18-02-09

விகடன் பொக்கிஷம்

ஆசை வெட்கமறியும்...

- மணியன்

பெண்கள் பேசுவது ஒரு வனோடு; காதல் குறியோடு பார்ப்பது மற்றொருவனை; உள்ளத்தில் நினைப்பது வேறு ஒருவனை; எனவே, பெண்களின் உண்மையான அன்புக்குப் பாத்திரமானவன் யாரோ, யாமறியோம்!

- பர்த்ருஹரி.ச்ரு.சத.50

ஊட்டி குளுமை திடீரென்று புழுக்கமாகிவிட்டால் எப்படி?

உஷா பேசும்போதெல்லாம் சிரித்துச் சிரித்து ரசித்துக் கொண்டிருந்துவிட்டு - அதுவும் பிரபுவும் உஷாவும் தியேட்டரில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கூட முகச்சுளிப்பு இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்துவிட்டு - திடுதிடுப்பென்று 'ஒரு கேள்விக் குப் பதில் சொல்லிவிட்டுப் போங் கள்' என்று வீணா தன்னை அச்சுறுத்தி நிறுத்தியதும் பிரபு திணறிப் போனான்.

வீணாவின் முகம் அந்த நேரத் திலும் தன் கம்பீரப் புன்னகையை உதடுகளில் தக்கவைத்துக் கொண்டுதான் இருந்தது.

''மிஸ்டர் பிரபு, உங்களுக்கு என்மேல் எரிச்சலாக இருக்கிறதா? இந்த வீணா சுத்த அறுவையாக இருக்கிறாளே, கொஞ்ச நேரம் சந்தோஷமாய் இருக்க விடமாட்டேங்கிறாளே! உஷாவுடன் ஜாலியாக வெளியே சுற்றிவிட்டு வந்த உற்சாகத்தைக் கெடுப்பதற்காகவே இப்படி முகத்தில் அடித்தாற் போல் 'ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போங் கள்' என்று மடக்குகிறாளே! என்று நினைக்கிறீர்கள் இல்லையா?''

பிரபு விழித்தான். வீணா தொடர்ந்தாள்...

''உங்களைப் பொறுத்த அளவில் நீங்கள் உஷாவுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்ததோ, ரூபா போன்ற பெண்களை வீட்டுக்கு வர வழைத்து உங்களை உற்சா கப்படுத்திக் கொண்டதோ உங் களுடைய பலவீனம் என்று நான் சொல்லமாட்டேன். அது உங்கள் ரசனை. ஆனால், ஓர் ஆபீசில் வேலை பார்க்கவேண்டிய நேரத்தில், அதை விட்டுவிட்டு ஒரு பெண்ணுடன் சினிமா பார்க்கப் போகும் அளவு உங்கள் மனத்தை அடக்க முடியாமல் தன்னிச்சையாக இயங்கவிட் டீர்களே, அது உங்கள் கட்டுப் பாட்டின்மை. அதாவது, பலவீனம். இந்தப் பலவீனம் உங்களுக்குப் புதிதாக ஏற் பட்டிருக்கிறது. சரியா?

'பிரபு மேனேஜர் வேலை பார்க்கிறார் என்றால், சரியா கப் பத்து மணிக்கு ஆபீசுக் குள் நுழைவார். ஐந்து மணி வரை ஆபீசில் இருப்பார். அவர் ஆபீசுக்குள் இருக்கிற நேரம் வரை சிம்ம சொப்பனமாக இருக்கும்' என்று பெயரெடுத்தீர்கள். அது ஒரு உத்தியோகஸ்தரின் கம்பீரமான இமேஜ்! அது உங்களுக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட். அந்த உருவம் இன்று அழிந்துவிட்டது. ஆக, இன்று உங்களைப் பொறுத்த அளவில் ஒரு நல்ல குண விசேஷத்தை அழித்துக்கொண்டு, ஒரு பலவீனமான அம்சத்துக்கு இலக்காயிருக்கிறீர்கள். உண்மைதானே?'' - வீணா அழுத்தமாகக் கேட்டாள்.

''என்ன வீணா, இது சாதாரண விஷயம். உஷா வும் விரும்பினாள்...'' - இழுத் தான் பிரபு.

''எனக்குப் புரிகிறது, மிஸ்டர் பிரபு. உஷா தான் விரும்பி யிருப்பாள். அவளுக்குப் பகலில் வேறு வேலை இல்லை. தன் பாய் ஃபிரெண்டுடன் சினிமா வுக்குப் போகவேண்டும் என்று விரும்பினாள் தான் விரும்பியபடி பொழுதைக் கழித்து விட்டு வந்திருக்கிறாள். அவள் மீது எந்தக் குறைபாடும் இல்லை. ஆனால் நீங்கள்..? அவ ளுடைய ஆர்வத்துக்கு உங்க கட்டுப்பாட்டையே பலியாக்கிவிட்டீர்களே..?''

தலைகுனிந்து நின்றான் பிரபு. அவனை உறுத்துப் பார்த்த வீணா, ''மிஸ்டர் பிரபு, நான் உங்களிடம் அதிகப்படியான உரிமை எடுத்து இதையெல்லாம் சொல்லும்படி ஆயிற்று. மன்னித்துக் கொள்ளுங்கள். இன்று என் முன்னால் தலை குனிந்து நிற்கும் நீங்கள், நாளை சமூகத்தின் முன் தலை குனிந்து நிற்கும்படி ஆகிவிடக்கூடாதே என்பதற்காகச் சொல்கிறேன். இன்றே ஆபீசில் உங்களுடைய ஊழியர்களின் கேலிக்கு ஆளாகிவிட்டீர்கள். அந்த நிலை தொடர்ந் தால் அங்கு உங்கள் அந்தஸ்தை இழப்பீர்கள். நமக்குள் உள்ள நட்பையும் இழப்பீர்கள்.''

''வீணா..!''

''ஆமாம் மிஸ்டர் பிரபு! நான் உங்களுடைய இன்றைய பலவீனங்களுடனும், பலங்களுடனு மேதான் உங்களை விரும்பியிருக் கிறேன். அதை நீங்கள் மாற்றி யமைத்துவிட்டால் ஒரு மாறுத லான பிரபுவாக என் முன் நிற் பீர்கள். அந்தப் பிரபுவை நான் விரும்புவேன் என்று சொல்ல முடியாது. 'வேலை செய்யவேண் டிய நேரத்தில் வேலை செய், விளையாடவேண்டிய நேரத்தில் விளையாடு' என்பது ஐந்தாம் வகுப்பிலேயே நாம் கற்ற பாடம். உங்கள் ரசனைப்படியான உங்கள் விளையாட்டை நீங்கள் வேலை செய்யவேண்டிய நேரத் தில் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. தட்ஸ் ஆல்!'' - கூறி விட்டுத் தன் போர்ஷனுக்குள் நுழைந்தாள் வீணா. அவளைத் தொடர்ந்து சென்ற பிரபு, ஒரு சோபாவில் பொறுமையாக உட்கார்ந்தான்.

டீயுடன் வந்தாள் வீணா. ''இது டீ சாப்பிட வேண்டிய நேரம்.'' - புன்னகையுடன் சொன்னாள்.

டீயை வாங்கிப் பருகினான் பிரபு. அவன் முகத்தில் தெளிவு தென்பட் டது.

''மிஸ்டர் பிரபு, இரவு உணவை என்னுடன் சாப்பிடுகிறீர்களா, அல்லது உஷாவுடனா?'' என்று அமைதியாகக் கேட்டாள் வீணா.

''உன்னுடன் சாப்பிடுகிறேன்.''

''ஆனால், உணவருந்தும் நேரத்தில் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை நான் பேசுவேன் என்று சொல்ல முடி யாது. நீங்கள் இன்று செய்த தவற்றால் நான் உங்கள் மீது கோபமாக இருக்கிறேன். அந்தக் கோபத்தில் இன்னும் அதிகப் பிரசங்கித்தனமாக ஏதாவது புத்திமதி சொல்ல நேரிட் டாலும் நேரிடும். அது உங்களுக்கு மிகவும் அலுப்பாகவும் எரிச்சலாகவும் இருக்கும். பின்மாலைப் பொழுதில் உங்களுக்கு அப்படியோர் எரிச்சலை நான் தர வேண்டுமா?'' என்று கேட்டாள் வீணா.

''பரவாயில்லை. நீ எவ்வளவு திட்டினாலும் உன்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஏற்படும் மன நிறைவுக்கு ஈடு இணை கிடையாது. நான் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறி வந்தும் அதற்காக இந்த விநாடி வரை வருந்தாமல் இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம், உன்னுடைய நட்புதான். உஷாவின் நெருக்கத்தில் நான் ஒருவித போதைக்குள்ளாகிறேன் என்பது உண்மை. ஆனால், என் உள்ளத்திற்கு உற்சாகம் தரக்கூடியது உன் நட்புதான். நீ எவ்வளவு என்னை நிந்தித்துப் பேசினாலும், உன்னோடு தான் நான் உணவருந்தப் போகிறேன்'' என்றான் பிரபு. அவன் கண்கள் அப்போது நெகிழ்ச்சியால் கலங்கியிருந்தன.

பேச நா எழாமல், அவனையே கனி வுடன் பார்த்துக்கொண்டிருந்த வீணாவின் உதடுகள் துடித்தன.

வீட்டின் வெளிப்புறமாக 'பஸ்ஸர்' இருந்தும், அதைத் தொடாமல் 'லொட்டு லொட்'டென்று அநாகரிகமாகத் தட்டிக் கொண்டிருப்பவர் யாராக இருக்கும் என்று வியப்புடன் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, ரிசப்ஷனிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்தாள் கமலா.

''ஹி... ஹி... நான்தானம்மா'' என்று குரல் கொடுத்துக்கொண்டு நின்றான் பூபேஷ்.

''இரண்டு மூணு நாளா உங்களைப் பார்க்கலையே, அதான் பார்க்கலாம்னு வந்தேன்.''

''இந்த நேரத்திலா..... ராத்திரி எட்டு மணியாச்சே?''

''ஹி... ஹி... உங்களுக்கும் எனக்கும் நேரமாவது காலமாவது..! நீங்கள் புருஷனை விட்டுட்டு ராப்பகலா தூக்க மில்லாம இருக்கீங்க. நான் பெண்சாதியைப் பலி கொடுத்துட்டு ராப்பகலா பேய் மாதிரி திரியறேன், ஹூம்..!''

தன்னை அவனோடு ஒப்பிட்டதும் கமலாவுக்குச் சுருக்கென்றது. அந்த அருவருப்பு அவளுடைய முகத்தி லேயே தென்பட்டது.

''நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் ராப்பகலா தூக்கம் இல் லாம இல்லை. நிம்மதியா தூங்கி எழுந்துகொண்டுதான் இருக்கேன். அவர் எங்கே போயிட்டார்..? என் ஃபிரெண்ட் வீணா வீட்டிலேதான் இருக்கார். ஏதோ விருந்துக்குப் போயி ருக்கார்னு நினைச்சுட்டிருக்கேன்'' என்றாள் கமலா.

''நீங்க வீட்டுக் கொடுக்காம பேச றது சரிம்மா! ஆனா, உங்ககிட்டே சில விஷயம் பேசணும்!'' என்றான் பூபேஷ்.

''காலையிலே பேசலாமே..?''

''காலை வரைக்கும் என் மனசு தாங்காது. வெடிச்சுடும்! இப்பவே பத்து நிமிஷம் பேசிட்டுப் போயிட றேன்'' என்றவன், ''வாங்கம்மா, உள்ளே உட்கார்ந்து பேசுவோம்'' என்று கமலாவை இடித்துத் தள்ளாத குறையாக வாசல் வழியே புகுந்து உள்ளே நுழைந்தான். ஒரு விநாடி அதிர்ந்து நின்று, பின்பு தயக்கத்துடன் அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றாள் கமலா.

ஒரு சோபாவில் சர்வ சுதந்திரத் துடன் சாய்ந்து உட்கார்ந்துகொண்ட பூபேஷ், சமையலறைப் பக்கமாகத் தலையை நீட்டி, ''ஐயர்வாள், சூடா காபி இருந்தா கொண்டாங்க. ஒரே தலைவலி!'' என்று குரல் கொடுத்தான்.

கமலாவுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது. என்ன மனிதன் இவன், சுத்தக் காட்டான் என்ற மனக் கசப்புடன், சற்றுத் தொலைவாகக் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

''என்ன விஷயமா வந்தீங்க?''

''எல்லாம் நம்ம விஷயமாதான்!''

''நம்ம விஷயம்னா?''

''உங்க புருஷன், என் மனைவி விஷயம்.''

''இதுல புதுசா பேசறதுக்கு என்ன இருக்கு?''

''ஏதாவது செய்யணும். ஏன்னா நாமதான் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டவங்க ஜோடி சேர்ந் தால்தான் வேகத்தோட காரியம் செய்யமுடியும்.''

'ஜோடி சேர்ந்தால்தான்' என்று அவன் சொன்ன முறை கமலாவுக்குப் பிடிக்கவில்லை. போயும் போயும் இவனோடு என்ன ஜோடி போட வேண்டியிருக்கிறது!

''இப்போ ஒரு சேதி தெரியுமா?''

''என்ன?''

''உங்க புருஷன் புதிதாகக் கல் யாணம் பண்ணிக்கப் போறாராம்.''

'கல்யாணமா?' என்ற அதிர்ச்சி கலந்த வார்த்தை கமலாவுக்குத் தொண்டைக் குழி வரை வந்தது. இருந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ''கல்யாணம் பண்ணிக்கிற தானா பண்ணிக்கட்டும். நான் போய் ஒரு வெள்ளித் தட்டு பிரசென்ட் பண்ணிட்டு வந்துடறேன். அதைப் பத்தி என்ன இப்போ?'' என்றாள்.

''அப்படி இந்த விஷயத்தைத் தூக்கி எறிஞ்சுட முடியாது! பெண் யார் தெரியுமா? உஷா! அவதான் வீணாவோட தங்கை. வீணாவுக்கு, தான் பிரபுவைக் கல்யாணம் செய்துக் கணும்னு ஆசை. ஆனா, நான் கல்யா ணத்தன்று வந்து ஏதாவது கலாட்டா பண்ணுவேன், கேவலமாகப் போயிடு மோனு தன் தங்கைக்கும் பிரபுவுக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட்டு, அப்புறம் தங்கையும் தானுமா பிரபு வோடு வாழ்கிற மாதிரி ஏற்பாடு.''

கேட்கவே அருவருப்பாக இருந்தது கமலாவுக்கு. குறிப்பு உணர்ந்தவன் மாதிரி, ''நான் சொல்றதைக் கேட்கவே உங்களுக்குப் பிடிக்கலே. ஆனா, இது நடக்கப் போகிறது. பிரபு பாவம், நல்லவர். இந்தச் சண்டாளிகள் அவரை மயக்கி இந்தக் காரியம் செய்யப் போறாளுங்க. வீணா எப்ப டிப்பட்டவள்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அவ எதையும் செய்வா... ராட்சசி! பேசறதுதான் பெரிய ஞானி மாதிரி. உண்மையிலே இந்தக் கல்யா ணத்தைத் தடுக்கணும். பிரபு சாரைக் காப்பாற்றணும்னா, உடனே என் னோடு புறப்பட்டு வாங்க!''

''உன்னோட நான் புறப்பட்டு வரணுமா, எங்கே?'' - திகைப்புடன் கேட்டாள் கமலா.

''போலீஸ் ஸ்டேஷனுக்கு'' என்றான் பூபேஷ்.

நிலை தடுமாறிப் போனாள் கமலா. ''அவர் என்ன, போலீஸ் ஸ்டேஷனிலா இருக்கிறார்?'' என்று பரபரப்புடன் கேட்டாள். அவளுடைய உடம்பெல் லாம் நடுங்கியது.

''என்னோடு வந்தால் விவரம் தெரியும். என் மீது அவநம்பிக்கைப்பட்டு இங்கேயே இருந்தால், உங்க இஷ்டம்'' என்று சோபாவிலிருந்து எழுந்து வாசற்புறமாக நகர்ந்தான் பூபேஷ்.

''இருங்க, நானும் புறப்படறேன்'' என்றாள் கமலா.

- தொடரும்