Published:Updated:

வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி


17-06-09
வாங்க, பழகலாம்!
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
எம்.எஸ். உதயமூர்த்தி
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

னி மனித வாழ்வில் வெற்றிக்குக் காரணமாக இருப்பவை, இரண்டு முக்கிய மான விஷயங்கள்.

ஒன்று: வேலை - உழைப்பு.

இரண்டாவது: எல்லோருடனும் சுமுகமாகப் பழகுவது.

சுமுகமாகப் பழகும் மனிதத் தன்மைகளை நான்கு வகையாகப் பிரித்திருக் கிறார்கள்.

1. பிறரது அறிமுகம் - நட்பு - உறவு. ஒருவரையருவர் நம்புதல். இந்தப் பரஸ்பர நம்பிக்கை நம் உறவுக்கு வலிமை தருகிறது.

2. நமது பேச்சு மூலமும், சம்பாஷணை மூலமும், கருத்துப் பரிமாற்றங்களின் மூலமும் நம் உறவு பலப்படுகிறது. நம் மால் எவ்வளவுக்கெவ்வளவு தெளிவாக வும் குழப்பமில்லாமலும் நம் எண்ணங் களைத் தெரிவிக்க முடிகிறதோ, அவ்வள வுக்கவ்வளவு உறவின் தன்மை அமை கிறது.

3. அடுத்த கட்டமாக, பிரச்னைகள் என்று வரும்போது, நமது பரஸ்பர ஆதரவும் துணையும், உறவுகளின் பிணைப்பை உறுதியாக்குகிறது.

4. எவ்வளவு நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தாலும் சமயத்தில் மனஸ்தாபம் தோன்றுவது இயல்பு. அவற்றை உணர்ந்து பிரச்னைகளுக்கு முடிவு காண நாம் முயல வேண்டும். பரஸ்பர நம்பிக்கைக்கும் உறவுக்கும் பாதகம் ஏற்படாதவண்ணம் நம் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள முயலவேண்டும்.

இவைதான் அடிப்படை.

எதன் காரணமாக ஒருவரை யருவர் விரும்புகிறோம்? ஏன் ஒருவரது நட்பை வளர்க்க ஆசைப் படுகிறோம்? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஒரு மனிதரைப் பார்க் கும்போது, ''இவர் உண்மையானவர். இவரை நம்பலாம்'' என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அவரது பேச்சு, தோற்றம், சொல்லின் தொனி, நிதானம், அங்க அசைவுகள் எல்லாம் நம்மிடம் ஓர் உள்ளுணர்வைத் தோற்றுவிக்கின்றன.

மனித உறவு, நம்பிக்கையில் துவங்குகிறது. போலிகள்கூட நம்மிடம் நம்பிக்கையைத் தான் உருவாக்க முயல்கிறார் கள். சாயம் போகாதென்று சத்தியம் செய்யும் புடவைக் கடைக்காரரிலிருந்து, வாக் குறுதிகளை அள்ளித் தெளிக்கும் அரசியல் தலைவர் வரை நம்மிடையே நம்பிக்கையைத் தோற்றுவிக்க முயல்கிறார் கள். ''இவன் உண்மையானவன், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவான்'' என்ற எண் ணம்தான் காதலன் முதல் மேலதிகாரி வரை நம்ப வைக் கிறது.

அந்தரங்கங்களைப் பரிமா றிக் கொள்ளும்போது பிறரு டன் நெருக்கமாகிறோம். நம் உறவு தனித்தன்மையைப் பெறுகிறது. ஆனால், எல்லா விஷயங்களிலும் நாம் எவ்வ ளவு தூரம் செல்லலாம் என்ப தற்கு ஓர் எல்லை இருக்கிறது. வள்ளுவர் கூறுகிறார், 'மரக் கிளையில் நுனிக்குப் போகிற வர்கள், அதற்கும் மேலே போக விரும்பினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்!' என்று.

ஞானிகள் கூடத் தங்கள் பூர்வாசிரமத்தைக் கூறுவ தில்லை. எனவே, பிறரது நம்பிக்கையைப் பெற நாம் நம்மைப் பற்றிய எல்லாவற் றையும் குடத்தைக் கவிழ்ப்பது போலக் கொட்டிக் கவிழ்க்க வேண்டும் என்பதல்ல.

நம்பிக்கையை ஏற்படுத்தும் கருத்துப் பரிமாற்றம் என்பதற் கும், அந்தரங்கங்களை எல் லாம் கொட்டும் மன வெளிப் பாட்டுக்கும் உள்ள வேறு பாட்டை நன்கு உணர வேண்டும்.

 
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
- இன்னும்
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி