Published:Updated:

சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?

சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?

சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?

சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?

Published:Updated:

01-04-09
விகடன் பொக்கிஷம்
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?
 
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?

தை - வசனகர்த்தா - டைரக்டரான ஏ.எஸ்.பிரகாசம், டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் திரைப்படக் கலையைப் பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி வருகிறார். அதிலிருந்து சில கருத்துக்களை அவரே இங்கே தொகுத்துத் தந்திருக்கிறார்.

நல்ல கதையின் லட்சணம்:

எல்லாச் சிறந்த கதையின் பாத்திரங்களும் ஏதாவது ஓர் ஆசையிலேயே ஏங்கி நடக்கும். அந்த ஆசையை அடைவதற்கு இடைஞ்சலாக அந்தப் பாத்திரங்கள் ஏதாவது ஓர் ஆபத்தை எதிர்கொள்ளும். அதை அந்தப் பாத்திரங்கள் எப்படித் தாண்டப் போகின்றன என்று பார்வையாளர் நெஞ்சம் ஆர்வப் படும். இப்படி, ஆசையையும் ஆபத்தையும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சொல்வதே சிறந்த திரைக்கதை.

ஆசையின் வேகம் ஒரு திரைக்கதையின் ரத்த ஓட்டம்; ஆபத்து, அதன் இதயத் துடிப்பு!

ஒரு நல்ல கதை எழுத வேண்டும். எப்படி?

'யார், எதற்காக ஆசைப்படுகிறார் கள்? அது நிறைவேற என்ன தடை?'

சிந்தித்து விடை கண்டால், ஒரு நல்ல கதை சிக்கிக் கொள்ளும்.

முடியப் போகும் கணவன், தன் மனைவியை அவளது காதலனோடு சேர்த்து வைக்க ஆசைப்படுகிறான். கணவனின் கதை முடிந்தால், அதோடு தன் கதையையும் முடித்துக் கொள்வேன் என்கிறாள் மனைவி. அதைவிடத் தியாக மனம் கொண்ட அந்தக் காதலனின் மரணம் கணவ னின் ஆசைக்குத் தடையாக முடிகி றது. நெஞ்சுருக்கும் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' கதை இது.

கதைக்கு எந்த விஷயத்தை அடிப் படையாகக் (premise) கொள்ளலாம் என்று தெரிந்து கொள்வதே திரைக் கதைச் சிந்தனையின் தொடக்கம்.

அடிப்படை விஷயம் என்பது கதையின் கருத்தோ (theme), கதைச் சுருக்கமோ (outline) அல்ல; பொது வாக கதை என்ன பொருள் பற்றிப் பேசப் போகிறது என்பதே!

குடும்ப பாரத்தில் விலை போகும் பெண், 'அரங்கேற்ற'த்தின் அடிப்படை விஷயம்; படித்த இளைஞர் படும் பாடு, 'வறுமையின் நிறம் சிவப்'பில் அடிப்படை விஷயம்.

அடிப்படை விஷயம், ஆர்வத் தைத் தூண்டும் கதை நிகழ்ச்சியாக இருக்க வேண்டுமா?

அவசியம் இல்லை. அது ஒரு சாதாரண பிரச்னையாகவும் இருக்கலாம். அதை எப்படிச் சுவையான கதையாக்குவது?

'இப்படி இருந்தால் என்ன?' என்ற கேள்வியில் கிடைக்கும் கதையை, நான்கு உரைகல்லில் உரசிப் பார்க்க வேண்டும்.

முதல் உரைகல், புதுமை (freshness). கேள்விக்குக் கிடைக்கும் பதில், அதற்கு முன் கேளாத கோணத்தில் இருந்தால் தான் ஆர்வத்தைக் கவரும்.

காதலர்களை, ''இனிமேல் நீங்கள் இருவரும் சந்திக்கக் கூடாது'' என்று அவர்களின் பெற்றோர் பிரித்துவிடு கிறார்கள் என்றால், அது புளித்துப் போனது. அதுவே, ''ஒரு வருஷம் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பிரிந் திருந்தால், நீங்கள் நிரந்தரமாகச் சேர்ந்திருக்கச் சம்மதிக்கிறோம்'' (மரோ சரித்ரா) என்றால், அது புதுமை.

இரண்டாவது கல், பொருத்தம் (relevance). புதுமையாகச் சொல்லும் ஆர்வத்தில், பொருந்தாததைச் சொல்லிவிடக்கூடாது.

விதவை மணம் தமிழ்த் திரைக் குப் புதிதல்ல. ஆனால், கணவன் தான் உயிரோடு இருக்கும்போதே, தன் மனைவியை மாற்றானுக்கு மணம் முடிக்க நினைக்கிறான். பொருந்தாத மணம் என்று பார்வை யாளர்களை முகம் சுளிக்க வைக்கா மல், கண்ணீரோடு சம்மதம் சொல்ல வைக்கிறது 'சாரதா' திரைக்கதை. காரணம், அன்பு மனைவிக்குச் சுகம் தரமுடியாத அளவுக்கு ஆண்மை இழந்துவிட்டான் நாயகன் என்ற சிந்தனை புதுமை; பொருத்தமானதும் கூட!

சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?

மூன்றாவது கல், போராட்ட உணர்ச்சியில் பங்கு (dramatic implications). திரை நிகழ்ச்சியின் தத்ரூபத்தில் பார்வை யாளர்கள் தங்களை மறந்து ஒன்றிப் போய்விட வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு முன் விட்டுப் பிரிந்த மனைவியை மீண்டும் கணவன் சந்திக்கும்போது (அந்தமான் காதலி), அது கதை என்பதை மறந்து, காண்போர் அந்தக் காதலர்களாகவே மாறி, கண்ணீர் சிந்துகிறார்கள்.

நான்காவது கல், செயல்முறைக்கு ஒத்த சிந்தனைகள் (practicality). உலகம் முழுவதுமே அழிந்து போகிறது; உயிரி னமே அற்றுப் போக, பூலோகத்தில் கதா நாயகன் மட்டும் தப்பிப் பிழைத்து, சுற்றிப் பார்க்கிறான் என்று திரைக்கதை சிந்தித்தால், செயல்படுத்த முடியுமா?

தவிர, 'இப்படி இருந்தால் என்ன?' என்ற கேள்விக்குக் கிடைக்கும் பதிலில், ஐந்து அழகுகள் இருக்கவேண்டியது அவசியம். அந்தப் 'பஞ்சசீல அழகு கள்' என்னென்ன?

1. ஒரு நடுநாயகமான பாத்திரம் (A Character). கதையின் கருத்தாகச் சொல்லப் போகிற விஷயத்தைத் தூக்கிச் சுமக்கும் ஒரு மையப் பாத்திரம் அமையவேண்டும். அதைச் சுற்றியே கதை சுழல்வது சிறப்பு.

2. ஒரு சங்கடமான நிலை (A Predicament). பாத்திரங்கள் தர்மசங்கடமான நிலையில் மாட்டித் தவிக்க வேண்டும். பார்வையாளர்கள் அதற்காகப் பச்சாதாபப்பட வேண்டும்.

3. ஒரு நம்பிக்கை (An Objective). போராடிய பாத்திரங்களுக்குக் கடைசியில் ஒரு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கைப் பாதையிலேயே கதையை நடத்திச் செல்லவேண்டும்.

சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?

4. ஓர் எதிரி (An Opponent). நடுநாயகமான பாத்திரம் எதிர்த்துப் போராட ஓர் எதிரியோ, அல்லது ஓர் எதிர்ப்போ இருக்கவேண்டும்.

5. ஓர் அழிவு (A Disaster). ஏங்கிய பாத்திரங்களின் துன்பத்திற்கோ, இன்பத்திற்கோ இறுதியில் ஓர் அழிவு இடம் பெறவேண்டும்.

சரி, இந்த யோசனைகளை வைத்துக்கொண்டு ஒரு வெற்றித் திரைக்கதையை எழுதிவிட முடியுமா?

முயன்று பாருங்கள். இவை அடிப்படை யோசனைகள்தான். மற்றபடி, உங்கள் சிந்தனைத் திறனும், கற்பனைத் திறமையுமே முக்கியம்!

 
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?
சினிமாவுக்குக் கதை எழுத ஆசையா?