18-02-09

விகடன் பொக்கிஷம்

காதல் பரிசு

தெய்விகத் தொடர்பு ஏற்படும்போதுதான் உண்மை யான இன்பம் பெறமுடியும் என்று ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ் கண்டான். அதே தத்துவத்தை பாரதக் கவிஞர் தாகூர் தனது 'காதல் பரிசு' என்னும் நூலிலே வடித்துக் காட்டிவிட்டார்.

காதலுணர்ச்சியின் எழிலுருவம் எழக் காரணம் என்ன என்பது கவிஞருக்கே தெரிந்த ஒன்று. தாஜ்மகால் என்னும் அழகுருவம் நிலைக்க ஷாஜகான் செய்த செயலை, உள்ள அரங்கிலே பாராட்டும் முறையில் நூல் துவங்குகிறது.

'இரவின் ஆழ்ந்த அமைதியிலே உனது காதலியின் செவியில் நீ சொன்ன அந்த ரகசியம், சலவைக் கல்லின் அமைதியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியை அவை விண்மீன்களுடன் பேசுகின்றன'.

காதல் வாழ்வு, உள்ளத்தால் வாழும் வாழ்வு. பல உணர்ச்சிகளால் மோதுண்டு நிற்கும் இளமை அமைதி பெற, வேறோர் உள்ளத்தை நாடுகிறது. அந்த உள்ளம் அமைதியை ஈந்தால், தன் வாழ்வு பெறற் கரும் பேறு ஆகிறது; தாஜ்மகால் போன்ற கலைக் கோயில்கள் உருவாகின்றன. அமைதி இல்லையேல் வாழ்வு சுக்குநூறாக நொறுங்கிய நிலையை எய்துகிறது.

'கவித்துவம்' நிறைந்த சொற்களால் காதலியின் துணையை நாடுகிறார் கவிஞர். 'அன்பே, தோட்டத்தினுள் வந்து அழகுற அமர்ந்து ஆண்டுள்ள கனிகளைப் பறி; அக் கனிகள் தம்மிடம் உள்ள இன்சுவை எனும் சுமையை, உனது இதழ்களில் முழுவதும் இறக்கி வைக்கட்டும்!'

'வானம் பெறினும், அருநிதி அனைத்தும் இவ்வகிலம் பெறினும் 'இன்னும் வேண்டும்' எனும் அவா மிக்கூறும். ஆனால், அவள் மட்டும் என்னுடையவளாகிவிட்டால், இவ்வுலகின் ஒரு சிறு மூலையில் நான் வாழினும் மனம் முழுமையும் அமைதியும் பெற்றுவிடும்!'

உருவு கண்டு மனம் பறி கொடுத்தவனல்ல இக் கவிஞன். உள்ளத்தின் ஆழத்திலே விளை யும் அன்புக்காகத் தன்னை ஈந்தவன். தனது காதலியின் தோற்றம் மற்றையோர் மனத்தைக் கவரும் ஈடில்லா அழகு பெற்றது அல்ல; நிறம் கருமை. ஏன், உலகின் கடவுளான ராமனே கரிய செம்மல்தானே!

'ஊரிலே மற்றோர் அவளைக் கரியவள் என்பர். ஆனால், அவள் என் உள்ளத்தில் மலர்ந்த வெண்ணிற மலர்!'

'மாலையின் பொழுதில் யான் என் இறைவனைக் காணச் சென்றேன். உடன் வந்தோர், 'இறைவனுக்குப் பரிசுப் பொருள் யாது வைத்துள்ளாய்?' என வின வினர். யான் அவர்களிடம் எதைக் காண்பிப்பது? யான் பரிசளிக்கக் கூடிய பொருள் எனது கவிதை ஒன்றுதான்.'

கடவுளுக்கு அணிவிக்கும் கவிதை, அன்பில் கனிந்த கவிதை. கவிஞனது மனத்தின் எழுச்சிதான் கவிதை. அந்த எழுச்சி பெற்ற மன நிலை பெற வாழ்க்கையை அமைக்கும் படிகளாக உள்ளவைதான் ஏட்டின் முற்பகுதி. அன்பின் அடித் தளத்தில் தான் அருள் மூள்கிறது. அந்த அன்பின் வழி, காதல் வாழ்வில்தான் அமைந்தது என்பதைத் தமிழனின் பாவைப் பாடல்கள் எவ்வாறு பறைசாற்றி நிற்கின்றனவோ, அந்நிலையில் எளிய ஆங்கிலச் சொற்களில் ஐம்பது தேன் துளிக் கருத்துக்களாக இந்நூலில் யாத்துள்ளார் கவிஞர் தாகூர். நூலின் பிற்பகுதி, அன்பின் அடிப்படையில் விளைந்த அறப்பண்பை விளக்குகிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஐம்பது எண்ணத் துளிகளைக் கொண்ட இந்நூலைக் கற்க, மிகச் சிறந்த ஆங்கில அறிவு தேவை இல்லை. எளிய ஆங்கில அறிவு கொண்டாலும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இயற்கையோடு பின்னிய எளிய நாட்டுப்புற வாழ்க்கை, பாரதப் பண்பு, நமது வாழ்வின் உன்னத நோக்கங்கள் இவற்றைத் தந்து, கற்போர் வாழ்வை உயர்த்தும் வழிகாட்டியாகிவிட்டார் கவிஞர் தாகூர். கற்றோர் அனைவரது இல்லங்களிலும், நூலகங்களிலும், பள்ளிகளிலும் திகழவேண்டிய சிறந்த நூல், காதல் பரிசு ('லவர்ஸ் கிஃப்ட்')!

- தெ.மணவழகன்