18-02-09

விகடன் பொக்கிஷம்

சினிமா விமர்சனம்: வாழ்வே மாயம்

டியர் லதா,

பாலாஜி கம்பெனியிலேர்ந்து வந்திருக்கிற ஆந்திரா ஆவக்காய் இந்தப் படம்! என்ன முழிக்கிறே? 'பிரேமாபிஷேகம்' தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பு இது! இந்த 'ஊறுகாய்'லே பூண்டு மசாலாவே கலக்கப்படலேனு நான் சொன்னா நீ நம்பமாட்டே. இருந்தாலும் அதுதான் நிஜம்! காபரே டான்ஸ், சண்டைக் காட்சிகள் 'நிறையாத' படம்!

கிளுகிளுப்பான காதலோடு படம் ஆரம்பமாகுது. பலரைத் தேடும் பிச்சைக்காரனா இல்லாம தேவியை மட்டும் தேடும் பக்தனா ராஜா அலையறதா தொடக்கத்துலே காட்டறதே இது ஒரு அழுத்தமான காதல் கதைங்கிறதுக்கு அச்சாரம்.

ஆள் கொஞ்சம் ஸ்மார்ட்டா இருந்தாலே ஒரு மாதிரி குழைய ஆரம்பிச்சுடும் பேபி (மனோரமா), ராஜா-தேவி காதலுக்குக் கை கொடுக்கத் தொடங்குவது கண்ணிய மான இடம்.

செவ்வாய் தோஷ சந்தியாவும் (அம்பிகா), ராஜா - தேவியோட உண்மையான காதலைப் புரிஞ்சுக்கிட்டு ஆவன செய்யறதும், பின்னால் வீணாப் போயிடறதும் சோகத்துக்கு வலுவான பக்கபலங்கள்!

ராஜா ரோலை ஒரு சவாலா ஏத்துக்கிட்டிருக்கார் கமல். கதையிலே 'தேவதாஸ்'தனம் ஆரம்பமானதும் சோகஹாசனா கொடிகட்டிப் பறக்கிறார். தன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு தேவி விதவையாகிடக் கூடாதேங்கறதுக்காக அவர் எடுக்கிற ஒவ்வொரு 'ஸ்டெப்'புமே அழுத்தம் நிறைஞ்ச சமாசாரங்கள்.

ஆனால், சில சில்லறை விஷயங்கள்லே அவர்கிட்டே ஓர் அலட்சியப் போக்கு தெரியுது. உதாரணமா, டாக்டர் ரெஹ்மானை ஹால்லே சந்திக்கிறப்போ வளர்ந்திருக்கும் கமலின் தாடிக்கும், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் செக்கப் புக்காகத் தனி ரூம்லே டாக்டரைச் சந்திக்கிறபோது இருக்கிற தாடிக்குமே எக்கச்சக்க வித்தியாசம் இருக்கே! டிரஸ்-மேக்கப் விஷயங்களில் கவனமாக இருக்கும் கமலஹாசனா இப்படிச் செய்கிறார்?

தேவிக்குப் பொருத்தமான தேவி காரெக்டர். நடிப்பில் முன்னைவிட முதிர்ச்சி தெரியுது. இருந்தாலும்,

ப்ரியாவின் தியாகத்தின் முன், தேவியின் சோகம் அடிபட்டுப் போயிடுது.

வசனத்திலே அரசியல் மிளகாய்ப் பொடியைத் தூவி அமர்க்களம் செய்திருக்கும் ஏ.எல்.நாராயணன், சில இடங்களில் விரசத்தையும் தூவியிருக்க வேண்டாம். அதுவும், ''ஊறுகாய் மாதிரி தொட்டுக்கச்சொன்னா, நீ தயிர்சாதம் மாதிரி பிசிஞ்சுட்டியே!''னு மனோரமா பேசறது பண்பாட்டு பார்டரைத் தாண்டற விவகாரம்!

படத்துக்கு இசை: கங்கை அமரன். 'என் வந்தனம்' பாட்டுலே அண்ணன் இளையராஜாவோட 'அந்திமழை' யில் உரிமையோடு நனைஞ்சிருக்கார் அவர்!

தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது ஊமைக்காயம் ஏற்பட் டாற்போல மனசின் மூலையில் ஒரு சலனம்; துக்கம். இந்த உணர்வே படத்தோட வெற்றிக்கு சாட்சியா அமையுங்கிறதிலே சந்தேகமில்லை.

திரைக்கதையமைப்பில் தமிழ் ரசிகர்களுக்குத் தேவையான மாறுதல் களைச் செஞ்சு படத்தின் நீளத்தைக் குறைச்சிருந்தாங்கன்னா, 50-மார்க்குக் கும் மேலேயே கூடக் கொடுத்திருப் பேன்!

- அன்புடன்,
ராஜேஷ்.