் இவருடைய மாஸ்டர் பீஸ் 'மூன்றாம் பிறை'.

காதலின் உச்சம் 'சின்னக் கவுண்டர்'. போட்டியில் கவுண்டர் (விஜய்காந்த்) ஜெயித்து, தெய்வானை (சுகன்யா)யின் தொப்புளைச் சுற்றிப் பம்பரம் விட, அவள் நாணி ஓட... கவுண்டர் கிண்டல் செய்து பாட்டு பாட... அப்புறமென்ன லவ்வோ லவ்வுதான்!

தமிழ்ப் படவுலகின் இன்றைய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றவர்கள் அவர வர் ஸ்டைலில் காதலில் கலக்குவதைத் தான் நாம் இப்போது கண்கூடாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே! அதனால், புதுசாக நான் வேறு அதை விவரிக்க வேண்டுமா என்ன?

- கேயெஸ்