Published:Updated:

தாயின் தந்தை

தாயின் தந்தை

தாயின் தந்தை

தாயின் தந்தை

Published:Updated:

01-04-09
விகடன் பொக்கிஷம்
தாயின் தந்தை
தாயின் தந்தை
 
தாயின் தந்தை
தாயின் தந்தை
தாயின் தந்தை
தாயின் தந்தை

ந்திய மண்ணை முத்தமிட்டோடும் கங்கையையும் காவிரியையும் நினைத்தால் நமக்குப் புத்துணர்ச்சி வருவது போல, சோவியத் மக்களுக்கு மகத்தான ஜீவனை அளித்து வருகின்றது வால்கா நதி. இந்த வால்கா நதி தீரத்தில் தான் 19-ம் நூற்றாண்டு தனது வரலாற்றின் இறுதிப் பக்கங்களில் இரண்டு மாபெரும் மனிதர்களைச் சோவியத் ரஷ்யாவில் கண்டெடுத்தது. ஒருவர், எழுத் துலகில் என்றும் இளமையோடு வாழும் 'தாய்' காவி யம் படைத்த மாக்ஸிம் கார்க்கி. மற்றவர் மகத்தான புரட்சியைத் தோற்றுவித்த லெனின். கார்க்கி பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, வால்கா நதி தீரத்தில் பிறந்தவர் லெனின்.

லெனின் தலைமையில் நடந்த புதிய ரஷ்யாவைக் காணுவதற்கான புரட்சிக்கு, தனது பேனாவின் மூலம் ஊக்கம் கொடுத்தவர் மாக்ஸிம் கார்க்கி. அவரது 'தாய்' நாவலில் வரும் சாதாரண ரஷ்யப் பெண்மணியின் பாத்திரம் மிகவும் அற்புதமானது. தன் கண்களால் பார்த்த ஒரு தொழிலாளியின் குடும்ப நிகழ்ச்சியைத்தான் தீர மிக்க கதையாக்கினார் அவர். இந்த நாவல் 28 மொழிகளில் 106 பதிப்புகள் வெளியாகி இருப்பதாக 1947-ல் ஆங்கிலத்தில் வெளி யான 'தாய்' புத்தகத்தின் முன்னுரையில் குறிப் பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், கார்க்கி இந்த நாவலை சோவியத் பூமியில் இருந்தபடி எழுத வில்லை. அந்தப் பூமியிலிருந்து தொலை தூரத் தில், அமெரிக்கா வில் தங்கி இருந்தபோது படைத்தார். 1906-ல் அமெரிக்க இதழ் ஒன்றில் இந்த நாவல் வெளி யாகி, நியூயார்க்கிலும் லண்ட னிலும் புத்தகமாக வெளியா யிற்று. பெர்லினில்தான் ரஷ்ய மொழியில் புத்தகமாக வெளி யிடப்பட்டு, 1907-ல் பல பகுதி கள் வெட்டப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு வந்தது.

மிகச் சிறந்த மனிதாபிமானி யான மாக்ஸிம் கார்க்கி, இன்னல் என்னும் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். ஆமாம்... அவரது குழந்தைப் பருவம் இனிமையற்றது. இளமைப் பருவமும் வறுமை யும் பசியும் நிறைந்தது. அவர் தனது இளமைப் பருவத்தில் ரஷ்ய நாட்டைக் கால்நடை யாகச் சுற்றியவர். அப்போது ஜார் ஆட்சிக்கு எதிராக உறுதியுடன் போராட ரஷ்யத் தொழிலாளிகள் ஆயத்தம் செய்துகொண்டிருந்த காலம். அவருடைய பேனா அவர் களைப் பற்றி எழுதியது; அவர் களின் புகழைப் பாடியது.

தாயின் தந்தை

ரஷ்ய நாட்டு மாபெரும் தலைவனான லெனினைப் பற்றி கார்க்கி தீட்டிய சொல் லோவியம் பல உலக மொழி களில் மொழி பெயர்க்கப்பட் டுள்ளது. லெனினை இவர் வர்ணித்தது போல, வேறு எந்த நாட்டுத் தலைவரையும் எழுத்தாளர்கள் வர்ணித் திருப்பதாகச் சொல்லமுடி யாது. 'உண்மையைப் போன்று எளிமையானவர் லெனின்' என்கிறார் கார்க்கி.

தனக்கு வருகின்ற எல் லாக் கடிதங்களுக்கும் பதில் எழுதும் பழக்கம் உடைய வராக இருந்தார் மாக்ஸிம் கார்க்கி. இப்படி கார்க்கி எழுதிய கடிதங்களே ஒரு மாபெரும் இலக்கியப் பொக் கிஷமாகும். ஆனால், அவற் றில் பல கிடைக்கவில்லை. உலகத்தின் பல பகுதிகளில் அவற்றைத் தேடும் வேலை ஒருபுறம் நடக்கிறது. கார்க்கி யின் கடிதங்கள் தொலைந்து போனதற்கு, போலீஸ் தணிக் கைகளும் ஒரு காரணம். ''போலீசாரிடம் சிக்கி என் கடிதங்கள் பல ஆயுள் தண்டனை அனுபவிக்கின்றன'' என்று கார்க்கியே ஒரு கடிதத்தில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

1971-ல் ரஷ்யப் புரட்சி வெற்றி வாகை சூடிய பிறகு, அரசாங்கப் பத்திரங்களைச் சோதனையிட்ட போது, கார்க்கி யார் யாருக்கோ எழுதிய கடிதங்கள் கிடைத்தன. உடனே, சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. கார்க்கி எழுதி பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பின்பு உரியவர் களுக்குப் போய்ச் சேர்ந்தன இந்தக் கடிதங்கள்!

 
தாயின் தந்தை
தாயின் தந்தை