Published:Updated:

மன்னர்கள் சந்தித்தார்கள்!

மன்னர்கள் சந்தித்தார்கள்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
மன்னர்கள் சந்தித்தார்கள்!
மன்னர்கள் சந்தித்தார்கள்!
மன்னர்கள் சந்தித்தார்கள்!
மன்னர்கள் சந்தித்தார்கள்!
மன்னர்கள் சந்தித்தார்கள்!
மன்னர்கள் சந்தித்தார்கள்!

பாலக்காடு அருகிலுள்ள நிலப்புள்ளி என்னும் ஊரில், சுப்பிரமணிய நாயர் என்பவருக்குப் பிறந்த விஸ்வநாதன், கண்ணனூர் நீலகண்ட பாகவதரிடம் கர்னாடக இசை பயின்றார். கொஞ்ச காலம் டி.எஸ்.பாலையாவின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடித்துவிட்டு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு வந்தார். கண்ணகி, மகாமாயா ஆகிய இரு படங்களிலும் சிறு வேடங்கள் ஏற்று நடித்தார். ஆனால், பட உலகத்தின் நல்ல காலமோ என்னவோ, அவரிடமிருந்த இசை ஞானத்தைக் கண்டு காலஞ் சென்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் அவரைத் தம் இசைக் குழுவில் ஹார்மோனியம் வாசிப்பவராகச் சேர்த்துக் கொண் டார்.

திருச்சியில் பிறந்தவர் ராமமூர்த்தி. தந்தை கிருஷ்ணசாமிப் பிள்ளையைக் குருவாகக் கொண்டு பிடில் பயிற்சி பெற்று, சென்னை எச்.எம்.வி. இசைத் தட்டுக் கம்பெனியிலும், பிறகு சிறிது காலம் சரஸ்வதி ஸ்டோர்ஸ் கம்பெனியிலும் பணியாற்றினார். எச்.எம்.வி-யில் பணிபுரிந்துகொண்டிருந்த சி.ஆர்.சுப்பராமனுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பிறகுதான், கோயமுத்தூருக்குப் போனார். அங்குதான் விஸ்வநாதனும் ராம மூர்த்தியும் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டனர். 'கன்னியின் காதலி' தயாராகிக்கொண்டிருந்த சமயம் அது. 'பணம்' என்னும் படத்திலிருந்து தொடர்ந்து இருவ ரும் இசையமைக்கத் தொடங்கினர்.

பாடலாசிரியர் கண்ணதாசன் தமக்கு அளித்து வரும் ஒத்துழைப்பை வெகுவாகப் புகழ்கிறார்கள் இருவரும். இசையமைக்கும்போது தேவைப்பட்டால் உடனுக்குடனே மாறுதல்கள் செய்து கொடுக்கும் அவருடைய திறமையைப் பாராட்டு கிறார்கள்.

'நெஞ்சில் ஓர் ஆலய'த்தில் வரும் 'முத்தான முத்தல்லவோ' பாட்டுக்கு இசையமைக்க 15 நிமிடங்கள்தான் ஆயிற்றாம். 'பாவ மன்னிப்பு' படத்தில் வரும் 'அத்தான்... என் அத்தான்....' சுமார் 10 நிமிடங்களில் தயாராயிற்றாம். ஆனால், 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற பாட்டுக்கு திருப்திகரமான 'ட்யூன்' அமைய ஐந்து மாதங்கள் பிடித்ததாம்!

மன்னர்கள் சந்தித்தார்கள்!

இவர்கள் 'நயா ஆத்மி', 'சண்டி ராணி' போன்ற ஹிந்திப் படங்க ளுக்கும் இசை அமைத்துள்ளனர்.

"நீங்கள் இதுவரை இசை அமைத்துள்ள பாடல்களில் உங்க ளுக்கு மிகவும் பிடித்த பாட்டு எது?' என்று கேட்டதற்கு, 'காதலிக்க நேர மில்லை' படத்தில் வரும் 'நாளாம் நாளாம், திருநாளாம்' என்ற பாட்டு தான் என்றார் விஸ்வநாதன்.

தன் மகளின் பெயரில் 'பாக்கிய லட்சுமி புரொடக்ஷன்ஸ்' என்று விஸ்வநாதன் துவக்கியுள்ள கம்பெனியில் 'கலைக்கோயில்' என்ற படம் ஸ்ரீதரின் டைரக்ஷனில் உருவாகி வருகிறது. அந்தப் படத் தில் ஒரு ஹிந்திப்பாட்டு வருவதா கவும், அதை ராஜேந்திர கிஷன் எழுதி, லதாவும் ஆஷாவும் பாடப் போவதாகவும், அதற்குத் தாங்கள் இசைமைக்கப் போவதாகவும் கூறினார் விஸ்வநாதன்.

 
மன்னர்கள் சந்தித்தார்கள்!
-
மன்னர்கள் சந்தித்தார்கள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு