18-02-09

விகடன் பொக்கிஷம்

புலியாய் சீறிய குயில்!

கவியரசி சரோஜினி தேவியின் பிறந்த தினம் பிப்ரவரி 13-ம் தேதி நாடெங்கும் கொண்டாடப்படவிருக்கிறது. இந்திய அரசாங்கம், அன்று அவருடைய உருவத் தைத் தபால் தலையில் வெளியிட்டுக் கௌரவிக்கிறது.

'சுதந்திரப் போராட்டத்தில் பெண்களுக் கும் பங்கு உண்டு; அவர்கள் வீட்டோடு அடைந்து கிடக்க வேண்டியதில்லை' என்பதை, தானே வழிகாட்டியாக இருந்து உணர்த்தியவர் சரோஜினி தேவி. சுதந்திர இந்தியாவில், தாஜ்மஹாலைக் கொண்டுள்ள ஆக்ராவும், ராமபிரானை நினைவுறுத்தும் அயோத்தியும் இணைந்த உத்தரப்பிரதேச கவர்னராகத் திறம்படப் பணிபுரிந்த முதல் பெண்மணி இவர்.

கவிதை புனைவதில் திறன் மிக்கவர். இவருடைய ஆங்கிலக் கவிதைகள் மேனாட்டு அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இவர் மேல்நாட்டு ரீதியிலேயே கவிதைகளை இயற்றி வந்தார். எட்மன்காஸ் என்ற அறி ஞரிடம் தனது கவிதைகளை இவர் காட்டினார். அவர், ''வாக்கு நன்றாக இருக்கிறது; ஆனால், மேல்நாட்டு பாவமும், வர்ணனைகளாகவும் இருக்கின்றனவே! உங்களுடைய கருத்துக்களை உங்கள் நாட்டுப் பாணியில் வெளியிடுங்கள். வானம்பாடியும், 'சர்ச்' மணியும் வேண்டாம். உங்கள் நாட்டுக் கிளி, குயில், கோயிலிலுள்ள கண்டாமணி இவற்றைப் பாடுங்கள்'' என்றார். அது முதல், பாரதநாட்டுப் பண்பையும் கலையையும் வாழ்க்கையும் பற்றி அவர் கவிதை புனைய லானார்.

செல்வத்தில் பிறந்து, செல்வத்திலேயே வளர்ந்த இந்தப் பெரிய இடத்துப் பெண் மணியை, மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளச்செய்து, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திய பெருமை மகாத்மாகாந்தியையே சாரும். லண்டனில்தான் இவர்கள் இரு வரும் முதன்முறையாகச் சந்தித் தனர். 1914-ம் ஆண்டு இது நடை பெற்றது. முதல் உலக மகாயுத்தம் ஆரம்பமான சமயம் அது!

தென்னாப்பிரிக்காவிலி ருந்து திரும்பிய காந்திஜியை துறைமுகத்தில் சந்திக்க முடி யாமல் போகவே, அவர் இருக்குமிடத்தைத் தேடிக் கொண்டு சென்றார் சரோஜினி. காந்திஜியைக் கண்டதும் சரோஜினிக்குப் பெரும் ஏமாற்றம். ''யார் இந்த மிக்கி மவுஸ்?'' என்று கேட்டு, வாய்விட்டுச் சிரித்துவிட்டார். உணவருந்திக் கொண்டிருந்த மகாத்மா தலை நிமிர்ந்து, ''நீதான் சரோஜினியாக இருக்கவேண் டும். இல்லையேல், வேறு யார் இப்படிச் சிரிப் பார்கள்?'' என்றார். அதைக் கேட்டு சரோஜினி தலைகுனிந்தார்.

தாய்நாட்டின் மீது பற்றுக்கொள்ளச் செய்து, இவரை விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபடுத்தியது, பஞ்சாப் படுகொலை (ஜாலியன் வாலா பாக்) நிகழ்ச்சிதான்!

லண்டனில் 'ஹைட் பார்க்'கில் ஒரு கூட்டம் போட்டு, ஆட்சியாளர்களின் 'காட்டுமிராண்டித்' தனத்தை அம்பலப்படுத்தினார் சரோஜினி. மறுநாள், இந்திய மந்திரி மாண்டேகு இக்குற்றச்சாட்டை மறுத்தார். தன்னிடம் தக்க ஆதாரமுள்ளதாகவும், பொது மேடையில் விவாதிக்க தான் தயார் என்றும் சரோஜினி சவால் விடுத்தார். மாண்டேகு வாயைத் திறக்கவில்லை.

இவர் ஆல்பர்ட் ஹாலில், பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து உணர்ச்சிவசப் பட்டுப் பேசிக்கொண்டிருக்கையில், சில விஷமிகள் கூச்சல் போட்டனர். ''ஷட் அப்!'' (மூடுங்கள் வாயை) என்று புலியைப் போல் சீறினார் சரோஜினி. அவருக்குக் குயிலாகக் கூவ மட்டுமல்ல, இடியாகவும் முழங்கத் தெரியும் என்பது அன்று நிரூபணமாயிற்று.

1949 ஜனவரி முதற்கொண்டே அவர் உடல் நிலைமை சீர்கெட ஆரம்பித்தது. மார்ச் 2-ம் தேதி இரவு, ரத்தக்கொதிப்பு அதிகரித்து நிலைமை மிகவும் கவலைக்கிடமாகியது. அருகில் உறவினர் யாரும் இல்லை. மகள் பத்மஜா (தற்போது மேற்கு வங்காள கவர்னர்) அலகாபாத்தில் இருந்தார். தன் அருகிலிருந்த நர்ஸை பாடும்படி கேட்டுக்கொண்டார் சரோ ஜினி. பாடல்களைக் கேட்டபடியே அந்தக் கவிக்குயிலின் ஆவி பிரிந்தது.

- 'நந்தலால்'