Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


17-06-09
தலையங்கம்
ஆண்டவா, இனி ஒரு விபத்து வேண்டாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்
 
தலையங்கம்
தலையங்கம்

டந்த அக்டோபர் 12-ம் தேதி, பம்பாய் சான்ட்டா குரூஸ் விமான நிலையத்தில் நடந்த கோர விமான விபத்துச் செய்தி, பொழுது புலர்ந்த நேரத்தில் சென்னை நகரத்தைத் தாக்கி உலுக்கியது. பின்னர், விபத்தில் மாண்டவர்கள் பற்றிய சோகச் செய்திகள் மெள்ள மெள்ள வரத் தொடங்கின. அவை நெஞ்சைப் பிளக்கும் சோக காவியங்கள்; கதிகலங்க வைக்கும் கண்ணீர்க் கதைகள்.

முதல் நாள் மாலை ஆறு மணி முதல் சென்னை நகருக்குத் திரும்பத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தவர்கள் இந்த 'காரவெல்' விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்தது, விதி ஆடிக் காட்டிய கோரத் தாண்டவமாகும். மாலை ஆறு மணிக்கு பம்பாயில் இருந்து சென்னை செல்லும் 'போயிங்' விமானத்தில்தான் இவர்கள் முதலில் பயணம் செய்ய ஏறினார்கள். நடு வானத்தில் ஒரு கழுகு மோதிவிட்டதால், இன்ஜின் கோளாறு ஏற்பட்டு, போயிங் விமானம் திரும்பிக் கீழே இறங்கியது. பிறகு, டெல்லியில் இருந்து வந்த இன்னொரு 'போயிங்' விமானத்தில் பயணிகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானத்தின் இன்ஜினிலும் கோளாறு இருந்ததால், அதுவும் புறப்பட முடிய வில்லை. 'என்ன நேரமானாலும் பரவாயில்லை; ஏதாவது ஒரு விமானத்தில் எங்களை ஊருக்கு அனுப்புங்கள்' என்று சென்னைக்குப் போகத் துடித்த சில பயணிகள் வற்புறுத்தவே, அதிகாரிகள் அந்த 'காரவெல்' விமானத்தைத் தயார் செய்தனர். அது வானில் பறக்கத் தொடங்கிய உடனேயே தீப்பற்றிக்கொண்டு, சற்றைக்கெல்லாம் கீழே விழுந்து சின்னாபின்னமாயிற்று. அதிலிருந்த அத்தனை பேரும் பலியானார்கள்.

இம்மாதிரியான விமான விபத்துக்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும், சமூகத்துக்கும், அரசியலுக்கும், தொழில்துறைக்கும், கலையுலகுக்கும், விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் முதுகெலும்பு போன்று இருப்பவர் களை ஒரே நொடியில் பலிகொண்டு விடுகிறது. தலைசிறந்த விஞ்ஞானி ஹோமிபாபாவும் அரசியல் தலைவர்களான மோகன் குமாரமங்கலம், பால தண்டாயுதம் போன்றவர்களும் விமான விபத்தில் மறைந்ததை மறக்க முடியுமா?

விபத்து நடந்த பிறகு அதற்காக வருத்தம் தெரிவிப்பதும், நஷ்ட ஈடு கொடுப்பதும், விசாரணை நடத்துவதும் மட்டும் போதாது. எங்கே தவறு நடக்கிறது, பயணிகளுக்கு நிரந்தரமாகப் பாதுகாப்பு அளிப்பது எப்படி என்பதை எல்லாம் உடனடியாகப் பரிசீலித்துச் செயல்படுத்த வேண்டும். அத்துடன், பெரிய விபத்துக்கள் நடந்தால்தான் விசாரணை நடத்துவது என்பதில்லாமல், அவ்வப்போது ஏற்படும் சிறு கோளாறுகளைப் பற்றியும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.


 
தலையங்கம்
-
தலையங்கம்