Published:Updated:

'என் பெயர் கமலா சுரையா!'

'என் பெயர் கமலா சுரையா!'


17-06-09
'என் பெயர் கமலா சுரையா!'
'என் பெயர் கமலா சுரையா!'
'என் பெயர் கமலா சுரையா!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
'என் பெயர் கமலா சுரையா!'
'என் பெயர் கமலா சுரையா!'
'என் பெயர் கமலா சுரையா!'

டிசம்பர் - 11. அன்றுதான் கேரள அரசு அறிமுகப்படுத்தியிருக் கும் மக்கள் மேம்பாட்டுத் திட்ட மான 'மானவீயம்' துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல எழுத்தாளர் கவிஞர் கமலாதாஸ் என்ற மாதவிக் குட்டி உரையாற்றியபோது சொன்னார்: ''நான் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துவிட்டேன்.''

வாழ்க்கையின் கசப்பான உண்மைகளை, தவறான நம்பிக்கைகளை திரைவிலக்கிக் காட்டியவர் கமலா தாஸ். அன்பு, நேசம், காதல், கிளர்ச்சி, மானுட உறவின் அப்பட் டமான சிதைவுகளை முனை மழுங்காமல் சிலிர்க்கச் சிலிர்க்கச் சொன்னவர். 'என் கதை' என்ற தலைப்பில் பெண் உணர்வுகளின் இன்னொரு பரிமாணத்தைப் பிட்டு வைக்க, அது கேரளத்தில் விவாதங் களுக்கும் சர்ச்சைகளுக்கும் வித்திட் டது. கமலா சர்வதேச அளவில் பிரபலமானார். அவரது எழுத்துக் களில், ஓவியங்களில், கருத்துக்களில் எல்லாம் பாலினச் சுவை தூக்கலாக இருந்ததால் எழும் எதிர்ப்புகள், சர்ச்சைகள், கண்டனங்கள் கமலா தாசுக்குச் சாதாரணமாகிப் போயின. அவரது கவிதைகளை வாசித்துவிட்டு, இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகக் கமலாதாஸைப் பரிந்துரை செய்தார் இந்திராகாந்தி.

எழுபதுகளில் திடீரென்று அரசியலில் குதித்து, திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 'நிர்வாணத்தில் பெண் களின் உடல்வாகு மிகவும் அழகா னது' என்று சொன்ன கமலாதாஸ் எண்பதுகளில் 'நிர்வாண ஓவியங் கள்' வரைந்தார். இப்போது தனது 65-வது வயதில் 'இஸ்லாம் மதத்தைத் தழுவுகிறேன்' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

கமலாதாஸைச் சந்தித்தோம். ''முன்பெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணன்தான் உங்களுக்கு எல்லாம் என்று அடிக்கடி சொல்லி வந்தீர்களே?''

''ஸ்ரீ கிருஷ்ணன்தான் அல்லா. அல்லாதான் ஸ்ரீ கிருஷ்ணன்...''

''இஸ்லாம் மதத்தில் அப்படி உங்களைக் கவர்ந்தது என்ன?''

''பர்தாதான். பர்தாவில் பெண் பாதுகாப்பாக உணர்கிறாள். பர்தா அணிவதால், அவர்களை ஆண்கள் அந்த அர்த்தத்தில் வெறித்துப் பார்ப்பதில்லை. அழகைப் பிறர் வெறித்துப் பார்ப்பதை பர்தா தடுக்கிறது.''

கமலாதாஸ் தன்னை 'சுரையா' என்று பெயரிட்டுக்கொண்டுள்ளார். கார்த்திகை நட்சத்திரத்துக்கு அரா பியப் பெயர் 'சுரையா'வாம். இஸ்லாத்தில் சேர்ந்த பிறகு அல்லா(ஹ்) குறித்து சில கவிதைகள் எழுதியிருக்கிறார் சுரையா.

'என் பெயர் கமலா சுரையா!'

''இஸ்லாம், பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சுதந்திரப் பறவையாகவே இருந்த நீங்கள், புதிய சூழலுக்கு எப்படி அனுசரித்துப் போவீர்கள்?''

''யாருக்கு வேண்டும் சுதந்திரம்? அளவு கடந்த சுதந்திரமும் ஆபத்து தான். எனக்கு இப்போதைய தேவை, பாதுகாப்புதான். அதை இஸ்லாம் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.''

கமலாதாஸின் தாய் பாலாமணி அம்மா மலையாளக் கவிஞர். முதுமையில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவர், தனது மகளின் மதமாற்றம் குறித்து அறிந்திருக்க வில்லை. எது எப்படியோ... கமலா தாஸின் மதமாற்றம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்தியப் பத்திரிகையுலகிலும் கேரளத்திலும் விவாதத்துக்குரிய விஷயமாக இருக்கும்.

 
'என் பெயர் கமலா சுரையா!'
-பிஸ்மி பரிணாமன்
'என் பெயர் கமலா சுரையா!'