பிரீமியம் ஸ்டோரி

24-06-09
விகடன் பொக்கிஷம்
பிட்ஸ்
பிட்ஸ்
 
பிட்ஸ்
பிட்ஸ்
.

பிட்ஸ்
பிட்ஸ்

அணைந்தது இளைஞர்களின் ஒளிவிளக்கு!

யிரம் ஆயிரம் இளைஞர்களின் ஒளி விளக்காகவும் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த சஞ்சய் காந்தியிடம் துடிப்பு இருந்தது; புதுமைகள் படைக்க வேண்டும் என்ற ஆவேச வேட்கை இருந்தது; ஓயாமல் உழைக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வமிருந்தது; ஏழைகளின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்ற வேகம் இருந்தது; நினைத்ததைச் செய்து முடிக்கவேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது. சோதனை மேல் சோதனைகளாக வந்த வேளையிலும், சற்றும் துவண்டுவிடாமல் நெஞ்சுறுதியோடு நின்று, தூற்றித் திரிந்தவர்களும் தன் மீது கவனம் செலுத்தும்படி தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டவர் இவர். இந்த அரிய சாதனை இவரது வருங்கால தலைமைப் பதவிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது, பேரிடியாக இயற்கை அவரது உயிரைப் பறித்துச் சென்றுவிட்டதே!

- 29.6.1980 இதழ் தலையங்கத்திலிருந்து...


பிட்ஸ்

சுறுசுறு கிரிகிரி!

"தோற்றத்தில் வயதானவர்போல் தெரிந்தாலும், இளைஞனைப்போல் சுறுசுறுப்பாக இயங்குகிறீர்களே, உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்களேன்!" என்று ரஷ்யத் தலைவர்கள், திரு.கிரியைக் கேட்க, "கடின உழைப்பு, மிதமான பேச்சு, இதுதான் இளமையின் ரகசியம்!" என்றார் கிரி.

கலப்படம் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கூறி வந்தவர் கிரி. ஜனாதிபதியாக இருந்த சமயம், கலப்படக்காரர்களைப் பற்றித் தகவல் கிடைத்ததும், சந்தடியில்லாமல் அவர்களின் இடத்திற்குச் சென்று, கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். "குடியரசுத் தலைவர் என்ற முறையில் உங்களை மிகக் கடுமையாக என்னால் தண்டிக்க முடியும். இனியும் இந்த வேலையைச் செய்தால் தொலைந் தீர்கள்!" என்று அவர்களை எச்சரித்தார்.

அயர்லாந்தில் படித்து, அந்த நாட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தாலும்கூட கிரியை ஆங்கில மோகம் ஒரு போதும் ஆட்டுவித்ததே இல்லை.


பிட்ஸ்

ராஜ்கபூருக்கு பிடிக்காதது?!

தென்றல் மட்டும் அல்ல, தெற்கே இருந்து வரும் எல்லாமே ராஜ்கபூருக்கு ரொம்பவும் பிடிக்கும். இட்லி, தோசை என்றால், கொள்ளை ஆசை.

விதிவிலக்கு - கர்னாடக சங்கீதம். ஏனோ, அது மட்டும் ராஜ்கபூருக்குப் பிடிக்காது.

அவரது ஆர்.கே.ஸ்டுடியோவை ஆர்.கே. குடும்பம் என்று கூறுவதில் பொருள் உண்டு. காரணம், அதில் பணி புரியும் அனைவரும் எப்பொழுதும் மனம்விட்டுச் சிரித்துக்கொண்டு இருக்கும் இடமாக விளங்குவதால்!

'கோபிநாத்' படத்தின் மூலம் ராஜ்கபூரை நடிகராக்கிய பெருமை மகேஷ்கவுலைச் சாரும். இந்தியாவிலேயே பெரிய டைரக்டர் என்று வெகுவாகப் புகழப்படும் இவர் மாலா சின்ஹா, காமினி கதம், ஷம்மிகபூர், ராஜேந்திர குமார் இவர்களை எல்லாம் நடிகராக்கியவரும் கூட!

ராஜ்கபூர் காலையில் குளித்துவிட்டு, டிபன் சாப்பிட்ட பிறகு வீட்டை விட்டு முதலில் செல்லும் இடம் - ஆர்.கே.ஸ்டூடியோ.

சென்றதும், தனது தனி அறையில் இருக்கும் இறைவனை வழிபட்டதும், அடுத்து அவர் செய்வது டைரக்டர் மகேஷ்கவுலின் காலைத் தொட்டுக் கும்பிடுவது. அவரும் இவர் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்வார்.

- அன்பு

பிட்ஸ்
பிட்ஸ்

 

 
பிட்ஸ்
-
பிட்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு