Published:Updated:

ஹாலிவுட் சிவாஜி!

ஹாலிவுட் சிவாஜி!

ஹாலிவுட் சிவாஜி!

ஹாலிவுட் சிவாஜி!

Published:Updated:

01-04-09
விகடன் பொக்கிஷம்
ஹாலிவுட் சிவாஜி!
ஹாலிவுட் சிவாஜி!
 
ஹாலிவுட் சிவாஜி!
ஹாலிவுட் சிவாஜி!
ஹாலிவுட் சிவாஜி!
ஹாலிவுட் சிவாஜி!

ஹாலிவுட் இதுவரை எத்தனையோ நடிகர்களைக் கண்டிருக்கிறது. பல நடிகர் களை அது தன் பணத்தால் அடக்கியிருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் தலைசிறந்த திரைப்பட நடிகராகக் கருதப்படும் மார்லன் பிராண்டோவை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டு வர அதனால் முடியவில்லை.

மார்லன் பிராண்டோவிடம் ஹாலி வுட் தோற்றதற்குக் காரணம் பிராண்டோ ஒரு பிறவி நடிகர் மட்டுமல்ல; உணர்ச்சி களைக் கொந்தளிக்க வைத்துத் திடீர் திடீரெனக் கொட்டுவதில் அவர் ஓர் எரிமலையைப் போன்றவரும் கூட! அற்பக் காரணங்களுக்காக 'செட்'டை விட்டே ஓடிப்போய் எங்காவது பதுங்கிக் கொள்வது, வசனகர்த்தா, பட நெறியாளர் ஆகியவர்களுடன் அடிக்கடி தகராறுகளை விளைவிப்பது, ஒரு படத்தின் தயாரிப்பை எவ்வளவு தாமதப்படுத்த வேண்டுமோ அவ்வ ளவு தாமதப்படுத்துவது போன்றவை எல்லாம் பிராண்டோவிற்கு சர்வ சாதாரணமான விஷயங்கள்.

இத்தகைய விசித்திர குணங்களைக் கொண்ட பிராண்டோ 1924-ம் ஆண்டு, ஏப்ரல் 3-ம் நாள் நெப்ராஸ்கா நகரில் பிறந்தவர். அவரது தந்தையின் பெயரும் மார்லன் பிராண்டோதான். சிகாகோ நகரில் உரம் தயாரித்து விற்கும் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பல ஆண்டுகள் தலைவராக இருந்த வர். பிராண்டோவின் அன்னையான டோரதி பென்னி பேக்கர்தான் இளம் பிராண்டோவை நாடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அன்னையின் அரவணைப்பில் பய மின்றி வளர்ந்த பிராண்டோ, இளம் வயதில் தனது குறும்புத்தனமான விளையாட்டுகளால் நகரையே அலற வைத்தார். பிராண்டோவின் குறும்பு களைப் பொறுக்கமுடியாத அவரின் தந்தை, பிராண்டோவை ராணுவப் பள்ளியில் சேர்த்தார். அப்பள்ளிக் கூடத்தில் உள்ள கடுமையான விதிகள் - ஒரு வகையில் அடிமைத்தனமான வாழ்க்கை நெறிகள் - சுதந்திரப் பிறவி யான பிராண்டோவிற்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

1943-ம் ஆண்டில், ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், நியூயார்க் நகருக்குப் பயணமானார் பிராண்டோ. ஒரு நடிகனாக மாற வேண்டும் என்ற எண்ணம் பிராண்டோவிற்கு அடிக் கடி அலைமோதியபோதிலும், ஓர் ஆண்டுக்காலம் காரோட்டியாகவும், 'லிப்ட்' இயக்குபவராகவும் பணியாற்றி னார்.

பின்னர், நியூயார்க்கில் உள்ள ஒரு நாடக மன்றத்தில் சேர்ந்தார். தனக்குத் தெரிந்த முறையில், யாருடைய அடிச் சுவட்டையும் பின்பற்றாமல் நடிக்கத் தொடங்கினார். அவரது நடிப்பு சக நடிகர்களுக்கு ஆச்சர்யத்தை விளைவித்தது. பிராண்டோவிற்கு நடிப்புக் கலையைச் சொல்லித் தந்த ஆசிரியரான திருமதி ஸ்டெல்லா அட்ல ருக்கு மட்டும் 'பிராண்டோ ஒரு பிறவி நடிகன்; இருப தாம் நூற்றாண்டின் இணை யற்ற நடிகன் ஒருவனை உருவாக்கும் பேறு தனக்குக் கிடைத்துள்ளது' என்று புரிந் தது.

ஹாலிவுட் சிவாஜி!

இளம் பிராண்டோவின்நடிப்புத் திறமையைப் பற்றித் தனது கணவரான ஹெரால்ட் கிளர்மனுக்குப் பலமாகச் சிபாரிசு செய்தார் ஸ்டெல்லா. அதன் பலனாக அவரது தயாரிப்பான 'டிரக் லைன் கபே' என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு, பிராண்டோவிற்குக் கிட்டியது. பிராண்டோவின் முதல் நாடகம் வெற்றிகரமாக அமையாவிட்டாலும் நாடக விமர்சகர்கள் பலருக்குப் பிராண்டோவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.

பிராண்டோவின் நடிப்பைப் பற்றிக் கேள்வியுற்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற நாடக நெறியாளரான எலியா கஸான், பிரபல நாடக மேதை டென்னஸி வில்லியம்ஸைச் சந்திக்குமாறு சொல்லி, பிராண்டோவை அனுப்பினார்.

அச்சமயம் டென்னஸி வில்லியம்ஸ் 'எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர்' என்ற நாடகத்தை எழுதி முடித்திருந்தார். அவர் அந்த நாடகத்தில் முக்கியப் பாத்திரமான 'ஸ்டான்லி கோவால்ஸ்கி'யாக நடிக்க ஒரு புதுமுகத்தைப் பல மாதங்களாகத் தேடிக் கொண்டிருந்தார். கவிஞனைப் போன்ற முகத்தையும், ராணுவ வீரனைப் போன்ற உடற்கட்டையும் கொண்ட பிராண்டோவைக் கண்டதுமே, கோவால்ஸ்கியாக நடிக்கப் பிறந்தவர் பிராண்டோதான் என முடிவு கட்டிவிட்டார் வில்லியம்ஸ்.

பிராட்வே கலை அரங்கத்தில் வில்லியம்ஸின் 'டிசையர்' எலியா கஸானால் நெறியாக்கப்பட்டு, கோவால்ஸ்கியாகப் பிராண்டோ நடிக்க, அமெரிக்க நாடக மேடையின் வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியே ஏற்பட்டது.

பிராண்டோவின் நடிப்பைக் கண்டு களித்த லட்சக்கணக்கான அமெரிக்கர்களில் ஸ்டான்லி கிராமர் என்ற புகழ் பெற்ற திரைப்பட நெறியாளரும் ஒருவர். தான் எடுக்கவிருக்கும் 'மனிதர்கள்' (The Men) என்ற திரைப் படத்தில் நடிக்குமாறு பிராண்டோ விற்கு அழைப்பு விடுத்ததோடு மட்டு மின்றி, படத்தின் கதைச்சுருக்கத்தை யும் அனுப்பி வைத்தார். பக்கவாத நோயால் நடக்கும் சக்தியை இழந்து, அதனால் ராணுவத்திலிருந்து விலக்கப் பட்ட ஒரு போர் வீரனின் சோகக் கதையான 'மனிதர்கள்' பிராண்டோ வைக் கவர்ந்தது. பிராண்டோ, திரை யுலகின் தலைநகரான ஹாலிவுட்டிற் குப் பயணமானார்.

வான் நைஸ் (Van Nyes) நகரிலுள்ள டிர்மிங்காம் மருத்துவமனையில் தன்னை ஒரு பக்கவாத நோயாளியாகப் பதிவு செய்துகொண்டு, ஒரு மாதம் தங்கி, அங்குள்ள நோயாளிகளை ஊன்றிக் கவனித்தார் பிராண்டோ. அவர்களின் நடை, உடை, பாவனை களை மனத்தில் கொண்டு, தனது முதல் திரைப்படத்தில் நடித்தார். 'மனிதர்களி'ன் மாபெரும் வெற்றிக்குப் பிராண்டோவின் சிறப்பான நடிப்பு ஒன்றுதான் காரணமாக அமைந்தது. எனினும், பிராண்டோவிற்கு அப் படத்தில் நடித்ததற்காக மூன்றரை லட்சம் ரூபாய்களே சன்மானமாகக் கிடைத்தது.

அதன்பின், 'வைவா ஜாபட்டா', 'ஜூலியஸ் சீஸர்', 'டெஸிரி' போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் பிராண்டோ. எலியா கஸானின், துறைமுகத் தொழிலாளி ஒருவனைப் பற்றிய, 'ஆன் தி வாட்டர் ஃபிரண்ட்' என்ற திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தை அணு அணுவாக ரசித்து நடித்து, ஆஸ் கர் பரிசு பெற்றார் பிராண்டோ.

நேபாளத்தைச் சேர்ந்த அன்னா காஷ்பி என்ற மங்கையைக் காதலித்துத் திருமணம் செய்த பிராண்டோ, குடும்ப வாழ்க்கையில் மிகவும் திணறி னார். பிராண்டோவின் விசித்திரமான போக்குகள், எண்ணங்கள், செயல்கள் யாவும் காஷ்பிக்கு வெறுப்பைத் தந்தன.

ஹாலிவுட், இல்வாழ்க்கை, நாடக மேடை ஆகிய மூன்றுமே கசந்து விட்டது பிராண்டோவுக்கு. அது மட்டுமின்றி, அவரது தந்தையார் நடத்தி வந்த வியாபாரம் வேறு படுத்துவிட்டது. இப்போது நடிப்பைத் துறந்து, நீக்ரோக்களின் விடுதலைக் காகப் போராடப் போவதாக அறிவித் திருக்கிறார் மார்லன் பிராண்டோ.

 
ஹாலிவுட் சிவாஜி!
- அ.இராமதுரை
ஹாலிவுட் சிவாஜி!