Published:Updated:

எங்கும் புகை... எதிலும் புகை..!

எங்கும் புகை... எதிலும் புகை..!


17-06-09
எங்கும் புகை... எதிலும் புகை..!
எங்கும் புகை... எதிலும் புகை..!
எங்கும் புகை... எதிலும் புகை..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
மகரம்
எங்கும் புகை... எதிலும் புகை..!
எங்கும் புகை... எதிலும் புகை..!
எங்கும் புகை... எதிலும் புகை..!

மது சென்னை ராஜ்யத்து சட்டசபை அங்கத்தினர்கள் சமீபத் தில் ஒரு பிரச்னையைப் பற்றி மிகவும் தீவிரமாக விவாதித்தார்கள். அந்தப் பிரச்னை உணவுப் பிரச்னை யல்ல; கொரியா யுத்தம், காஷ்மீர் விவகாரம், அணுகுண்டு போன்ற அற்ப விஷயங்களைப் பற்றியதும் அல்ல. சினிமா தியேட்டர்களில் புகை பிடிப்பதைத் தடை செய்யும் சட்டத்தைப் பற்றித்தான் அவர்கள் காரசாரமாக விவாதம் நடத்தி னார்கள். சினிமாக் கொட்டகை களில் புகை பிடிப்பதால் பொது ஜனங்களுடைய ஆரோக்கியம் பறிபோகிறது என்றார் ஒருவர்; புகை பிடிப்பதைத் தடை செய்தால் புகை பிடிப்போரின் சுதந்திரம் பறி போகும் என்றார் மற்றொருவர்.

சட்டசபை அங்கத்தினர்களின் விவாத விவரம் நமக்கு அவசியம் இல்லை. அவர்களுடைய விவாதத் தின் விஷயமான புகைதான் இந்தக் கட்டுரைக்கு விஷயமானபடியால், நாம் விவாதத்தை அப்படியே விட்டுவிட்டுப் புகையைப் பிடித்துக் கொள்வோமாக!

எங்கும் புகை... எதிலும் புகை..!

ஒளிக்கு நிழல் எப்படியோ, ஞானத்துக்கு அஞ்ஞானம் எப்படியோ, அப்படி அக்கினிக்குப் புகை என்று சொல்லுவார்கள் விஷயம் அறிந்தவர்கள். எங்கே சந்தேகம் தொனிக்கிறதோ, அங்கு அறிவு சுடர்விடுகிறது என்று பொருள். எங்கு நிழலாடுகிறதோ அங்கு ஒளியும் அருகில் இருக்கிறது என்பது அர்த்தம். ''யாண்டு யாண்டு புகை உண்டோ ஆண்டு ஆண்டு நெருப்பும் இருக்கிறது'' என்பர் தர்க்க சாஸ்திரிகள். ஆம்! நெருப்பு இல்லாமல் புகை வராது; ஆதாரமான விஷயம் அணுவளவும் இல்லாமல் அவதூறோ வதந்தியோ வராது!

திருமண நாளன்று, கல்யாண மாப்பிள்ளை மணவறையில் கண் களில் கண்ணீர் தளும்ப உட்கார்ந் திருப்பதைக் காணலாம். அவன் பக்கத்தில் அழகின் திரளாகவும், அன்பின் கோயிலாகவும் அமர்ந் திருக்கும் அந்த அணங்கை அவனுக் குப் பிடிக்கவில்லை என்பது அதன் பொருள் அல்ல. எதிரே புகைந்து கொண்டிருக்கும் ஹோமப் புகை யைத்தான் அவனுக்குப் பிடிக்க வில்லை; நாளைக்குக் குடித்தனம் வைத்தவுடன், அதிகாலை 5 மணி யிலிருந்து ஆபீசுக்குப் புறப்படும் 9 மணி வரையில் அவனுடைய வீட்டில் சூழ்ந்துகொண்டிருக்கப் போகிற அடுப்புப் புகையைச் சமாளிக்க அவளுக்கு அளிக்கப்படு கிற பயிற்சிதான் அது என்பது அவனுக்குத் தெரியாமல் இருக்க லாம்!

இவ்விதம் புகை நடுவில் பொழுது விடியும் அவனுக்கு நாள் முழுதும் புகை நடுவிலேயே காலம் போகிறது என்று சொன்னாலும் தவறில்லை. புகையப் புகைய காபி, பிறகு புகையப் புகைய பாதி வெந்த சாப்பாடு, பிறகு வயிற்றைக் குமட்டும் பெட்ரோல் புகையை சுவாசித்துக்கொண்டே பஸ்ஸில் ஆபீசுக்கு யாத்திரை, அங்கு மேலதி காரியின் கோபத்தினால் கிளம்பும் புகைச்சலையும், கீழ் அதிகாரிகளின் பொறாமைத் தீ, வயிற்றெரிச்ச லினால் விளையும் புகைச்சலையும் சுவாசிப்பது, மாலையில் கோயிலில் சுவாமி சந்நிதியில் எரியும் சாம்பி ராணிப் புகையும், இரவில் அருமை மனைவியின் கை பட்டு அதிகம் மணக்கும் ஊதுவத்திப் புகையும் தரும் சாந்தி... என்று இங்ஙனம் அவனுடைய வாழ்க்கையைப் புகையோடு புலப்படுத்தலாம்.

புகை மிகவும் நுட்பமானது; எளிதில் எங்கும் நுழையக் கூடியது. ஆனால், புகையும் நுழையாதபடி காவல் காக்கப்பட்ட கோட்டைக் கொத்தளங்களை இராவணன் பெற்றிருந்தான் என்று கம்பர் இலங்கையை வருணிக்கிறார். ஆனால், அப்படிப் புகையும் நுழை யாத வாயிலில் பகையாகிய அனுமன் நுழைந்து இலங்கைக்கு நெருப்பிட்டு அந்நகரைப் புகைப் படலத்தின் கீழ் அழுத்தியதை இலங்கை எரியூட்டு படலத்தில் நாம் படித்திருக்கிறோம். இராவண னுடைய பராக்கிரமம் இப்படிப் புகைந்து போனதற்குக் காரணம் என்ன? பிரகாசமாகத் தீட்டப்பட்ட ஓர் ஓவியம் போலிருந்த சீதையை இராமரிடமிருந்து அபகரித்து, அவள் மனத்தை நோகச் செய்து, அவளைப் 'புகையுண்ட ஓவியம்' போலச் செய்ததால் அல்லவா?

புகையுண்ட ஓவியம் எது என் பது நமக்குத் தெரியாமற் போனா லும், புகைப்படத்தை நாம் நன்கு அறிவோம். ஆனால், அதற்குப் புகைப்படம் என்று பெயர் வந்த விதம் நமக்கு விளங்குவதில்லை. அநேகமாக எல்லாப் புகைப்படத் தின் பின்னாலேயும் ஒரே கறுப் பாய்ப் புகை போல இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

அறிவின்மைக்கு எடுத்துக் காட்டு 'புகை' என்பார்கள் சிலர். அறிவுக்கு எடுத்துக்காட்டு ஜ்வாலை. சாம்பிராணியைத் தூக்கி ஜ்வாலை யில் போட்டதும், அது மங்கி, புகை கிளம்புகிறதல்லவா? அதை வைத் துக்கொண்டு, அறிவை அமுக்கி அறியாமையை எழுப்புபவர்களை 'மடசாம்பிராணி' என்றும் அழைக்கிறார்கள்!

வான சாஸ்திர வல்லுநர்கள் நமது பூமியைச் சுற்றி மேகப் படல மும் பனிப் படலமும் புகை போல் சூழ்ந்திருக்கிறது என்று சொல்கி றார்கள். அதனால்தான் போலும் கடவுளின் கருணைப் பார்வை நம் பூமியின் மீது சில சமயம் விழுவதில் லையோ என்னவோ! நம்மைச் சுற்றி நாமே திரை போட்டுக் கொண்டு, கடவுள் நம்மைக் கண் திறந்து பார்க்கவில்லை என்றால் அது அவருடைய பிழையா?

உச்சி மீது வானமிடிந்தாலும் கண் கலங்காத தேச பக்தர்களை, தியாக சீலர்களை, அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களை, கண்ணீர்ப் புகை மூலமாகக் கண்கலங்க வைக் கலாம் என்பதை எல்லா அரசாங்கங் களும் கண்டுபிடித்து வைத்திருக் கின்றன. ''விஷப் புகையைப் பிர யோகித்து எதிரிப்படை வீரர்களைக் கூண்டோடு கைலாசம் சேர்ப்பேன்'' என்று நவீன இந்திரஜித்துக்களாகிய பீல்டு மார்ஷல்களும், ஜெனரல்களும் கண்களில் தீயும், வாயில் புகையும் பறக்கக் கோபாவேசமாகக் கர்ஜிக் கிறார்கள். இதன் நடுவில் அணு குண்டு பயம் உலக மக்களை அணு அணுவாகத் தின்று வருகிறது.

நாடு பிடிக்கும் பேராசையும், அந்தப் பேராசை தூண்டும் போராசையும் பிடித்தவர்களால் நமது உலகத்துக்கு ஏற்படப் போகும் தீமைகள் வானத்துத் தூமகேதுக் களாலும் விளைவிக்க முடி யாதவை! சர்ச்சில் போன்ற யுத்த தேவதையின் ஆராதனையாளர்கள் யுத்த ராக்ஷஸனுக்குத் தூபம் போட்டு அவனைக் கிளப்ப முயற்சி செய்து வரும் வரை (அந்தத் தூபத்தின் சின்னமாகத்தான் சர்ச்சிலின் கையில் எப்போதும் புகையும் சுருட்டு இருந்து வருகிறது போலும்!) உலகத்துக்குக் கதிமோட்சம் உண்டு என்று நம்புவது நமக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.

யுத்த களத்திலும் இடுகாட்டிலும் எழும் புகையை வளர்ப்பதனால் உலகம் நாகரிகப் பாதையில் முன்னேறினதாக ஆகாது. நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் தினம் மூன்று வேளை அடுப்புப் புகைய வேண்டும். வீட்டு ஓடுகளின் வழியாகவும் புகை போக்கியின் வழியாகவும் வெளியேறும் புகையைக் கொண்டுதான் நாட்டின் சுபிட்சத்தை அளக்க முடியும்!

 
எங்கும் புகை... எதிலும் புகை..!
-
எங்கும் புகை... எதிலும் புகை..!