Published:Updated:

சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்

சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்

சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்

சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்

Published:Updated:

01-04-09
விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்
சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்
 
சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்
சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்
சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்
சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்

து மாதிரியான 'தலைப்பு விலகும்' விவகாரங்களை மலையாளப் பட டைரக்டர்கள் மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள். தமிழுக்கு இது புதுசு. எடுத்துக்கொண்ட கதையை மேலெழுந்தவாரியாகச் சொல்லிச் சமாளிக்காமல் கொச்சை யான சம்பவங்கள், பச்சையான நகைச்சுவைகள் இவற்றைக் காட்டியே தீருவேன் என்று கச்சை கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார் இயக்கு நர். துணிச்சலான முயற்சிதான்! ஆனால், காட்சிகளும் ஹாஸ்யங்களும் உச்சமாகப் போகும்போது, நாம் கூச்சப்பட வேண்டியதாகிறது - மனை வியே பக்கத்தில் உட்கார்ந்திருந்தாலும்! ஆனாலும், அசைக்கமுடியாத தன்னம் பிக்கை, அதல பாதாள அனுபவம், எக்கச்சக்க துணிவு - இவற்றுடன், எடுத்துக்கொண்ட கதையின் அடி வேர் வரை சென்று புரட்டியிருப்பதால் இதில் இருக்கும் பச்சைத்தனத்தையும் விரச பாவத்தையும் குறிப்பிட்டு விமர்சனம் என்ற பெயரில் ஒப்பாரி வைப்பது அர்த்தமற்றது.

அடியாள் தேவு, 'தொழில்' பார்க்கும் சரசு, கள்ளச்சாராயப் பேர்வழி சோமன், 'தரகர்' வீரமணி நால்வரும் நான்கு துருவங்கள். இவர்களை 'எக்ஸ்ரே' எடுத்துக்காட்டியிருக்கிறார் பாலசந்தர்!

காட்ட வேண்டியதை நிர்வாணமாகக் காட்டிவிட்டு, அங்கங்கே அறி விப்பு வாசகங்கள் எதற்கு? இருந்தாலும், 'நாய் விற்ற காசு குரைத்தது', 'வசனம் நீக்கப்பட்டது' இவை இரண்டும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, 'வசனம் நீக்கப்பட்டது' கார்டு வரும்போது, சிலர் வசனங்களை டைரக்டர் நீக்கிவிட்டதாகவும், சிலர் 'சென்ஸார்' நீக்கிவிட்டதாகவும் நினைத்துக்கொள்வது சுவாரஸ்மான குழப்பம்!

சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்

சோமனைக் கிணற்றடியில் கொலை செய்துவிட்டு வந்த ரஜினி, மரியாவின் பிரவேசத்தைப் பார்த்து மலைத்து நிற்பதும், நிலைமை தெரிந்து சிரிப்பை அழுகையாக மாற்றிக் கொள்வதும் மனத்தில் நிற்கும் காட்சி.

தன் மகளை ஹோட்டல் அறையில் விபசாரியாகப் பார்த்த புரோக்கர், குடும்பத்தோடு மடிந்து போவது, எந்த ஈனத் தொழில் புரிபவனுக்கும் தன்மானம் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு.

கண்காட்சி 'மரணக் கிணறு' போல, வில்லன் மோட்டார் சைக் கிளில் வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டே பேசுவது ரொம்ப ஓவர்!

பூரண கர்ப்பிணியான சரசுவை தேவுவின் கண் எதிரிலேயே கற்பழிப் பதாகக் காட்டப்படும் காட்சி ஏ ஒன்! தேவுவின் ரியாக்ஷனிலேயே அங்கு நடக்கும் கொடுமையை நாம் பூரணமாக உணரமுடிகிறது. இந்த இடத்தில் பாலசந்திரன் முழுமை பெற்றுப் பௌர்ணமி சந்திரனாகிறார்!

அந்தக் கால பாணியில் ரஜினி மலை, மேடு, பள்ளங்களில் நடந்து கொண்டே பாடுவதும், கடைசியில் ரஜினி போகும் போலீஸ் வண்டியிலேயே ஹீரோயினையும் ஏற்றுவதும் ரொம்ப செயற்கை.

அரசியல்வாதியைப் பற்றிப் பேசும்போது, ''உனக்கு இவரைத் தெரியுமா?'' என்று தேவு கேட்க, ''அவர் பேசி முடிஞ்சதும் இங்கேதானே வருவார்!'' என்று படுகாஷூவலாக சரசு பதில் சொல்வது கேலியான குத்தல்!

இதற்கு முன் பாலசந்தர் இயக்கிய படங்களில் ஒவ்வொரு காட்சியும் 'டைரக்டர் இதோ இருக்கிறார்' என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் நாம் டைரக்டரை மறந்து, காட்சியோடு ஒன்றிப் போகிறோம். இது டைரக்டருக்கு ஒரு வெற்றியே!

 
சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்
சினிமா விமர்சனம்: தப்புத் தாளங்கள்