Published:Updated:

சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!

சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!
சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!
சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!
 
சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!
சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!

"திடீரென்று ஒருநாள் நான் தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது சுட்டுச் சாகடிக்கப்படலாம். அது கூடிய சீக்கிரமே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். என்னைச் சுடுவது யாராயிருந்தாலும் சரி... அது ராணுவ ஜெனரல் நி வின் அனுப்பிய ஆளாகத்தான் இருக்கும்!"

- அமெரிக்க நிருபர் ஒருவரிடம் இப்படிச் சொன்ன இரண்டு வாரங்களில், ஆங் சான் சூ கியி என்கிற அந்த இரும்புப் பெண்மணி பர்மா (தற்போது மியான்மர்) ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். அவரோடு சேர்ந்து 2,000-க் கும் அதிகமான ஆதரவாளர்கள் கைதா னார்கள்.

1989-ம் வருடம் ஜூலை மாதம் 20-ம் தேதி கைதான சூ கியி இன்றுவரை வீட்டுச் சிறையில். இப்போது அவர் எப்படியிருக்கிறார், அவர் உடல்நலம் எப்படியிருக்கிறது என்ப தைக் கூட பர்மா ராணுவம் ரகசியமாக வைத் திருக்கிறது! இந்த நிலையில், 1991-ம் வருடத் துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார் சூ கியி.

சின்ன வயதிலேயே பர்மாவை விட்டுப் போய்விட்ட சூ கியி, 1988-ம் வருடம் ஏப்ரல் மாதம் திரும்பி வந்தார். வந்த தினத்திலிருந்தே ராணுவ அதிபர் நி வின்னுக்கு எதிராகக் குரல் கொடுத்து, மிக வேகமாக மக்கள் ஆதரவைத் திரட்டத் தொடங்கினார்.

ஐந்தே மாதங்களில் அசுரத்தனமான வளர்ச்சி! நி வின் பெயரைப் பொது இடத்தில் சொல்லக்கூட பயந்துகொண்டிருந்த பர்மா மக்கள் திடீரென்று சூ கியி எழுப்பிய எதிர்ப் புக் குரலைக் கண்டு முதலில் திகைத்தார்கள். பிறகு, மளமளவென்று அவருக்கு ஆதரவாகச் சேரத் தொடங்கினார்கள். சூ கியி எழுப்பிய 'பயத்திலிருந்து விடுதலை' என்ற கோஷம் வேகமாக வேலை செய்யத் தொடங்கியது.

தான் பர்மாவுக்கு வந்த ஐந்தே மாதங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு (National League for Democracy) என்று கட்சி தொடங்கிவிட்டார். படுவேகமாக உறுப்பினர் கள் சேரத் தொடங்கினார்கள். "27 வருடங்கள் நி வின் ஆண்ட ராணுவ ஆட்சியில் நாங்கள் அடிமைகளாக இருந்தது போதும். உடனே ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துங்கள்!" என்ற கோஷம் காதைக் கிழித்தது.

இந்த அபார எதிர்ப்பைக் கண்டு ராணுவத் தலைமை நடுங்கியது. "பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது. ஐந்து பேருக்கு மேல் ஒரு இடத்தில் சேர்ந்து நிற்கக் கூடாது! குறிப்பாக என்.எல்.டி கட்சித் தலைவி சூ கியி ரோட்டி லேயே நடக்கக்கூடாது! மீறி நடந் தால் சுடப்படுவார்!" என்றெல்லாம் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.

சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!

அதையும் மீறி பொதுக்கூட்டங் கள் நடத்தினார் சூ கியி. குறிப்பாக ரங்கூன் (தற்போது யாங்கோன்) நகரத்தில் நடந்த கூட்டம்... 'திமுதிமு'வென மக்கள் வெள்ளம் சேர்ந்தது. சூ கியி தனது பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாக சாரி சாரியாக ராணுவ லாரிகள் வந்து நின்றன. துப்பாக்கியுடன் வீரர்கள் 'தபதப'வென இறங்கினர். மக்களை நோக்கிச் சுடத் தயாரானார்கள். சலசலத்த கூட்டத்தைப் பார்த்து சூ கியி ஆவேசமாய்ச் சொன்னார்: "பயப்படாதீர்கள்! தைரியமாக இருப்பது எப்படி என்று நமக்கு பயிற்சியளிக்கத்தான் இவர்கள் வந்திருக்கிறார்கள். நம் வீரத்தை முதலில் இங்கே நிரூபிப்போம்!"

மந்திரம் போட்ட மாதிரி நின்றது கூட்டம். சூ கியி பேச்சைக் கேட்கத் தொடங்கியது. சூ கியி சொல்லுக்கு இருந்த சக்தியைக் கண்டு ராணுவப் படை பிரமித்தது. ஒரு குண்டு கூட சுடாமல், சும்மா நின்றுவிட்டுத் திரும்பியது.

ராணுவத்தின் தொடர்ந்த மோச மான ஆட்சியினால் பர்மாவின் பொருளாதாரம் பயங்கரமாகச் சீர்குலைந்தபோது, குறிப்பிட்ட மதிப்புள்ள பர்மா பணம் செல்லாது என்று அறிவித்துவிட்டார் நி வின். இதனால் ஏழை, பணக்காரன் என்று வித்தியாசமில்லாமல் சகலரும் பயங்கரமாய் பாதிக்கப்பட, திரண்டு நின்று போராட்டம் நடத்தினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வெறிபிடித்துச் சுட்டது ராணுவம். அப்படியும், இந்தப் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்று நி வின் உணர்ந் தார். "ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப் போகிறேன், ஜெயிக்கிற கட்சி யிடம் ஆட்சியை ஒப்படைக் கிறேன்!" என்றார்.

சூ கியி ஏமாறத் தயாராயில்லை. "நிச்சயம் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும். மக்களை ஏமாற்ற நான் அனுமதிக்க மாட்டேன்!" என்று குரல் கொடுத்தார். மக்கள் போராட்டம் வலுத்தது. ஆட்சியாளர்களுக்கு ஆத்திரம் பொங்கியது. பர்மாவின் சுவர்கள் முழுக்க அநாமதேய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் சூ கியி பற்றி மிகக் கேவலமான வார்த்தைகள்; அவரைச் சம்பந்தப்படுத்தி அசிங்கமான ஓவியங்கள்; 'சூ கியிக்கு உலகம் முழுக்க கணவர்கள்' என்றெல்லாம் கேலி செய்தன. அதை ஒட்டியது நி வின் ஆட்கள்தான் என்பது மக்களுக்கும் தெரியும். விளைவு..? சூ கியிக்கு ஆதரவு பலமடங்கு அதிக மானது.

"ராணுவத் தளபதியாக நிவின் இருந்தது போதும். அவரை முதலில் தூக்கியெறியுங்கள். ராணுவம் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். நிவின் சொல்படி நடப்பதற்கு அல்ல!" என்றார் சூ கியி.

கொதித்துப் போனார் நிவின். அந்தப் பெண்மணியையும் சரி, அவரது ஆதரவாளர்களையும் சரி... ஒருத்தரைக்கூட விட்டு வைக்காதீர்கள்!" என்று உத்தரவிட்டார்.

பர்மாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் ராணுவம் புகுந்தது. 1989-ம் வருடம் ஜூலை மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்டார் சூ கியி. 2,000-க்கும் மேற்பட்ட 'என்.எல்.டி' கட்சிப் பிரமுகர்களும் கைதானார்கள். இது தவிர தொண்டர்கள் பலர் ஆங்காங்கே சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

அன்று தொடங்கி இன்று வரை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட சூ கியி\யைப் பார்க்க அவரது உறவினர்கள், நண்பர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர் வீட்டு டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவரது கணவர்கூடப் பத்திரிகையாளர் களிடம் பேச முடியாதபடி தடை செய்யப்பட்டார். இரண்டு பிள்ளை கள் சூ கியிக்கு உண்டு. அவர்கள் வெளியில் போய் வரவும் பயங்கர கெடுபிடிகள்!

சூ கியி கைதாகி பத்து மாதங்கள் கழித்து, 1990-ம் வருடம் மே மாதம், நி வின் சொன்னபடியே பர்மாவில் தேர்தல் நடந்தது. 'சூ கியி மேல் மக்கள் வைத்திருந்த பற்றுதல் முற் றிலும் மறைந்து போயிருக்கும்' என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டது நி வின் கைப்பாவையான ராணுவத் தலைமை.

கிட்டத்தட்ட 80 சதவிகித இடங்களை சூ கியி கட்சி பிடித்துவிட்டது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் புரண்டார்கள். "கூடிய சீக்கிரமே மந்திரிசபை அமைப்போம். சிறையிலிருக்கும் தலைவியை வெளியில் கொண்டு வருவதுதான் எங்கள் முதல் வேலை!" என்று என்.எல்.டி பிரமுகர்கள் சொன்னார்கள்.

அவர்கள் தலையில் இடி விழுந் தது! 'இந்தத் தேர்தல் வெற்றி செல் லாது' என்று சொல்லித் தொடர்ந்து ஆளத் தொடங்கியது ராணுவம்.

சூ கியிக்குச் சிறைவாசம் தொடர்ந்தது.

இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சிறையிலிருந்தாலும், சூ கியி இன்னும் பர்மாவின் மக்கள் தலைவியாகவே இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட் டிருக்கும் நோபல் பரிசு, மக்கள் உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறது. பரிசு வாங்கவாவது அவர் வெளியே வர அனுமதிக்கப்படுவாரா என்ப தைத்தான் உலகமே ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டு இருக்கிறது.

சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!

தியாகியின் மகள்!

சூ கியிக்கு வயது இப்போது 45. திருமணமான பெண்கள், கணவனின் பெயரைத்தான் தங்கள் பெயருடன் சேர்த்து வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால், சூ கியி பெயருக்கு முன்னால் இருக்கும் 'ஆங் சான்' அவரது அப்பா பெயர். மிகப் பெரிய சுதந்திரப் போராட்டத் தியாகியான அவர், வெள்ளையர்களிடமிருந்து பர்மா விடுதலை அடைவதற்கு ஆறு மாதங்கள் முன்புதான் கொல்லப்பட்டார். அப்போது சூ கியிக்கு வயது இரண்டு!

டெல்லியில், லேடி ஸ்ரீராம் காலேஜில்தான் டிகிரி படித்தார் சூ கியி. அப்புறம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அமெரிக்காவின் முக்கிய அரசுப் பதவியில் இருந்தார். கொஞ்ச நாள் தன் கணவருடன் பிரிட்டனில் இருந்தார். 1988-ம் வருடம், ஏப்ரல் மாதம் \ பர்மாவிலிருந்த தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையென்று திரும்பி வந்தபோதுதான், அங்கேயே செட்டில் ஆகி, மிகப் பெரிய மக்கள் தலைவியாகி... இப்போது நோபல் பரிசும் வாங்கியிருக்கிறார்!

 

 
சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!
-மௌர்யா
சிறைப் புறாவுக்கு நோபல் பரிசு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு