Published:Updated:

ராஜ்கபூருடன் நடிக்காதே!

ராஜ்கபூருடன் நடிக்காதே!


17-06-09
"ராஜ்கபூருடன் நடிக்காதே!"
ராஜ்கபூருடன் நடிக்காதே!
ராஜ்கபூருடன் நடிக்காதே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
ராஜ்கபூருடன் நடிக்காதே!

மார்ச் 27-ம் தேதி, நான் அமெரிக்காவில் உள்ள கென்னடி ஏர்போர்ட்டில் வந்து இறங்கிவிட் டேன். என்னை அழைத்துச் செல்ல என் கணவர், மகன் பிரேம் ஆனந்த் இருவரும் வந்திருந்தார்கள். கூட அவர் இருந்தது நல்லதாகப் போயிற்று. இல்லாவிட்டால் என் மகனை எனக்கு அடையாளமே தெரிந்திருக்காது. காரணம், அவனுடைய தலை அலங்காரம் ஹிப்பி ஸ்டைலாக இருந்ததுதான்!

ராஜ்கபூருடன் நடிக்காதே!

சென்னையில் பெரிய வீட்டில் இருந்து பழகிய எனக்கு இங்கே 'அபார்ட்மென்ட்'டில் வசிப்பது புதுமையாக இருந்தது. கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது. வாடகைக்கு எடுத்துக்கொண்ட இந்தப் பகுதியில், சமையல், குளியல், தூக்கம் எல்லா வற்றுக்கும் வசதியான சிறு அறை கள் உண்டு. ஒருவிதத்தில் இது சௌகரியம். வீட்டைச் சுத்தம் செய்வது, சமையல் செய்வது, கடைக்குப் போய் வருவது எல்லாம் நான்தான். நடுவில் நாட்டியப் பயிற்சி வேறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வீடு சௌகரியமாக, சிறு அளவில் இருப்பது நல்லதுதானே?

ராஜ்கபூருடன் நடிக்காதே!

பல வருடங்களுக்கு முன்பு நான் மேல்நாட்டு ஆங்கிலப் பத்திரிகை களைப் பார்க்கும்போது, அழகான வீடுகளின் வர்ணப் படங்களைச் சுவாரசியத்தோடு கவனிப்பேன். வசதியான குளிக்கும் அறை, அலங் காரமான படிக்கும் அறை, அமைதி யும் சுத்தமும் உள்ள தூங்கும் அறை, இவற்றை வெவ்வேறு விதங் களில் அழகாகத் திட்டமிட்டுக் காட்டி இருப்பார்கள். அதைப் போல ஒரு வசதியான வீடு, ஒரு நாள் எனக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் கனவு காண்பதுண்டு. இன்று அந்தக் கனவு நிறைவேறி இருக்கிறது-அதுவும் அமெரிக்காவில்!

நியூஜெர்ஸியில் அப்படிப்பட்ட அழகிய வீடு ஒன்றை என் கணவர் வாங்கி இருக்கிறார். செப்டம்பர் 15-ம் தேதி இங்கே வந்துவிட்டோம்.

''ராஜ்கபூர் தன்னிடமிருந்த கலை நுட்பத்தைப் புரிந்துகொள்ள ஒரு முக் கியமான தூண்டுகோலாக இருந்த பெருமை பத்மினிக்கு உண்டு'' என்று பம்பாயிலிருந்து வெளியாகும் பிரபல வாரப் பத்திரிகை ஒன்று எழுதி இருந் தது.

ஆனால், இந்த அனுபவத்தின் தொடக்கம் எவ்வளவு சிக்கலாக இருந்தது! 'ஜிஸ் தேஷ்மே கங்கா பெஹ் தி ஹை' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஜ்கபூர் என்னை அழைத்த போது, அதற்கு எவ்வளவோ எதிர்ப்பு இருந்தது.

'ஜிஸ் தேஷ்மே' படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே, எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அம்மாவுக்கு நிறைய நிர்பந்தம் செய்துகொண்டிருந்தார்கள் பலரும். அதனால், இந்தப் படத் தின் அபார வெற்றியினால், இந்தி திரைப்பட உலகில் ஓர் உச்ச நிலையை அடைந்ததும், அதைத் தொடர்ந்து நான் அதிகம் நடிக்க இயலவில்லை. பல படங்களில் ராஜ்கபூருடன் நடிக்க ஒப்பந்தங்கள் வந்தபோதும் அவற்றை ஏற்க முடியவில்லை. அடுத்தாற்போல 'ஆஷிக்' படத்தில் மட்டும் நான் அவருடன் நடித்தேன். அப்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டது.

ராஜ்கபூருடன் நடிக்காதே!

ராஜ்கபூரின் தந்தை பிருத்விராஜ் கபூர் ஒவ்வோர் ஆண்டும் ராஜ் கபூரின் பிறந்த நாளன்று வந்து அவருடன் தங்குவார். ஒரு நாள் முழுவதும் அப்படி அவர் கூட இருப்பது வெகு அபூர்வம். பிறந்த நாள் பரிசாக அவர் கொடுப்பது என்ன தெரியுமா? முழுசாக ஒரு வெள்ளி ரூபாய். கேட்பவர்களிடம் ''பல லட்சம் பெறுமான என்னுடைய ஆசிகள் நிறைய இருக்கின்றனவே?'' என்று சொல்லுவார் அவர்.

 
ராஜ்கபூருடன் நடிக்காதே!
-
ராஜ்கபூருடன் நடிக்காதே!