Published:Updated:

நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா

நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா


17-06-09
"நினைத்ததை முடித்தார் நீலகண்டன்!"
நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா
நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
-'ஊர்வசி' சாரதா
நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா
நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா
நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா

ம்பாயில் 'ஷாப்பிங்'குக்காக நான் ஒரு கடைக்குச் சென்றிருந் தேன். வியாபாரம் மிகவும் பிஸியாக நடந்துகொண்டிருந்தது. நான் வாங்குவதையெல்லாம் கவனியா மல், என் மானேஜர் எதையோ கூர்ந்து பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். இரண்டு முறை அவரைக் கூப்பிட்டுப் பார்த்தேன். அவர் அசரவில்லை. அருகில் சென்று அவரைக் கூப்பிட்டு, ''அப் படி என்னதான் ரசிக்கிறீர் கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர், ''அங்கே பாருங்கள், ஒரு கணவனும் மனைவி யும் பலமாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் தெரியுமா? உங்களுக்காகத்தான்'' என்றார்.

''எனக்காகவா?'' என்றேன் புரியாமல். ''ஆமாம். நீங்கள் சாரதா தான் என்று மனைவி அடித்துப் பேசுகிறாள். 'இல்லை' என்று கணவன் பலமாக வாதம் செய் கிறார். என்ன செய்யப் போகிறீர் கள்?'' என்று என்னைக் கேட்டார். அந்தக் கணவன்-மனைவி சண்டையோ முற்றுப் பெறாமல் வளர்ந்துகொண்டிருந்தது. சண்டை பலமாகிக் கூட்டம் சேர்ந்துவிடப் போகிறதே என்று பயந்து, நானே அந்தப் பெண்ணின் கணவரிடம் சென்று, ''நான் சாரதாதான்'' என்று சொன்னேன். இந்த விஷயத்தில் அவர் தோல்வியடைந்தாலும், அதை மறந்து அந்தத் தம்பதியர் ஒன்று சேர்ந்து, பல மணி நேரம் என்னை அவர்கள் பேச்சாலேயே திணறடித்தனர்.

தெனாலியில் நாங்கள் ஒரு பிராமணத் தெருவில் 100 வருடங் களாக ஒரே வீட்டில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துகொண்டு வருகிறோம். அந்தத் தெருவில் இருப்பவர்களுக்கு சினிமாவில் நடிப்பதென்றாலே சிம்ம சொப்ப னம். அதனால் 'நான் சென்னை யைச் சுற்றிப் பார்த்து வரப் போகி றேன்' என்று சொல்லிவிட்டு, சென் னைக்குக் கிளம்பி வந்தேன். இங்கு வந்த பிறகு படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிறகு, தெனாலியில் நாங்கள் பரம்பரையாக வசித்து வந்த அந்தப் பழைய வீட்டை விலைக்கு வாங்கி, அதை இடித்துப் புதிதாக ஒரு பங்களா கட்டி, அதற்கு 'ஊர்வசி பவனம்' என்று பெயர் வைத்திருக்கிறேன்.

எனக்கு ஸ்டன்ட் படத்தில் நடித்துப் பழக்கம் கிடையாது. மலையிலெல்லாம் உருண்டு புரண்ட தில்லை. 'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் முதன் முதலாக அப்படி ஒரு காட்சியில் நடிக்கவேண்டி வந்தது. முதலில் 'டூப்' போட்டு எடுத் தார்கள். 'அப்பாடி, நமக்கு வேலையில்லை' என்று நான் சந்தோஷப்பட்டேன். ஆனால், டைரக்டர் ப.நீலகண்டன் அந்தக் காட்சிகளை மீண்டும் என்னை வைத்தே எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதாவது அந்தக் காட்சி மிகவும் ரியலிஸ்டாக இருக்க வேண்டும் என்ற முறையில் அவர் டைரக்ட் செய்தது எனக்கு மிகவும் வியப்பை அளித்தது. ஒரு ஷாட் எடுக்க ரெடியாக இருப்பார்கள். உடனே என்னை அழைக்க உதவி டைரக்டர் வருவார். அப்போது டைரக்டர், உதவி டைரக்டரைப் பார்த்து, ''அப்பா, சாரதாகிட்டே எதுவும் சொல்லாதே! அவங்க இது மாதிரி எல்லாம் கஷ்டப்பட்டது கிடையாது. அவங்க இஷ்டப்படி நடிக்கட்டும்'' என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்து, ''என்னம்மா அடுத்த ஷாட் எடுக்கலாமா?'' என்று நைஸாகக் கேட்பார். இதே போலவே அன்று பூராவும் உதவி டைரக்டர் வருவார்; டைரக்டர் மேலே சொன்னதையே திருப்பிச் சொல்வார். பிறகு என்னைப் பார்த்து, ''என்னம்மா... அடுத்த ஷாட் ஆரம்பிக்கலாமா?'' என்பார். இப்படியே அந்த ஸ்டன்ட் காட்சியை வெற்றிகரமாக எடுத்து விட்டார் டைரக்டர். அவருடைய சாதுரியத்தை என்னால் பாராட் டாமல் இருக்கமுடியவில்லை.

நவம்பர் மாதம் 25-ம் தேதி அன்று, நான் கல்கத்தா மெயிலில் சென்றுகொண்டிருந்தேன். அனக்காபள்ளி என்ற ஸ்டேஷனில் வண்டி நின்றுகொண்டிருந்தது. அங்கு இரண்டு நிமிடங்கள்தான் நிற்க வேண்டும். நான் அதில் பிரயாணம் செய்கிறேன் என்று எப்படியோ தெரிந்துவிட்டது. ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக ஆரம்பித்தது. வண்டியைக் கிளப்பவிடாமல், அபாயச் சங்கிலியைப் பிடித்திழுக்கும் அளவுக்குக் கூட்டம் பெருகி விட்டது. அவர்களுக்காக நானும் வெளியே சென்று நின்றேன். இப்படி அப்படி என்று ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி; ஒரு பக்கம் வேதனை.

எல்லோருக்கும் கேட்கும்படி யாக, ''இந்த வண்டியில் பிரயாணம் செய்பவர்கள் ஏதேதோ அவசர வேலையாகச் செல்லலாம். ஆகவே தயவுசெய்து எல்லோரும் வழி விடுங்கள்'' என்று நான் கேட்டுக் கொண்டபிறகுதான் வண்டியைப் போகவிட்டார்கள். திரும்பி வரும்போது நான் இதற்குப் பயந்து கொண்டு, விமானத்தில் சென்னை வந்துவிட்டேன்.

 
நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா
-
நினைத்ததை முடித்தார் நீலகண்டன்! -'ஊர்வசி' சாரதா