Published:Updated:

வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
வாங்க, பழகலாம்!
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
 
எம்.எஸ்.உதயமூர்த்தி
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

னித உறவுகளை வலிமைப் படுத்தும் இரண்டாவது குணம், மனந்திறந்து பேசுதல் \ எண்ணப் பரிமாற்றம் \ கருத்துப் பரிமாற்றம். ஒருவரையருவர் அறிந்துகொள் ளும் முயற்சி இது. பிறரை மதிக் கிறோம், மரியாதை செய்கிறோம் என்கிற உறவு நம் வாய் வார்த்தை மூலம் மட்டுமே தெரிவிக்கப்படுவது அல்ல. நமது முகம், உடலசைவுகள் எல்லாமே நம் விஷயங்களைத் தெரிவிக்கின்றன.

சமய சந்தர்ப்பங்களால் ஒருவர் உயர் பதவியிலும் மற்றொருவர் கீழ் பதவியிலும் இருக்க நேரிடுகிறது. இது உலக இயல்பு. ஆனால், அவர வர் பணியை அவரவர் சரியாகச் செய்யும்போது, நாம் எல்லோருமே சமமானவர்கள்தான். இதை உணராது நடந்து கொள்ளாதவர்கள் உலகின் சமநிலைத் தத்துவத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ இதன் விளைவுகளை அனுபவிக்கப் போகிறவர்கள் அவர்கள். நம் கருத்துக்களைத் தெரிவிப்பது, பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது இவை நம்மை உறவின் அடுத்த படிக்கு அழைத்துச் செல்கின்றன.

அலுவலகங்களில், நிர்வாகிகளுக்குச் சொல்லப்படும் முதல் பாடமே, 'சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள். பின், என்ன சொன்னீர்கள் என்பதை உங்கள் பணியாளர்களி டமிருந்து, அவர்கள் வாய் மூலம் கேட்டுச் சரி பார்த்துக் கொள்ளுங் கள்!' என்பதுதான்.

பள்ளிகளில் பாடங்களை இதற் காகத்தான் விளக்குகிறார்கள். உதாரணங்கள் கொடுக்கிறார்கள். பின்பு, பரீட்சை வைக்கிறார்கள். எதற்காக? ஆசிரியர் என்ன சொன் னார், எதை எதிர்பார்க்கிறார் என்பதைச் சரியாக மாணவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்று பார்க்கத்தான்.

உங்களுக்கேற்பட்ட சமீபத்திய மனஸ்தாபங்களை எடுத்துக் கொண்டு, அதில் எவ்வளவு தூரம் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசிக் கொள்ளாத குறை, மனஸ்தாபத்தின் காரணம் என்று அலசிப் பாருங் கள்.

மூன்றாவதாக, பிரச்னைகள் வரும்போது நாம் ஒருவருக்கொருவர் ஆதரவு தர வேண்டும். துணை நிற்க வேண்டும்.

உதவி தேவைப்படும்போது, நம் தியாக உணர்வினால் மனிதாபி மானத்தால், நட்பினால் உந்தப்பட்டு செய்கிறோமே, அதுதான் உறவு களை நிலைநிறுத்தும்; வலிமைப் படுத்தும். உதவ முடியாதபோது \ அதற்கான சக்தி நம்மிடம் இல்லாத போது குறை கூறாமலாவது இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

 
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
- இன்னும்
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு