18-02-09

விகடன் பொக்கிஷம்

மகிழ்ச்சி எனும் மருந்து!

மனிதன் சில நேரத்திலே தன்னந்தனியாக அமர்ந்து உயர்ந்த கருத்துக் களைச் சிந்திக்கிறபோது உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டு அவன் சிரிக்கின்றான். அந்த மகிழ்ச்சி அவனது உள்ளத்திலே தானாக வர வேண்டும். 'கொஞ்சம் மகிழ்ச்சியாய் இரு' என்று இன்னொருத்தர் சொல்லி அவனுக்கு மகிழ்ச்சி வரக்கூடாது. அது தானாக மலர வேண்டும்.

'காதல்' என்றால் அன்பைப் பரிமாறிக் கொள்வது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பு பரிமாறப்படுகிற பொழுது, அதைக் காதல் என்கிறோம். அந்தக் காதல் தானாகத்தான் உண் டாகவேண்டும்.

ஒரு வாலிபனைப் பார்த்து அவன் நண்பன் 'ஏனப்பா சும்மாயிருக்கிறாய்? ஏதாவது காதலை ஆரம்பிக்கிறது தானே?' என்று சொல்லிக்கொடுத்தா காதல் வரும்? அவனுக்கே தானாக அந்த எண்ணம் வந்து, காதல் ஆரம் பித்து, பிறகு அதன் பலாபலன்களை அவன் அனுபவிப்பான். அது வேறு கதை!

ஒரு சின்ன அனுபவம் சொல்கி றேன். பலருக்குத் தெரிந்ததுதான். சாதாரணமாக நாம் சாப்பிடுகிற பொழுது நம் மனைவி எதிரே நின்று கொண்டிருப்பாள். நாம் பிரியத்தோடு எந்தப் பதார்த்தத்தைச் சாப்பிடுகிறோம் என்பதைப் பார்த்து, நம் மனைவி அதையே மேலும் மேலும் வைத்துக் கொண்டிருப்பாள். 'இரண்டு மணி நேரம் சமையலறையிலே நின்று அடுப்புக்குப் பக்கத்திலே இருந்து இவ்வளவு சமைத்து வைத்தோமே... இது நன்றாக இருக்கிறது' என்று எதைப் பற்றியாவது ஒரு வார்த்தை சொல்லமாட்டாரா... சொன்னால் நம்ம மனசுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று நினைக்கிறாள் அவள். அதற்காகத்தான் அவள் அப்படி நிற்கிறாள். அது தெரியாத நாம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டுப் பேசாமல் எழுந்து போனால் அவள் மனசு எப்படியிருக்கும்? அதனால்தான் சில பெண்கள் 'இப்படிச் சொல்றதுக் குத் தெரியலையே இந்த ஆம்பிளைங் களுக்கு' என்று வருத்தப்பட்டு, 'ஏங்க... ரசம் எப்படி இருக்கு? சாம்பார் எப்படி இருக்கு?' என்று கேட்டார்கள். அதன் பிறகாவது, 'பொரியல் நல்லா இருந்தது'ன்னு சொல்ல வேண்டும். அதுக்குப் பதிலா, 'மோர் நல்லா இருந் தது' என்று சொன்னால், அந்த அம்மா ளுக்கு எப்படியிருக்கும் பாவம்!

நாம் அழுதுகொண்டே பிறக்கி றோம். நம்மைச் சுற்றியுள்ள தாய், தகப்பன், மாமன், மாமி, பாட்டன், பாட்டி எல்லோரும் சிரிக்கிறார்கள். இது சாதாரணமானதுதான். மகான் கள் சொன்னார்கள்... ''ஏ, மனிதனே... நீ அழுதுகொண்டே பிறக்கிறாய். உன்னைச் சுற்றி இருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். அழுதுகொண்டு பிறந்த நீ, உலகத்தை விட்டு மறையும்பொழுது சிரித்துக்கொண்டு மறையவேண்டும். நீ பிறக்கும்போது சிரித்து மகிழ்ந்தவர் கள் நீ இறக்கும்போது அழவேண்டும். மனித வாழ்க்கையின் இயற்கை நியதி இது'' என்று.

ஒரு கூட்டத்திலே நான் 'பிறக்கும் போது அழுதுகொண்டே பிறந்தோம்.இறக்கும்போது சிரித்துக்கொண்டே இறக்கவேண்டும்' என்ற இந்தக் கருத்தை நன்றாக விளக்கம் செய்துவிட்டு வந் தேன். ஆறு மாசம் கழித்து மறுபடி அந்த ஊருக்குப் போனேன். அங்கு இருந்தவர்கள் எல்லாம் என்னைப் பார்க்க வந்தார்கள். ''ஐயா! ஒரு செய்தி'' என்றார்கள். ''என்ன?'' என்றேன். ''நீங்கள் சொல்லிவிட்டுப் போனீர்களே, அதே மாதிரி எங்க ஊர்ல ஒருத்தர் சிரிச்சுக்கிட்டே செத்தார்'' என்று சொன்னார்கள்.

''அப்படியா? யார் அந்த மகான்? எதற்காகச் சிரித்துக்கொண்டே செத்தார்?'' என்று ஆவலுடன் கேட் டேன்.

அதற்கு அவர்கள், ''அவர் சிரிச்சுக் கிட்டுச் செத்ததுக்கு வேற காரணம் ஐயா! பத்துப் பேரிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தராமலே இறந்து போனாரு. அவர்களை ஏமாத்திட்டோ மேங்கிற மகிழ்ச்சியிலேதான் சிரிச்சுக் கிட்டே செத்தாரு'' என்றார்கள்.

இதைக் கேட்டு நான் சிரித்தேன்!

- தொடரும்